25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஆரோக்கியம்

Nov 04, 2025

இரும்பு சத்து அதிகம் உள்ள அகத்திக்கீரை.

அகத்திக்கீரை கசப்பு சுவையும் ,துவர்ப்பு சுவையும் கொண்டது. இதனை பொறியல் செய்தும், கூட்டு செய்தும் சாப்பிடலாம். இதன் கசப்பு சுவை தெரியாமல் இருக்க துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்புடன் தேங்காய் துருவலும் சேர்த்து சமைக்கலாம்.அகத்திக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகையை குணமாக்கும். தாய்ப்பால் நன்கு சுரக்கும்.நெஞ்சு சளி, தோல்நோய் போன்றவைகளுக்கு அகத்திக்கீரை நல்ல பலனை தரும். ஒரு டம்ளர் மோரில் ஒரு தேக்கரண்டி அகத்திக்கீரை கலந்து அதிகாலையில் குடித்து வந்தால் பித்தம் குணமாகும்.வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் அகத்திக்கீரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டுவந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.குழந்தை பிறந்ததும் உடல் பருமன் ஆகாமல் இருக்க வாரத்திற்கு இரண்டு வேளை பாலூட்டும் பெண்கள் அகத்திக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமன் ஆகாமல் இருக்கும்.அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரை எடுத்துக் கொள்வது நல்லது.அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.அகத்திக்கீரையை வெயிலில் காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சுவலி குணமாகும்.அகத்திக்கீரையுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். அகத்திக்கீரையை அரைத்து புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.சித்த மருந்துகள் எடுத்துகொள்ளும் போது அகத்திகீரை சாப்பிடக் கூடாது. பொதுவாக அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது.

Nov 03, 2025

குறைவான கலோரி உள்ள வெள்ளரிக்காய்.

காய்கறியிலேயே குறைவான கலோரி சக்தி உள்ளது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் 18 கிராம் கலோரிதான் கிடைக்கும். வெள்ளரிக்காய் குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத் தூண்டும் சுவை உடையது.நன்கு ஜீரணம் ஆகக்கூடியது. சாதாரணமாக வெள்ளிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், இதை மிக்ஸியில் அரைத்துச் சாறாக்கியும் அருந்தலாம். இளநீரைப் போன்று ஆரோக்கிய ரசமாக வெள்ளரிச் சாறு திகழ்கிறது.தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் கேரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்துக்கொள்ளவும். இந்தக் காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து ரத்தக்குழாய் இறக்கத்தைத் தளர்த்தி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மலச்சிக்கலுக்குச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப் பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றிக் குடல் எப்போதும் சுத்தமாக இருக்கும்.உங்கள் எலும்பு, முடி மற்றும் சருமத்தை வலுவாக வைத்திருப்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன.வெள்ளரிகளில் அதிக நீர்ச்சத்து உள்ளது மற்றும் வைட்டமின் சி மற்றும் கே ஆகியவை உள்ளது. இதில் எடை இழப்புக்கு உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நீங்கள் கூடுதல் கிலோவைக் குறைக்க , உங்கள் தினசரி உணவில் வெள்ளரிக்காயை  சேர்க்க வேண்டும் .இரத்த உறைவு, எலும்பு வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்த கல்சியம் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளரிக்காயின் விதைகள் மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவுகின்றன. நீரிழிவு எதிர்ப்பு நன்மைகளைக் கொண்டுள்ளன.வெள்ளரிக்காய் தோல் மற்றும் நமது கூந்தலுக்கு மிக நல்லது. வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், சருமமும் பளபளப்பாகும். வெள்ளரிக்காய் சாறு குடிப்பதால், சருமத்தில் உள்ள கறைகள் மறைந்துவிடும்.வெள்ளரிக்காய் எல்லாவகையான சத்துக்களையும் கொண்டுள்ளது. வெள்ளரிக்காயை சமைக்கக் கூடாது ஏனெனில் அதிலுள்ள பொட்டாசியம் பாஸ்பரஸ் ஆகியவை அழிந்துவிடும். பச்சையாக சாப்பிடுவது மிக நல்லது.கீல்வாதத்தை குணப்படுத்தும் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடல் உற்சாகமடைந்து சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.உடலுக்கு அற்புத நன்மைகளை தரும். வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுங்கள். கண்பார்வை, சருமம் ஆகியவை ஆரோக்கியமாக திகழும். உடல் எடையும் குறையும்.

Nov 01, 2025

ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்கத்திற்கு எலுமிச்சை உடனடி பலன் தரும் எலுமிச்சை.

மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பது நிவாரணம் அளிக்கும்.குறைந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்கத்திற்கு எலுமிச்சை உடனடி பலன் தரும்.குளவி மற்றும் தேனி கடியால் ஏற்பட்ட வலிக்கு தனி எலுமிச்சம் பழச்சாறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.எலுமிச்சம் பழச்சாறுடன் ஆலிவ் எண்ணையை சேர்த்து சாப்பிட்டால் பித்தக்கற்கள் கரையும். தினமும் புதிதாக பறிக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் "சிறுநீரக கற்களை நீக்கி சுத்தப்படுத்தும்.எலுமிச்சை ஜூஸ் பகலில் உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் அல்லது 1 மணி நேரத்திற்கு முன்பு, எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சி சாறு கலந்து அதனுடன் சிறிது கல் உப்புசேர்ந்து குடித்தால், ஜீரண மண்டலம் நன்றாக வேலை செய்யும். உணவு நன்றாகசெரிக்கும். மேலும், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல்பாதுகாப்பதனால், உடல் பருமன் பிரச்சனை நீங்கும். வயிறு செரிமானபிரச்சனைகள்வராமல் காக்கும்.

Oct 31, 2025

உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகம் உள்ள துவரம் பருப்பு .

உடல் எடை கூட ஒரு சிலர் உடலில் அதிக சதைப்பற்று இல்லாமல் மிகவும் மெலிந்த தேகம் கொண்டிருப்பர். இவர்களின் உடல்வாகு பெருக்க துவரம்பருப்பை பசு வெண்ணெய் விட்டு வதக்கி,அரிசி சாதம் சாப்பிடும் போது இந்த கலவையுடன் பசுவின் நெய்யை கலந்து சாப்பிடுவதால் மெலிந்த தேகம் கொண்டவர்கள் உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடலுக்கு வலிமை கிடைக்கும். துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே ரத்த அழுத்த பிரச்சனை தீர அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்து கொள்வது அவசியம்.உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும். துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகம் உள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.வளரும் நாடுகளில் பிறக்கும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒரு குறைபாடாக இரத்த சோகை இருக்கிறது. ரத்தத்தில் ஃபோலேட்டுகளின் குறைபாட்டினால் ரத்த சோகை ஏற்படுகிறது. துவரம் பருப்பில்  ஃபோலேட்டுகள் இருக்கின்றன. எனவே வளரும் நாடுகளில் குழந்தைகளிடம் காணப்படும் அனீமியா எனப்படும் ரத்த சோகைக்கு துவரம் பருப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி தன்மையையும் அதிகம் கொண்டுள்ளன. மேலும் அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் இரத்தகட்டிற்கு துவரம் பருப்பை அரைத்துப் போடுவதால் வீக்கம் விரைவில் குறையும்.சிறிது துவரம்பருப்பு,உளுந்து, கடலைப்பருப்பு, புளி சிவப்பு மிளகாய், சிறிது தேங்காய் கலந்து வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டு வரஉடலில் இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை கரைக்கும் சிறுநீர் தொற்றை தடுக்கும் வல்லமை துவரைக்கு உண்டு.

Oct 30, 2025

புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட பப்பாளி.

வைட்டமின்'ஏ' சத்து நிறைந்த பப்பாளிப் பழம், உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவுகிறது.மலச்சிக்கல், அமிலத்தொல்லை போன்ற வயிற்று கோளாறுகளுக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. கல்லீரல் மற்றும் கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.இரத்த விருத்திக்கு உதவுவதுடன், இரத்த சோகைக்கு நிவாரணம் அளித்து, உடலுக்கு தெம்பூட்டுகிறது.பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியைச் சீராக்க உதவுகிறது. பப்பாளியில் உள்ள'பப்பாயின்' என்சைம் இதயத்திற்கு நல்லது, மேலும் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.பச்சைப் பப்பாளி சாறு குடலிலுள்ள புழுக்களை வெளியேற்ற உதவும். உடலின் நச்சுக்களை சுத்திகரித்து, இளமையின் பொலிவைக் கூட்டும் தன்மை பப்பாளிக்கு உண்டு. ஆண்டிபயாடிக் மருந்துகள் எடுத்தவர்கள், குடலில் அழிக்கப்பட்ட நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்யப் பப்பாளி சாப்பிடலாம்.நரம்புகள் மற்றும் ஞாபக சக்தி பலப்படவும் பப்பாளி சிறந்தது. பப்பாளி இலையில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதால் உடலில் பல நன்மைகளை செய்ய கூடியது. எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செல்களை பலமாக வைக்க உதவும். ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம் இருப்பதால் உடலுக்கு வலிமை தரும். புற்று நோய் செல்களை அழித்து, இனி அவை உடலில் வராத அளவிற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். பப்பாளி இலையின் சாற்றை கொண்டு கல்லீரல், கணையம், நுரையீரல் ஆகியவற்றில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முடியும்.பப்பாளி இலை இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை சரியான அளவில் வைக்க பயன்படும். பப்பாளி இலை டெங்கு போன்ற உயிர் கொல்லி நோய்களையும் குணப்படுத்தும்.

Oct 29, 2025

நம் உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு செல்களை தூண்டி வைரஸை சுலபமாக அழிக்கும் ஏலக்காய்.

