25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஆரோக்கியம்

Sep 20, 2025

இதயத்திற்கு நலம் சேர்க்கும் வாழைப்பழம் .

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும்.ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். இதயம் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்காது.புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வாழைப்பழங்கள் உதவும்.அதிலிருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையானது நிக்கோடின்ஏற்படுத்தும் ஏக்கங்களை குறைக்க உதவும். உடலுக்கு தேவையான ஆற்றலை வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை அளிக்கும்.வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, செரோடோ னின் மற்றும் டோபமைன் என்ற நல்ல ரசாயனங்களை உற்பத்தி செய்ய மூளையை ஊக்கப்படுத்தும். எனவே பரபரப்பாக இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடுவது மனதை அமைதிப்படுத்தவும், கடினமான தருணங்களை நிர்வகிக்கவும்உதவிடும்.வாழைப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து உடலில் அதிக ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும்.ரத்த சோகையை எதிர்த்து போராடவும் வித்திடும். பகலில் சோர்வாக உணர்ந்தால், உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கலாம்

Sep 13, 2025

நரம்புகள் வலிமை பெற மாதுளம் பூ.

மாதுளம் பழத்தை விட மாதுளம் பூவில் அதிக அளவிலான நன்மைகள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. மாதுளம் பூவில் இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.தண்ணீரைக் கொதிக்க வைத்து பிறகு மாதுளம் பூவை நன்கு கசக்கி சாறை பிழிந்து இந்த தண்ணீரை வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து சாப்பிட தொண்டை புண் நீங்கும்.மாதுளம் பூவை அப்படியே சாப்பிட்டால் இரத்த விருத்தி அதிகமாகும். இரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம். மாதுளம் பூ, கசகசா, வேப்பம் பிசின் ஆகியவற்றை அரை ஸ்பூன் அளவு எடுத்து காலை, மாலை என இரு வேளையும் தேன் கலந்து சாப்பிட்டு  வந்தால் சிறுநீருடன் இரத்தம் கலந்து வருவது விரைவில் நிற்கும்.அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றம், வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால், மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்துவது  மிகவும் நல்லது. அருகம்புல் சாறுடன் மாதுளம் பூ சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் விரைவில் சரியாகும்.மாதுளம் பூக்களை உலர்த்தி, பின்னர் பொடியாக்கி, நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும், ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் இரு நாட்களில் இருமல் குறையும். மாதுளம் பூவை பசும்பாலில் வேக வைத்து, சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் நரம்புகள் வலிமை பெறும். குறிப்பாக நரம்புத் தளர்ச்சியினால்அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல அருமருந்து. 

Sep 12, 2025

தலைவலி, தலை பாரம் குணமாக தும்பைப் பூ.

தும்பை பூ செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது. நாள்பட்ட மார்பு சளி குறைக்க கூடியது தும்பைப்பூ. தும்பை பூவை சட்னியாக செய்து சாப்பிட்டால் மார்புச்சளி நீங்கும்.தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. எந்த விதமான விஷ பூச்சிகள், விஷ ஜந்துக்கள் கடித்தாலும் தும்பைப்பூவும், தும்பை இலையும் அதன் விஷத்தை முறித்து விடும்.தும்பைப்பூ மற்றும் தும்பை இலைகளை சம அளவு எடுத்து சுத்தம் செய்து, அம்மியில் வைத்து நசுக்கி சாறு எடுத்து, அந்தச் சாற்றில் கால் அவுன்ஸ் வடிகட்டி குடிக்க வேண்டும். அதே பூவையும், இலையையும் அரைத்து பூச்சி கடித்த இடத்தில் கனமாக பற்று போட வேண்டும். இவ்வாறு செய்தால் விஷம் முறிந்துவிடும்.தும்பைப்பூவை சுமார்50 கிராம் அளவில் சேர்த்து இரண்டு ஆழாக்கு நல்லெண்ணெய்யில் போட்டு தைலமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இநதத் தைலத்தை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் ஒற்றைத் தலைவலி, தலைபாரம், தலை நீரேற்றம், மூக்கடைப்பு ஆகியன நீங்கும்.உலர்ந்த தும்பைப் பூ50 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், ஓமம், பூண்டு, சித்தரத்தை ஆகியவை தலா10 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அனைத்தையும் நன்றாக இடித்து, கால் லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ளவும். மூக்கடைப்பு தோன்றும்போது இந்த எண்ணெய்யில் 2 துளிகள் மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும். மூக்கில் சதை வளர்ந்திருந்தாலும் மறையும்.தலைவலி, தலை பாரம் குணமாக சிறிதளவு தும்பைப் பூவைச் சேகரித்து, அதனை பசும்பால் விட்டு அரைத்து ஒரு துணியில் தடவி, அதை நெற்றிப் பொட்டின் மீது வைத்தால் தலைவலி குணமாகும். நெற்றியிலும் துணியைப் போட்டு வைத்து தலைபாரம் இறங்கும்.

