25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஆரோக்கியம்

Mar 13, 2026

மருத்துவ குணங்கள் நிறைந்த அதலைக்காய்,

அதலைக்காய், பொதுவாகஅதிகம்விரும்பிசமைக்கப்படும்காய்அல்ல.பலர்இதைருசித்திருக்கக்கூடமாட்டார்கள்.ஆனால், சித்தமருத்துவர்களுக்கும். ஒரு சில விவசாயிகளுக்கும் மிகவும் பரிச்சயமானசொல்,அதலைக்காய். இது பாகற்காய் குடும்பத்தைச் சேர்ந்தது.மருத்துவ குணங்கள், சத்துகளின் மகுட மாகத் திகழும் அதலைக்காய், குளிர் காலத்தில் அதிகமாக விளையும்.இது சாதாரணமாக கண்மாய்க்  கரைகள், புறம்போக்கு நிலங்கள், வேலியோரங்களில் வளரும் கொடி வகையாகும்.அதலைக்காய்கள் 20-25 மி.மீ. நீளம் வரை இருக்கின்றன. காய்களின் கரும்பச்சை நிற வெளித் தோலில் எட்டு நுண்ணிய வரிகள் இருக்கும். விதைகள் நீளவாக்கில் 4.6 மி.மீ. அளவில் முட்டைவடிவில்வழுவழுப்பாகவும்பளிச்சென்றும்இருக்கின்றன.அதலைக்காயை அப்படியே சமைத்தும், வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துகிறார்கள்.சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது அதலைக்காய். இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின் சி. பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிகமாக உள்ளன.மஞ்சள் காமாலை பிரச்சினைக்கு சிறந்த மருந்தாக அதலைக்காய் கருதப்படுகிறது. குடற்புழு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்த காய் அருமருந்தாக அமையும்.சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் அருமையான ஒரு காய், இதன் மருத்துவ குணங்கள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி. சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுக்குள் வைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அதலைக்காய் நிவாரணம் அளிக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு உள்ளானவர்கள், இந்தக் காயை தினந்தோறும் அவர் களது உணவில் சேர்த்துக்கொண்டால் இந்த நோய் பாதிப்பில் இருந்து  விடுபடலாம்.குடற்புழு பிரச்சினை உள்ளவர்களுக்கு அதலைக்காய் நன்மை பயக்கும். இதில் உள்ள சத்துகள், வயிற்றுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்  முக்கியப் பங்கை வகிக்கின்றன, அதலைக்காய் வயிற்றில் காணப்படும் கிருமிகளை அழிப்பதோடு  குடற்புழு பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.ஆனால், மற்ற காய்கறிகளைப் போல அதலை காயை நீண்ட நாட்கள் வைத்துச் சமைக்க முடியாது.அதிக நாட்கள் வைத்திருந்தால் இது தானாக முளைக்க ஆரம்பித்துவிடும். இதனால்காயின்  தன்மையும், சுவையும் மாறிவிடும்.பாகற்காயை எப்படி பொரியல் அல்லது. வைத்துச் சாப்பிடுகிறோமோ, அப்படி இந்தக் காயை  சாப்பிடலாம்.காய்கறி வகைகளில் அதலைக்காய் சற்று  வித்தியாசமானதுதான். இது கசப்புத் தன்மை  கொண்டதாக இருந்தாலும் உண்பதற்கு ஏற்ற  சுவையில் இருக்கும்.எனவே அனைத்து வயதினரும் இந்த உட்கொள்ளலாம். அதலைக்காயின் மருத்துவ  குணங்கள், ஆரோக்கிய நன்மைகளுக்காகவே  அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் நல்லது. 

Mar 11, 2026

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்துவதால்...

