25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஆரோக்கியம்

Aug 20, 2025

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு "மைக்ரோ கிரீன்ஸ்" .

இலை மற்றும் தழைகளை உணவாக உட்கொள்ளும் விலங்குகள்அவற்றில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நேரடியாக பெறுகின்றன. ஆனால், மனிதர்கள் பெரும்பாலும் காய்கறிகளை சமைத்து உண்பதால் பல முக்கிய சத்துக்கள் வீணாகி விடுகின்றன.இதை தவிர்க்க, பல நாடுகளில் செடிகளின் இளந்தளிர்களை'சாலட்' ஆக உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. சிறப்பாக தேர்ந்தெடுத்த காய்கறிகள் மற்றும் தானியங்களை சிறிய தட்டுகளில் வளர்த்து, அவை முளை விடும் பருவத்தில் சேகரித்து உணவாக பயன்படுத்துகின்றனர். இதையே ‘மைக்ரோ கிரீன்’ என அழைக்கின்றனர். இந்த முறையில் வளர்க்கப்படும் தாவரங்கள் எந்த ரசாயன பூச்சிமருந்துகளும் இல்லாமல், இயற்கையாகவே வளரும். இளம் தளிர்களில் செறிந்த சுவையும், அதிக ஊட்டச்சத்துக்களும் உள்ளன. வைட்டமின்கள், தாதுக்கள், அஸ்கார்பிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது உணவாக உட்கொள்ள மிகச் சிறந்த தேர்வாகும்.மைக்ரோ கிரீன்ஸ், உடல் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி, இதய நோய், வகை-2 நீரிழிவு, சில வகை புற்றுநோய் மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கையான ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மைக்ரோ கிரீன்ஸ் சிறந்த மாற்றாக இருக்கலாம்.

Aug 19, 2025

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சீரகத் தண்ணீர் .

செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சீரகத் தண்ணீரைக் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான மண்டலம் சீராக இயக்கப்பட்டு, செரிமானம் எளிதில் நடைபெறும். அதுமட்டுமல்லாமல், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்றவையும் எளிதில் குணமாகும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது.அதிக இரத்த அழுத்தத்தினால் அவதிப்படுபவர்கள், சீரக தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதால், அதிலுள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து, வெறும் வயிற்றில் இந்த நீரைக் குடித்து வர இரத்த அழுத்தம் சீராகும்.சீரகத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

Aug 18, 2025

மருத்துவ நன்மைகள் கொண்ட வேப்பம் பூ

வேப்பமரத்தின் இலை, வேர், காய், பழம், பூ மற்றும் வேர் என அனைத்து பாகங்களிலும் மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளது. அதனால்தான் வீட்டுக்கு ஒரு வேப்பமரம் முன்னோர்கள் வளர்த்தனர்.வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டது என்றாலும் வேப்பம் பூ அதில் சிறப்பு மிக்கது.வேப்ப மரத்தின் பூக்களை மென்று சாப்பிட்டால் ஏப்பம் வருவது, பசியின்மை மற்றும் வாயுத்தொல்லை சரியாகும்.வேப்பம் பூவில் துவையல் அல்லது ரசம் வைத்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி, மயக்கம் குணமாகும்.வேப்பம் பூவை தண்ணீரில் ஊறவைத்து குடித்து வர பித்தம் தெளியும்.வேப்பம் பூவில் உள்ள கசப்புத்தன்மை குடலில் உள்ள புழுக்களை அழித்து குடலை சுத்தப்படுத்தும்.சூடான நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல் பிரச்சினைகள் சரியாகும்.வேப்பம் பூவை தேனீராக செய்து குடித்து வந்தால் வயிறு பிரச்சினைகள், மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம்.

Aug 06, 2025

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடிய கடலை மிட்டாய் .

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கடலை மிட்டாய் உடலுக்கு தேவையான பலவகையான ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடியது. துரித உணவுகளை போல அல்லாமல் முழுவதும் ஆரோக்கியமானது.கடலை மிட்டாயில் நார்ச்சத்து, ப்ரோட்டீன், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளதுகடலை மிட்டாயில் உள்ள தாமிரம், துத்தநாகம் உடலின் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.கடலையில் உள்ள விட்டமின் ஈ, ஜிங்க் ஆகியவை தோல்களில் ஏற்படும் பிரச்சினைகளை போக்குகிறது.கடலை மிட்டாயில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள், பற்களை உறுதிப்படுத்துகிறது.கடலை மிட்டாயில் உள்ள செறிவான வைட்டமின் சத்துகள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கிறது.கடலை மிட்டாயில் அதிகமான புரதச்சத்து உள்ளதால் உடலுக்கு தேவையான புரதம் இதிலிருந்து கிடைக்கிறது.கடலையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.கடலை மிட்டாயில் உள்ள வைட்டமின் பி3 சத்தானது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

Jul 30, 2025

அருஞ்சுவை கொண்ட மாம்பழம்..