Sep 11, 2025

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும் செவ்வாழை .

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் இருக்கும் .செவ்வாழைப்பழத்தில் மற்ற பழங்களை விட குறைவான கலோரி அளவு கொண்டுள்ளது. இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.  செவ்வாழைப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.  செவ்வாழைப் பழம் சருமத்தில் உள்ள குருதி சுற்று இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதில் 75% நீர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உள்ளதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது.  செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் B6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. செவ்வாழையில் இரும்புச் சத்து சுண்ணாம்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இதனை குழந்தைபேறு வேண்டும் தம்பதியினர் அனுதினமும் உண்டு வந்தால் உடலில் உயிர் அணுக்கள் போதுமான அளவில் உற்பத்தி ஆகி கருத்தரிக்கும் வாய்ப்பினை உருவாக்கும். செவ்வாழையில் அதிக அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் எ, புரதம், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.பல் வலி, பல்லசைவு போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.தினமும் செவ்வாழைப் பழம் சாப்பிடுபவர்களுக்கு அஜீரண கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள், மூல நோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும்.தலைமுடியில் உள்ள பொடுகு மற்றும் வறட்சி குறைய, செவ்வாழைப் பழத்தை தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்க்கலாம்.  

Sep 10, 2025

சிறுநீரக கற்கள் வரவிடாமல் தடுக்க…

சிறுநீரகக் கற்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான சிகிச்சை முறைகளை எடுப்பதன் மூலமும் சரியான வாழ்க்கை முறை மாற்றங்களாலும் இதனைத் தடுக்கலாம்.தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். நல்ல சுகாதாரமான தண்ணீரைப் பருக வேண்டும் .இளநீர், மோர், பார்லி நீர் போன்றவற்றை அவ்வப்போது பருகுவது, சிறுநீரகக் கற்களை வரவிடாமல் தடுக்கும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் இந்த நடவடிக்கை நன்மை பயக்கும்.உணவில் உப்பு மற்றும் காரத்தன்மையைக் குறைத்தல் சிறுநீரகக் கற்களைத் தடுப்பதற்கான முக்கிய வழி.நீரிழிவு நோயாளிகள் தங்களின் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.சிறுநீரகக் கற்கள் கொண்ட குடும்ப வரலாறு கொண்டவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதும் நல்லது.

Sep 06, 2025

கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க மணத்தக்காளி கீரை .

