கோடைக்காலத்தில் தாகம் இல்லாவிட்டாலும், அதிக தண்ணீர் குடிப்பது உடல்நலத்திற்கு மிகவும் அவசியமாகும். வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து தலைசுற்றல், சோர்வு மற்றும் நீரிழப்பு (Dehydration) போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ,உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுவதுடன் சருமத்தையும் ஈரப்பதமாக வைத்திருக்கும். ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்தது ,2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
.ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.அப்போது தான் உடல் வறட்சியில்லாமல் இருக்கும் அதோடு உடலில் தங்கியிருக்கும்நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அது, மட்டுமன்றி சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலில் வறட்சி ஏற்படாது. இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். இதனால், வயிற்றைச் சுற்றி கொழுப்பு படியாது..
நுங்கில் 'ஆந்த்யூசைன்’ என்னும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
'மைக்ரேன்' எனப்படும் ஒற் றைத் தலைவலியானது இளவய தினருக்கு வரும் நோய். இதன் தாக்கத்தை குறைக்க யோகா பயிற்சி செய்யலாம். விகிதாச்சார கணக்கு படி மாத்திரைகளால் வரும் பயனை விட யோகாவினால் வரும் பயன் அதிகமென்பது ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. தியானப்பயிற்சியும் பயன்தரும் ஒருமுறை. சரியான நேரத்தில் உணவும் உறக்கமும் தேவை. தினமும் ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி செய்ய லாம். தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும். அதிகமாக கவலைப்படுவதையும் மன உளைச்சலையும் தவிர்க்க வேண்டும்.பதப்படுத்தப்பட்ட பொருட் களை தவிர்க்க வேண்டும். பாட் டிலில் அடைத்து விற்கப்படும் பழபானங்கள், துரிதஉணவுகள், இறைச்சி வகைகள் நீண்ட நாட் கள் கெடாமல் இருக்கும் வகை யில் செயற்கை'ப்ரிசர்வேடிவ்' சேர்க்கப்படுவதால் இவற்றை தவிர்க்க வேண்டும். இவை ஒற் றைத் தலைவலியை அதிகரிக்கும் தன்மையுடையது. தலைவலி அதி கமாக இருந்தால் சில நாட்களுக்கு சாக்லெட், ஐஸ்கிரீமை தவிர்ப்பது நல்லது.
நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் காலிபிளவர் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியம் நிறைந்ததுமாகும். இதில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.காலிபிளவர் பச்சை, ஊதா மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இருக்கிறது. ஒரு சில இடங்களில் இந்த காயானது மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களில் இருக்கிறது. இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு வகை காலிஃப்ளவரும் அதற்கென்று தனித்துவமான பயன்களைக் கொண்டிருக்கின்றன.காலிபிளவரில் உள்ள அதிகப்படியான நார்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றன.வைட்டமின் சி மற்றும் கே நிறைந்துள்ளதால் எலும்புகள் வலுப்பெறவும் இது உதவுகிறது. செரிமான மேம்பாடு, உடல் எடை குறைப்பு, புற்றுநோய் எதிர்ப்பு உணவுகள், வைட்டமின் சி சத்து,குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட காய்கறி என்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதனை தாராளமாக உட்கொள்ளலாம். இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள'சல்பராபேன்' என்ற சத்து ரத்த அழுத்தத்தை குறைத்து இதய தமனிகளை பாதுகாக்கிறது. மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் தேவையான'கோலின்' சத்து இதில் ஏராளமாக உள்ளது.