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், அதன் முழுமையான ஆரோக்கிய நன்மைகளை அறிந்தவர்கள் குறைவுதான். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான நன்மைகள்கிடைக்கும்.வெல்லத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து, செலினியம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால்தான் சித்த மருத்துவத்திலும் வெல்லத்திற்கு முக்கிய இடம் உண்டு. வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தைச் சுத்திகரிக்கப் பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் உங்கள் சருமம் பொலிவு பெறுவதுடன், உடலும் ஆரோக்கியமாகப் பராமரிக்கப்படுகிறது.இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு வெல்லம் ஒரு சிறந்த நிவாரணியாகச் செயல்படுகிறது. மேலும், தொண்டை புண், இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக அமைகிறது. உணவு அருந்திய பிறகு வெல்லத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், வெல்லம் செரிமான நொதிகளை சீராகச் செயல்படத் தூண்டுகிறது. இதனால், நாம் உட்கொண்ட உணவு எளிதில் உடைக்கப்பட்டு, விரைவாக ஜீரணமாக உதவுகிறது.இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட வெல்லத்தை சர்க்கரைக்கு மாற்றாக தாராளமாக பயன்படுத்தலாம். இருப்பினும், சர்க்கரையோ வெல்லமோ எதுவாக இருந்தாலும், அளவோடு எடுத்துக்கொள்வதுதான் ஆரோக்கியத்திற்கு எப்போதும் நல்லது.

Mar 10, 2026

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அவரைக்காய் .

இந்திய உணவுகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறிதான் அவரைக்காய். இது சுவையானது மட்டுமல்லாமல், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. அவரைக்காயில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. இது செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. அவரைக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.  அவரைக்காயின் குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக, இது இரத்த சர்க்கரை அளவைச் சீராக பராமரிக்க உதவுகிறது.  அவரைக்காயில் உள்ள மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசியத் தாதுக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன.அவரைக்காயில் உள்ள சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளது.அவரைக்காயில் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சத்துகளும் தேவையான அளவு இருக்கிறது. பிஞ்சு அவரைக் காயைப் பத்தியத்திற்குப் பயன்படுகிறது.அவரைக்காயுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.அவரைக்காயைப் பயன்படுத்துவதினால் குடல் வலுப்பெறுகிறது. பசியைத் தூண்டுகிறது. பித்தத்தைச் சரிசெய்கிறது.நீரிழிவு நோயாளிகளுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் அவரைக்காய் மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக பிஞ்சு அவரை மிகவும் உடல் நலத்திற்கு உகந்தது.இதில் நார்ப்பொருள் அதிகமாக இருப்பதினால் மலச்சிக்கலையும் போக்குகிறது. உடல் வலிமையை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

Mar 09, 2026

நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் பெருக லவங்கப்பட்டை.

 லவங்கப்பட்டையை நன்றாகப் பொடித்து, லவங்கப் பொடி - ஒரு தேக்கரண்டி, தேன் - ஒரு தேக்கரண்டி, சுடு தண்ணீர்-இரண்டு தேக்கரண்டி சேர்த்து பிசைந்து, மூட்டு வலி உள்ள இடத்தில் பற்று போட்டால், உடனே வலி குறையும். இதை, தினமும் காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி முழுமையாக குறையும்.லவங்கப் பவுடர்,இரண்டு மேஜைக்கரண்டி எடுத்து, தேன் கலந்து, சாப்பிடுவதற்கு முன் உட்கொண்டால், கடின உணவும் ஜீரணமாகிவிடும்.சுத்தமான தேன்ஒரு மேஜைக்கரண்டி.. லவங்கப்பட்டை பவுடர்ஒரு தேக்கரண்டி கலந்து, படுக்க செல்லும் முன் முகத்தில் பூசி, காலை எழுந்தவுடன் வெந்நீரில் கழுவினால், இரண்டு வாரங்களில் முகப்பரு மறைந்து விடும்.லவங்க பவுடரை, தேனுடன் கலந்து தினமும் காலை, மாலையில் சாப்பிட்டால், உடலில் சக்தி கூடும். தலைமுடியில் தேய்த்து குளித்தால், முடி உதிர்வது நிற்கும்.சூடான தேன்- ஒரு மேஜைக்கரண்டி, லவங்க பவுடர்- நான்கு தேக்கரண்டி கலந்து, காலை,மாலை என, மூன்று நாட்களுக்குசாப்பிட்டால், சளி, இருமல் மற்றும் சைனஸ் தொல்லைகள் அகலும்.லவங்க பவுடர், தேன் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, பல் வலி உள்ள இடத்தில் தினமும் மூன்று வேளை பூசினால் வலி நீங்க விடும்.வயிற்று வலி, அல்சர், வாயு பிரச்னை ஆகியவற்றிற்கு தேன், லவங்கப்பட்டை பவுடர் உட்கொண்டால் குணம் பெறலாம்.தேனும், லவங்கப்பட்டையும், வெள்ளை ரத்த அணுக்களை பலப்படுத்தும். இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் பெருகும்.தேன், லவங்கப் பட்டை பவுடரை, ஒரு கோப்பை தண்ணீரில் கொதிக்க வைத்து, காலையில் வெறும் வயிற்றில் உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்னும், இரவில் உறங்க செல்வதற்கு முன்பும், தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையை விரைவில் குறைக்கலாம். லவங்க பவுடர்- ஒரு சிட்டிகை, தேன் அரை தேக்கரண்டி கலந்து, பல் ஈறுகளில் பூசினால், அது உமிழ்நீருடன் உட்சென்று, மலட்டு தன்மையை நீக்குவதாக கூறப்படுகிறது.