சீஸனின் முதல் மாம்பழத்தைக் கையிலேந்தும்போது கிடைக்கும் சந்தோஷம் அளவில்லாதது. அந்த வருடத்தின் சீஸன் முடியும்போது ஏற்படும் வருத்தமும் விவரிக்க முடியாதது வருடம்  முழுவதும் கிடைத்தால் என்னவென்று ஏங்க வைக்கும் அருஞ்சுவை கொண்டது மாம்பழம்..பலருக்கும் நம் நாட்டின் தேசியப்பறவையில், தேசிய மலர் தாமரை என்பது போன்ற தகவல்கள் தெரிந்திருக்கும். மாம்பழம் நம்முடைய தேசியக்கனி என்பது எல்லோருக்கும் தெரியாது. அதேபோல் மாம்பழத்துக்காகவே ஜூலை 22ம் தேதி தேசியமாம்பழதினம் கொண்டாடப்படுகிறது என்பதும் தெரிந்திருக்கும் வாய்ப்புக் குறைவு.இந்தியாவில் நூற்றுக்கணக்கான வகை மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. மல்கோவா, கிளி மூக்கு,நடுசாலை, பங்கனப்பள்ளி, அல்போன்சா, மும்பை அல்போன்சா மாம்பழங்களுக்கும், ஐதராபாத் பங்கனப்பள்ளி மாம்பழங்களுக்கும் பெயர் பெற்றது. தமிழ்நாடு இமாம்பசந்த், மல்கோவா மற்றும் செந்தூரா மாம்பழங்களுக்குப் பெயர் பெற்றது.மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கொலாஜன் புரதத்தை உடலில் சுரக்கவும் உதவி புரிகிறது. ரத்தக் குழாய்களையும் உடலில் உள்ள இணைப்புத்திசுவையும் காக்க கொலாஜென் உதவுவதால் முதுமைத் தோற்றம் தள்ளிப்போகும். இளமை இன்னும் சிறிது காலம் நீடிக்கும்..மாம்பழம் வாங்கும்போது தோல் பளபளவென்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். பளபளவென மினுக்கும் மாம்பழம் செயற்கை முறையில் ரசாயனத்தால் கனிய வைக்கப்பட்டதாக இருக்கலாம். கருப்புப் புள்ளிகள் உள்ள பழங்கள் இயற்கையாகப் பழுத்தவை. சுவையும் அதிகமாக இருக்கும்.தேங்காயைத் தட்டிப் பார்த்து வாங்குவதுபோல, மாம்பழங்களைத் தட்டிப் பார்த்துவாங்கலாம். தட்டும்போது சத்தம் சற்று குறைந்திருந்தாலோ, சத்தம் கேட்காமல் இருந்தாலோ அழுகியது என்றோ அல்லது அதிகம் கனிந்தது என்றோகண்டுகொள்ளலாம்.மாம்பழத்தால் பாதிப்பு ஏதும் வருமோ என்ற அச்சம் இருந்தால் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவிய பிறகு பயன்படுத்தலாம். இதன்மூலம் பழத்தின் மேல் இருக்கும் ரசாயனம் மற்றும் பூச்சி மருந்து போன்றவை நீங்கிவிடும்.மாம்பழங்களைத் தோல் சீவி, வெட்டிச் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் குறையும். வயிற்றில் அசௌகரியம் உண்டாகாமலும் இருக்கும். வயிற்று வலியும் ஏற்படாது. மாம்பழத்தில் புழுக்கள் இருக்கிறதா என்றும் கண்டறியவும் இந்த முறை உதவும்.

Jul 28, 2025

இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் பாகற்காய்

 பாகற்காய் கசப்பு சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கான உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு.பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும். பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.பாகற்காய் சாப்பிட்டால் உடல் எடை குறைக்க, அழர்ச்சி நோய் சரியாக, குடல் பூச்சிகள் வெளியேற, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்ய, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.பாகற்காய் ஜூஸ் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பாகற்காயாகவோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

Jul 23, 2025

உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவும் தைராய்டு .