மணத்தக்காளி கீரை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் ஒரு ஆற்றல்மிக்க மூலிகை கீரை ஆகும்.மணத்தக்காளி கீரை கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது கல்லீரல் நோய்கள் மற்றும் பித்த புழுக்கம் போன்ற பிரச்சினைகளை குணமாக்குகிறது.மணத்தக்காளி கீரை நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், ஜீரண செயலியை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.குழந்தைகளுக்கு உணவில் சேர்த்தால், மணத்தக்காளி கீரை அவர்களின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. இது பசிக்கும் உணர்வை ஏற்படுத்தி, குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சரும குறைபாடுகளை நீக்குவதற்கும் மற்றும் பசிப்புண்கள், தீப்புண்கள் போன்றவற்றை குணமாக்குவதற்கும் மணத்தக்காளி கீரை பயனுள்ளதாக இருக்கிறது.சளி மற்றும் இருமல் போன்ற சுவாச கோளாறுகளை குணமாக்கும் தன்மை மணத்தக்காளி கீரையில் உள்ளது. மணத்தக்காளி கீரை உடலின் வீக்கம் மற்றும் வாதத்தை குறைக்க உதவுகிறது. வாதவலி, மூட்டு வலி போன்றவற்றில் இதன் பயன்படுத்துதல் சிறந்த பலனை தரும். மிதமான முறையில் மணத்தக்காளி கீரையை உணவில் சேர்ப்பது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, இது மூலிகை சீனி நோயாளிகளுக்கு கூடுதல் ஆதரவாக இருக்கிறது. மணத்தக்காளி கீரை உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது. இது சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்தது என்பதால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வயிற்றுப் பித்தம், குடல் சுரப்பு பிரச்சினைகளை குணமாக்கும் தன்மை இதில் உள்ளது. இதனால் இதயம் மற்றும் பித்த புழுக்கம் போன்ற பிரச்சினைகளும் குணமாகும்.

Aug 29, 2025

அன்னாசிப்பழம்.

தென் அமெரிக்காவைப் பூர்வீகமாக உடையது அன்னாசி. பராகுவே, பிரேசில் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. புரோமிலியேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. தமிழகத்தில், பறங்கித்தாழை, செந்தாழை, பூந்தாழம்பழம் எனவும் அழைக்கப்படுகிறது.இதை ஐரோப்பா கண்டத்தில், 15ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார் இந்தாலிய மாலுமி கிறிஸ்டோபர் கொலம்பஸ். பின், ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவிற்கு பரவியது. ஆசிய நாடுகளான தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் இதை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்கின்றன. நம் நாட்டில், கேரளா, கர்நாடகா மற்றும் வடகிழக்கு மாநில பகுதிகளில் பயிரிடப்படுகிறது.வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப காலநிலையில் செழித்து வளரும். ஒரு அன்னாசி செடி முழுமையாக வளர்ந்து பலன் தர, மூன்று ஆண்டுகள் ஆகும். நூற்றுக்கணக்கான சிறு பழங்களின் கூட்டாக உள்ளது அன்னாசிப்பழம்.இதிலுள்ள புரோமிலைன் என்சைம், செரிமானத்திற்கு உதவுகிறது.சாறு. ஜாம், சாலட், இனிப்பு, பதப்படுத்தப்ட்ட உணவாகவும் அன்னாசி பயன்படுகிறது. வைட்டமின் சி, மாங்கனீசு, நார்ச்சத்து நிறைந்தது.அன்னாசி இலையில் நார் தயாரித்து, துணி, கயிறு உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் அன்னாசியில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில், கயீன் என்ற ரகம் மிகவும் பிரபலமானது. இதன் இனிப்பு கலந்த புளிப்புச் சுவை, உலகளவில் விரும்பப்படுகிறது.

Aug 27, 2025

பேரிக்காயின் நற்பயன்கள்.

கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவு ம் உள்ள பேரிக்காய், ஆப்பிளை விடவும் சத்து நிறைந்தது. இதனை பெண்களுக்கான வரப்பிரசாதம்.பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் கோளாறுக ளை ஒழுங்குப்படுத்தக்கூடியது. 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு தினசரி தேவையான நார்ச்சத்து அளவில், 24 சதவீதம் பூர்த்தி செய்கிறது.கர்ப்பிணி பெண்கள் இந்த காயை சாப்பிட்டால், கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெறும். குழந்தை பெற்ற பெண்கள் காலை மாலை 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு  அதிகரிக்கும்.ஹீமோகுளோபின் பிரச்சனை மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், இந்த பேரிக்காயை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் கெட்ட கொழுப்பை நீக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது. சிறுநீரகத்தில் படிந்துள்ளகற்களை வெளியேற்ற உதவுகிறது.உணவு சாப்பிடுவதற்கு முன் இந்த பழத்தை சாப்பிட்டால், உணவிலுள்ள கொழுப்பு உடலில் தங்குவது தடு க்கப்படுகிறது. 100  கிராம் பேரிக்காயில் 56கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைப்பதில் உதவுகிறது.பேரிக்காய் கிட்டத்தட்ட 84 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்தது. இதனால், உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலுக்கு ஆற்றலை தந்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இந்த பேரிக்காயில் நிறைந்துள்ளது. இரவு சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.பேரிக்காயை தோல் நீக்காமல் சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் நீங்கும். வாய்ப்புண மற்றும் வயிற்றுப்புண்களை நீக்குகிறது.உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் இந்த பேரிக்காய்க்கு உண்டு. பேரிக்காய் சாப்பிட்டால், எலும்புகள், பற்கள் உறுதியாகும். இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் டைப் 2 நீரழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது.

Aug 27, 2025

மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் நொறுக்குத்தீனியாக இருக்கிறது. மக்காச்சோளத்தை வேகவைத்து சாப்பிடுவதும் சிறந்தது. மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் செரிமானத்திற்கு உதவும்.மக்காச்சோளத்தில் உள்ள நார்ச்சத்துக் கள், செரிமான அமைப்பை சீராக இயங்கச் செய்து, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. வயிறு உப்புசத்தையும் கட்டுப்படுத்தும். குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளரவும் உதவிடும்.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மக்காச்சோளத்தில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய நோய் மற்றும் பக்கவாத அபாயத்தை தடுக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் ஆரோக் கியமான ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.கண் ஆரோக்கியத்தை காக்கும்.மக்காச் சோளத்தில் லுடீன் மற்றும் ஜியா சாந்தின் போன்ற ஆன்டி ஆக் சிடென்டுகள்   அதிகம் உள்ளன. இவை கண் புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு போன்ற கண் பிரச்சினைகளை தடுக்க வல்லவை.நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.மக்காச்சோளத்தில் உள்ள நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக வெளியிட வழிவகை செய்யும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.நச்சுக்களை வெளியேற்றும்.மக்காச்சோளத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், உடலில் உள்ள நச்சுக்களை வெளி யேற்ற ஊக்குவிக்கும். 

Aug 22, 2025

குளிர்ப் பிரதேசக் காய்கறி  காலிஃப்ளவர் .

காலிஃப்ளவர் குளிர்ப் பிரதேசக் காய்கறி. குளிர்காலத்தில் இது அதிகமாகக்  கிடைக்கிறது. இத்தாலியில் அதிகமாக விளைவிக்கப்பட்டது.காலிஃப்ளவர் முதன்முதலில்ஆசியாவில்தான்பயிரிடப்பட்டது.எண்ணற்றமருத்துவக்குணங்கள்அடங்கியதுகாலிஃப்ளவர்.இந்தப்பூக்களில்பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் ஏ, சி, மாவுச்சத்து, புரதம், சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை இருக்கின்றன. கண் பார்வைக்குத் தேவையான கேரோட்டின் சத்து, நார்ச்சத்து ஆகியவை இந்தப் பூவில் அதிகம்.இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது.இது உஷ்ணத்தைத் தணிக்கும். இதைச் சாப்பிட்டால் சளி குறையும். உடல் வறட்சியைப் போக்கும். இருமல் குறையும், வாய் துர்நாற்றம் நீங்கும். உடல் இளைப்பு நீங்கும். காலிஃப்ளவர் மேனியை மினுமினுப்பாக்கும். தண்ணீரில் இந்தப் பூவை வேகவைப்பதைவிட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். அப்படி செய்தால் வைட்டமின் சி சத்து அதிகரிக்கும். மேலும், காலிஃப்ளவர் கொழுப்புச் சத்து இல்லாத காய்கறி, குறைந்த கலோரி கொடுக்கும். அதனால், இதய நோய்க்கு இதமான பூ இது. புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 30 31

AD's



More News