Mar 07, 2026

உடலுக்கு வலுவான ஆற்றல் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை தரும் பேரீச்சம்பழம்.

உடலுக்கு தேவைப்படும் அனைத்து வைட்டமின்கள், தாது உப்புக்கள் கிடைக்க தினமும் சில பேரீச்சம்பழங்களை உட்கொள்ள டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.பேரீச்சம்பழங்களின் தாயகம் என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தாயகமான பெர்சியா ஆகும். தொடர்ந்து ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து இன்று உலகம் முழுவதும் பரவியது. வெப்ப மண்டல பகுதிகளில், குறிப்பாக வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியாவில் அதிகம்விளைவிக்கப்படுகிறது. வறண்ட வெப்ப மண்டல மண்ணில் விளையும் பேரீச்சம்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலுக்கு வலுவான ஆற்றல் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. பேரீச்சம்பழத்தில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின்-பி6, நார்ச்சத்து போன்றவை உள்ளன. குழந்தைகளுக்கு தினமும்ஒன்றிரண்டு பேரீச்சம்பழங்கள் கொடுத்து வந்தால் சுறுசுறுப்பாகவும், நல்ல நினைவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று ஆய்வுகள்தெரிவிக்கின்றன. 

Mar 05, 2026

புற்றுநோய் வராமல் தடுக்கும் பாலக் கீரை.

பாலக் கீரை(Spinach) வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த சத்துணவு. இது புற்றுநோயைத் தடுக்கும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும், எலும்புகளைப் பலப்படுத்தும், கண் பார்வைக்கு நல்லது, மலச்சிக்கலைப் போக்கும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த சோகையைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம். இதில் உள்ள பீட்டாகரோட்டின், ஃபிளவனாய்டுகள் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுகிறது.எலும்புகளை வலுப்படுத்தவும், உடல் வலிமைக்கும் உதவுகிறது.ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலேட், வைட்டமின் K மூளை செல்களைப் பாதுகாத்து அல்சைமர் அபாயத்தைக் குறைக்கும்.இரும்புச்சத்து நிறைந்தது, இரத்த இழப்பைக் குறைத்து இரத்த சோகையைத் தடுக்கும்.வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் பார்வைக்கு நன்மை பயக்கும்.நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

Feb 26, 2026

உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் அகத்திக் கீரை.

அகத்திக் கீரை, மருத்துவக் குணங்கள் நிறைந்தது. பித்தம், தலைச்சுற்றல், மயக்கம் போன்ற பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் வல்லமை இந்தக் கீரைக்கு உண்டு. இந்தக் கீரை அதிக உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். லேசாகக் கசக்கும் ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், குடல் புழுக்களை அழிக்கவும் துணைபுரியும். இந்தக் கீரையை அளவாகச் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியத்துடன் வாழலாம். அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் பேதி ஏற்படும். புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ போன்றவை இதில் அதிகமாக இருக்கின்றன.அகத்திக்கீரையுடன்சின்னவெங்காயத்தைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் குடல் வலிமை பெறும். அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரையை வேகவைத்து சூப் செய்து குடித்தால், கல்லீரலும் இதயமும் வலுவாகும். ஜீரண சக்தியைஅதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. இதை உண்டால், உடலின் உஷ்ணம் குறையும், கண்கள் குளிர்ச்சி பெறும், மாலைக்கண் நோய் குணமாகும்.வாயுக்கோளாறு உள்ளவர்கள், அகத்திக் கீரையை அதிகமாகச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதை நன்றாக வேகவைத்துத்தான் சாப்பிட வேண்டும். கீரையின் நிறம் மாறும் அளவு சமைக்க வேண்டும். 'முருங்கை கீரை வெந்து கெட்டது, அகத்திக் கீரை வேகாமல் கெட்டது' என்பார்கள்.பொதுவாக, மாதத்துக்கு இரண்டு நாட்களுக்கு மேல் அகத்திக் கீரையை உட்கொள்ளக்கூடாது. அதோடு, கீரை உணவை இரவில் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அவை ஜீரணமாக 8 மணி நேரம் ஆகும். இரவில் உண்டால் சரியாகச் செரிக்காது.