ஹார்மோன் குறைவாக சுரப்பதே'ஹைப்போ தைராய்டிசம்' எனப்படும். தைராய்டுஉடலின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.கழுத்தில் உள்ள பட்டாம்பூச்சி வடிவ தைராய்டு சுரப்பியில் உருவாகும். இந்த ஹார்மோன் குறைபாடு, இந்தியாவில் பத்து பேரில் ஒருவருக்கு உள்ளது. இது பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.அயோடின் கலந்த உப்பு, மீன், இறால் போன்ற கடல் உணவுகள்(ஒமேகா-3 சத்து), செலினியம் நிறைந்த கோழி, காளான், பூண்டு, பால் பொருட்கள், முட்டை, முழு தானியங்கள்(பழுப்பு அரிசி, ஓட்ஸ்), மெலிந்த புரதங்கள், காய்கறிகள், பெக்டின் நிறைந்த பெர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள், சோயா பொருட்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், குளிர்பானங்கள், காபி, மதுபானங்கள் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளை தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள சில கூறுகள் தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைப் பாதிக்கலாம்.

Jul 22, 2025

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் குங்குமப்பூ.

குங்குமப்பூ, ‘சிவப்பு தங்கம்’ என அறியப்படும், உலகிலேயே மிகுந்த மதிப்பைக் கொண்ட ஒரு மசாலாப் பொருளாகும். இது, குரோகஸ் பூக்களில் இருந்து பெறப்படுகிறது மற்றும் அதன் தனிப்பட்ட ஆரஞ்சு-சிவப்பு நிறத்தால் பிரபலமானது.குங்குமப்பூவில் இரும்பு சத்துஅதிகமாக உள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.குங்குமப்பூ, கர்ப்பிணிகளுக்கு உணவு மற்றும் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. அது, திடமான மன நிலையை ஏற்படுத்தும். குங்குமப்பூ, உடலுக்கு குளிர்ச்சி தரும் மேலும் உதடுகளின் வறட்சி மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மனஅழுத்தத்தை குறைக்கும் தன்மைகள் கொண்டது. குங்குமப்பூ, அதிமதுரம் போன்ற பொருட்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. சிறிது குங்குமப்பூவை சூடான பாலில் ஊறவைத்து குடிக்கலாம்.குங்குமப்பூவை பொடி செய்து பயன்படுத்தலாம்.குங்குமப்பூ அதிகமாக எடுத்துக் கொள்வதால் தலைச்சுழலல், வயிற்றுப் போக்கு போன்ற விளைவுகளை உண்டாக்கலாம். மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கவும்.

Jul 16, 2025

உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் நன்னாரி வேர்.

நன்னாரி வேர் ஏராளமான மருத்துவ குணங்களைகொண்டது .தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கும்.அன்றாடம் நாம் பயன்படுத்த வேண்டிய மூலிகைகளில் இது மிகவும்முக்கியமான ஒன்று.கொடி வகையைச் சேர்ந்த நன்னாரியின் வேர், சித்த, ஆயுர்வேத, மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நன்னாரி வேரை நீரில் போட்டுவைத்து, அந்த நீரை குடித்து வந்தால், உடல் வெப்பம் சமநிலைப்படும். இது குடிப்பதற்கு இதமாக இருப்பதுடன், சிறுநீர் போக்கை அதிகரித்து, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தைத் தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. கோடைக்காலம் வந்துவிட்டால் ஏற்படும் நாவறட்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக சிறந்தது. இது உடலின் உள் வெப்பத்தைத் தணித்து, உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரைக் கட்டி போட்டுவிட்டு, அந்த நீரைக் குடித்து வந்தால் உடல் நன்கு குளிர்ச்சி பெறும்.

Jul 14, 2025

கண்கள் மற்றும் பார்வையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் குடமிளகாய்.

குடமிளகாய்   உணவில் சேர்த்து கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. குடமிளகாய் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பீட்டா-கரோட்டின் மற்றும் ஆந்தியக்சிடென்ட் போன்ற சத்துக்கள் நிறைந்தது. இது நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் லூட்டின் போன்ற பியானோகெமிக்கல்கள் கண்கள் மற்றும் பார்வையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.குடமிளகாயில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால், உடலில் நீர்சத்து இல்லாமையை தவிர்க்கிறது. இதனுடன், கழிவுகளை வெளியேற்றவும் உதவும். குடமிளகாயில் காலோரிகள் குறைவாக இருப்பதால், இதை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. குடமிளகாயில் இருக்கும் ஆந்தியக்சிடென்ட்கள் மற்றும் இழை அதிகமுள்ளதால், இதை உணவில் சேர்ப்பது தாமதமாக ஜீரணமாகும், மற்றும் கோலஸ்டிரால் அளவை குறைக்கும். குடமிளகாயில் உள்ள சில வேதிப்பொருட்கள் மூட்டுவலியை குறைக்கவும், உடல் அழற்சிகளை தணிக்கவும் உதவுகின்றன.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 30 31

AD's



More News