பழங்காலத்தில் இருந்தே ரொட்டி பல்வேறு நாடுகளில் ஒரு முக்கிய உணவாக இருந்து வருகிறது. பொதுவாக ரொட்டி வகை உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கருதப்படு கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்க ளுக்கு ரொட்டி மற்றும் வாழைப்பழம் தரும் வழக்கம் இருந்தது.உலக நாடுகளில் பல்வேறு வகையான ரொட்டிகள் இருந்தாலும், சவுர்டாப் ரொட்டி சத்து நிறைந்த மற்றும் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் ரொட்டி என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது கோதுமை மாவு, தண்ணீர் கலந்து இயற்கை நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுகிறது. சிறிது புளிப்பு சுவை கொண்ட ரொட்டி வகை ஆகும். இதனால், தனித்துவமான மென்மையான ஒரு தன்மையை கொண்டுள்ளது. மேலும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்காமல், சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை மிக மெதுவாக ஏறுகிறது. இதனால், ரத்த சர்க்கரை ஏற்ற, இறக்கம் குறைவாக நீடித்து உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. குடல் நுண்ணுயிரிகளை பெருக்கி குடலில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உடலால் எளிதாக உறிஞ்ச உதவுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த ரொட்டியில் பல நன்மைகள் இருந்தாலும் வயிறு தொடர்பான பாதிப்புகள் இருந்தால், டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று குறிப்பிட்ட அளவு தினமும் உட்கொள்வது நல்லது என்று கூறுகின்றனர்.
படுக்கையில் செல்போன் பயன்படுத்துவது - உங்கள் தூக்கத்தை கெடுக்கும். காலியான வயிற்றில் காபி குடிப்பது - ஜீரணத்திற்கு விஷம் போன்றது. தினமும் மிகவும் சூடான நீரில் குளிப்பது - உங்கள் தோல உலரச் செய்கிறது. எப்போதும் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிப்பது - மைக்ரோபிளாஸ்டிக் நிறைந்திருக்கலாம். ஒரு போதும் காலில் செருப்பு இல்லாமல் நடக்காதது -தசைகள் மற்றும் உடல் நிலைப்பாட்டிற்கு (posture) பாதகம். மிகவும் குறைந்த சூரிய ஒளி -வைட்டமின் குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். அதிக சர்க்கரை - உங்கள் உடல் உறுப்புகளுக்கு மெதுவான அழிவு.
வானவில் உணவு (Eat the Rainbow) உங்கள் தட்டில் எப்போதும் பச்சை, சிவப்பு, மஞ்சள் என பல வண்ணக் காய்கறிகள் இருக்கட்டும். டிப்ஸ்: கீரைகள், கேரட், மற்றும் பழங்கள் புற்றுநோய் செல்களை எதிர்க்கும் வல்லமை கொண்டவை. 'வேண்டாம்' என்று சொல்லுங்கள்,புகையிலை மற்றும் மதுப்பழக்கம் புற்றுநோய்க்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது போன்றது. டிப்ஸ்: புகைப்பிடித்தலைத் தவிர்ப்பது உங்கள் நுரையீரலுக்கு நீங்கள் தரும் ஆகச்சிறந்த பரிசு. உடலைச் செதுக்குங்கள் (Stay Active) அதிக உடல் எடை ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் மாற்றங்களை உண்டாக்கி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.டிப்ஸ்: தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி அல்லது யோகா செய்யுங்கள். வெள்ளை அரக்கர்களைத் தவிர்க்கவும் .அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் மைதா ஆகியவற்றை உணவில் குறைத்துக் கொள்ளுங்கள்.டிப்ஸ்: பதப்படுத்தப்பட்ட உணவுகளை (Processed foods) தவிர்த்து, இயற்கையான உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். கதிர்வீச்சு பாதுகாப்பு நண்பகல் நேரக் கடும் வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும்.டிப்ஸ்: வெளியே செல்லும்போது குடை அல்லது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கும். முக்கிய குறிப்பு: 'வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை (Master Health Checkup) செய்வது, வரும்முன் காக்க உதவும் மிகச்சிறந்த வழி!"