Feb 23, 2026

வயிற்றில் வரும் "குடகுட" சத்தம் -பசி மட்டும் காரணம் அல்ல! 

பலரும் நினைப்பது போல, வயிற்றில் குடகுட சத்தம்  வந்தாலே பசி என்று அர்த்தம் இல்லை.உங்கள் வயிறு காலியாக இருக்கும்போது, குடல்கள் தங்களைத் தாங்களே சுத்தம் செய்துகொள்ளும் ஒரு இயற்கை செயல்முறை நடக்கிறது.குடல்கள் வலுவாக அசைந்துஉள்ளே இருக்கும் மீதமுள்ள காற்றுஜீரணமாகாத சிறிய கழிவுகள்இவைகளை மெதுவாக கீழே தள்ளுகின்றன.இதை எளிமையாகச் சொன்னால் உங்கள் செரிமான மண்டலத்தின் "துவைக்கும் இயந்திரம்" செய்யும் சத்தம் தான் அது!இது ஒரு நல்ல அறிகுறிகுடல்கள் சுறுசுறுப்பாக இயங்குகிறது என்பதற்கான சான்றுஉடல் தன்னைத் தானே பராமரிக்கும் புத்திசாலித்தனமான செயல்அதனால் அடுத்த முறை வயிறு குடகுடன்னு சத்தம் போட்டா,  பயப்படவேண்டாம். உங்கள் உடல் சுத்தம் செய்யும் வேலையில்தான் இருக்கிறது.ஆரோக்கியமான குடல்.

Feb 18, 2026

உணவு சாப்பிட சரியான நேரம் (ஆரோக்கியத்துக்குப் பொருத்தமான நேரங்கள்)

காலை உணவு (Breakfast)- 7.00-8.30எழுந்து1 மணி நேரத்துக்குள் சாப்பிடுவது நல்லது உடல் சக்தி அதிகரிக்கும் மதிய உணவு (Lunch)12.00-1.30ஜீரணம் நல்லபடி நடக்கும் அதிக கனமான உணவு இதே நேரத்தில் சரி. மாலை சிறு உணவு (Evening snack) -4.00-5.30 பழம்/கண்டல்/தேநீர் போன்ற லைட் உணவு. இரவு உணவு (Dinner) -7.00-8.30தூங்குவதற்கு குறைந்தது 2-3 மணி நேரம் முன்பு லைட் & எளிதில் ஜீரணமாகும் உணவு.

Feb 17, 2026

ஆரம்பநிலைச் சர்க்கரை வியாதிக்குக் கோவைக்காய் .

வைட்டமின் ஏ, கால்சியம், ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை இதில் நிறைந்துள்ளன. வயிற்றுப் புண், வாய்ப்புண், மூல நோய் வேதனை ஆகியவற்றை நீக்கும். ஆரம்பநிலைச் சர்க்கரை வியாதிக்குக் கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாற்றை அடிக்கடி உட்கொண்டால் சர்க்கரை வியாதிக்குப் பக்கவிளைவும் அதிகம் ஏற்படுவதில்லை. பரம்பரையில் நீரிழிவு நோய்இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதற்கொண்டே உணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்." வாய்ப்புண்ணுக்குப் பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டால் வாய்ப்புண் ஆறும், வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளுக்குக் கோவைக்காய் நல்லது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 33 34

AD's



More News