 நம்முடைய இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் ஏலக்காய் பயன்பட்டு வருகிறது.சமீபத்திய ஆய்வு ஒன்று வைரஸ்களுக்கு எதிராக நம்முடைய உடலைத் தயார் செய்யும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு என்று கூறுகிறது.ஜப்பான் நாட்டில் உள்ள ஷின்ஷு பல்கலை ஆய்வாளர்கள் வைரஸ் நோய் களுக்கு தாவரங்களில் உள்ள சேர்மங்கள் எப்படி தீர்வாக அமையும் என்பது குறித்து ஆராய்ந்து வந்தனர். அப்போது ஏலக்காயில் உள்ள 1, 8 சினியால் எனும் சேர்மம் வைரஸ்களுக்கு எதிராக உட லில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் போராடுவதற்கு உதவும் என்று கண்ட றிந்தனர். இதை நேரடியாக சோதிக்க வேண்டும் என்பதற்காக மனித நுரையீ ரலில் இருக்கும் A549 எனும் செல்களை தனியே பிரித்தனர். அதன் மீது 1, 8 சினி யாலைச் செலுத்தினர். பிறகு அதே செல் களுக்குள் வைரஸையும் செலுத்தினர்.இந்த சினியால் செல்களில் இருக்கிற நியூக்ளியர் அமிலங்களை தூண்டி விட்டது. இந்த அமிலங்கள் வைரஸின் டிஎன்ஏ, ஆர்ஏ மூலக்கூறுகளை புரிந்து கொண்டன. வெகு குறைந்த நேரத்தில் இந்த அமிலங்கள் சைட்டோகைன்ஸ் எனும் நோய் எதிர்ப்பு செல்களுக்கு சமிக்ஞை கொடுத்தன. இதனால் நம்முடைய உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்பட்டு வைரஸை சுலபமாக அழித்தன.எனவே வெளியில்இருந்து மருந்து கொடுக்காமல் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை துாண்டி வைரஸுக்கு எதிராக போராட வைக்கும் ஆற்றல் ஏலக்காயில் உள்ளது என்பது இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

Oct 27, 2025

புதினா ஒரு மருத்துவ மூலிகை.

புதினாMint(Puthina)Leaves புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலிய தொல்லைகளுக்கு வீட்டு மருந்தாக பயன்படுத்தலாம்.கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மண மூட்டுவதற்காகப் பயன் படுத்தப்படுகிறது.நல்ல வாசம் மட்டும் அல்ல,16 பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறைந்தது. இதில், ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ஸ் உள்ளது. மேலும் பாஸ்பரஸ், கால்ஷியம் உள்ளது. வைட்டமின் சி, டி, இ, ஏ போன்ற நோய் எதிர்ப்பு காரணிகளும் உள்ளன. இது செரிமானம் மற்றும் வாய் துர்நாற்றம் போக்கும். குளிர்ச்சி தன்மையை கொண்டது. புதினா. இதை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் நீங்கி விடும்.தினமும் உணவில் புதினாவை சேர்த்து கொள்வதால், கோடையில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

Oct 24, 2025

உடல் சூட்டை குறைத்து, குளிர்ச்சியை கொடுக்கும் வெந்தயக் கீரை.

.வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன.வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கொண்ட வெந்தயக் கீரை, குளுக்கோஸை கட்டுப்படுத்தும், கிளைசெமிக் நிறைந்துள்ளது. இதில் உள்ள கால்ஷியம், எலும்பு பலவீனத்தை தடுக்கிறது.இதன் குளிர்ச்சி தன்மை, உடல் சூட்டை குறைத்து, குளிர்ச்சியை கொடுக்கும்.கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால், விரைவாக குணமாகும்.வெந்தயக் கீரையை வேக வைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தால் வரும் மயக்கம் சரியாகும்.வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும்  குணப்படுத்துகின்றது.  நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண்,  வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத்  தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. 

Oct 22, 2025

கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள வெள்ளை பூசணி

வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்விதநோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால்,வெள்ளை பூசணி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.வெள்ளை பூசணியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால்,உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும்.தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. 

Oct 18, 2025

மருத்துவ பலன்கள் நிறைந்த தொட்டாற் சுருங்கி.

காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது.சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில்6 நாள்10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும்.இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையலவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல்  குளிர்ச்சியடையும், வயிற்றுப்புன்ணும் ஆறும்.ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை  கொடுக்கவும். இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும். தொட்டா சிணுங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும். இந்தஇலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது  தடவி வர ஆறும். தொட்டா சிணுங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க  சர்க்கரை நோய் குறையும்.ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை  கொடுக்கவும். இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும். தொட்டா சிணுங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும். இந்த இலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது  தடவி வர ஆறும். தொட்டா சிணுங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க  சர்க்கரை நோய் குறையும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 30 31

AD's



More News