சில காரணங்களால் சில பேர் தூக்கம் வராம தவியா தவிப்பாங்க. அந்த மாதிரி நேரங்கள்ல சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி, ராத்திரி9 மணிக்கு முன்னாடி சாப்பிட்டா பயன் கிடைக்கும். வெங்காயம் பிடிக்காது, நெய் சேர்க்கமாட்டேன்'னு சொல்றவங்க. சீரகத்தை இளவறுப்பா வறுத்துப் பொடி பண்ணி, வாழைப்பழத்தோட சேர்த்து சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்.அஜீரணத்தை போக்கும். வயிற்று வலிக்கு தீர்வு தரும். மிளகு, சீரகம் இரண்டையும் சமஅளவு சேர்த்து பொடித்து வைத்துக்கொண்டு வெருகடி அளவு தேனில்குழைத்தோ அல்லது வெந்நீருடனோ சேர்த்துவாப்பிடஅஜீரணத்தால்ஏற்பட்டகடுமையானவயிற்றுவலி,பித்த மயக்கம், அரோசகம் (உணவின் மீது வெறுப்பு) ஆகியவை போகும்.சீரகத்தை அரைத்து ஒரு கரண்டி அளவு எடுத்து எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க கர்ப்பிணிகளுக்குத்துன்பம் தரும் வாந்தி குணமாகும். ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தைப் பொடித்து ஒரு வாழைப்பழத்தோடு சேர்த்து உறங்கப் போகும் முன் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிடி) அதிகமானதால் ஏற்பட்ட வயிற்று வலிக்கு ஒரு ஸ்பூன் சீரகத்தை வாயிலிட்டு மென்று அதன்சாற்றை விழுங்க உடனே பலன் கிடைக்கும். சீரகம், இந்துப்பு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டையும் சேர்த்து மையஅரைத்து அத்துடன் சிறிது நெய்விட்டுச் சூடாக்கித் தேனீ கொட்டிய இடத்தில் பூசி வைக்க நஞ்சு இறங்கி வலி மறையும்.சீரகப் பொடியோடு கற்கண்டு தூள் சேர்த்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர குத்திருமல், வறட்டு இருமல் என வரும் எந்த இருமலும் தணியும். சீரகத்தை பொடித்து வெண்ணெயில் குழைத்துக் கொடுக்க அல்சர் வயிற்று உபாதை குணமாகும்.
பொட்டுக்கடலையில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது. கலோரிகள் மிகக் குறைவு மற்றும் இரும்புச்சத்து அதிகம். நமது பெருங்குடல் ஹைட்ரேட் செய்வதன் மூலம் மலச்சிக்கலை தடுக்கிறது. வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, சி, டி, ஈ, கே போன்ற பல முக்கிய சத்துக்கள் உள்ளன. இரத்த சர்க்கரை அளவை உறுதிபடுத்துகிறது.பொட்டுக்கடலையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து (Protein) அதிகமாகவும் உள்ளதால், இது செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் பசி கட்டுப்பட்டு, உடல் எடை குறைக்க உதவுகிறது.இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆரோக்கியமான கொழுப்பின் அளவை ஊக்குவித்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும், நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான ஆற்றலை வழங்கவும் இது உதவுகிறது.இதில் உள்ள செலினியம் டிஎன்ஏ சேதத்தைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும், கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியம் அளிக்கவும் இது உதவுகிறது.புரோட்டீன் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கும், வலுவான நகங்களுக்கும், ஆரோக்கியமான சருமத்திற்கும் இது சிறந்தது.இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு சத்துக்கள் எலும்புகள் மற்றும் நரம்புகளை வலுப்படுத்தி, மூட்டு வலியைத் தடுக்க உதவுகிறது. தினமும் ஒரு கைப்பிடி அப்படியே சாப்பிடலாம்.வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடுவது இரும்புச்சத்து மற்றும் புரோட்டீன் அளவை அதிகரிக்கும்.சாலடுகள், சாட்கள் மற்றும் சூப்களில் சேர்த்து சாப்பிடலாம்.