பட்டாணியில் மாவுச்சத்து, கொழுப்பு, தயாமின், நயாசின், ரைபோஃப்ளேவின், புரதச்சத்து(இறைச்சியிலிருந்து கிடைக்கும் சக்திக்கு ஈடானது), கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து,பட்டாணியில் உள்ளன.உடலுக்குச் சக்தியைத் தரும், பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் மூளைக்குத் தேவைப்படும் ஊட்டத்தைத் தரும், மூளை நோயைத் தடுக்கும்.ஜீரண உறுப்புகள் பலமடையும், குடல் புண்ணை ஆற்றும், வாய் துர்நாற்றமும் நீங்கும், வாய்- நாக்குப் புண் குணமாகும். ஜீரண உறுப்புகள் நன்கு செயல்படும்.கண் பார்வைக்கு வைட்டமின் ஏ இன்றியமையாதது.உடல் வலி, தலைவலி ஆகியவை ஏற்படாமல் இருக்கவும், பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் இதிலுள்ள வைட்டமின் சி பயன்படுகிறது.நுரையீரல் நோய் குணமடையும், நுரையீரலுக்கும் இதயத்துக்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது, இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.மருந்துபோல இதைத் தினமும் ஒரு கைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுங்கள்.
உருளைக்கிழங்கு உலகெங்கிலும் மிகவும் விரும்பப்படும் ஒரு கிழங்கு வகை என்றாலும், அதன் ஆரோக்கிய பலன்கள் குறித்து விவாதங்கள் நிலவுகின்றன.உருளைக்கிழங்கில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, இது வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இதில் உள்ள எதிர்ப்புச் சக்தி வாய்ந்த ஸ்டார்ச் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், வேகவைத்த அல்லது தோல் நீக்கப்படாத உருளைக்கிழங்கில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து உள்ளது, இது நீண்ட நேரத்திற்கு வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். உருளைக்கிழங்கின் ஆரோக்கியம், அதை எப்படிச் சமைக்கிறோம் என்பதை பொறுத்தது. உருளைக்கிழங்கை வறுத்து சாப்பிடுவது அதிகப்படியான கலோரிகள், உப்பு மற்றும் தீங்கு விளைவிக்கும் கொழுப்பை அதிகரிக்கிறது. இது உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் அபாயத்தை அதிகரிக்கலாம். மேலும், அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்வது, சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்.உருளைக்கிழங்கை சரியான முறையில்(தோலுடன் வேகவைத்தல், வறுக்காமல் சாப்பிடுவது) உட்கொண்டால், அது உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் ஒரு ஆரோக்கியமான உணவாகும். ஆனால், வறுத்த வடிவில் தவிர்ப்பது நல்லது.
உலகம் முழுதும் பரவலாக பயிரிடப்படும் தாவரம் பேரி,- இதன் தாயகம் மத்திய ஆசிய கண்டப்பகுதி. இதை,3,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் பயன்படுத்துவதாக வரலாற்று செய்தி உள்ளது. பண்டைய கிரேக்க, ரோமானிய நாகரிகங்களில், உணவு வகைகளில் பயன்படுத்தப்பட்டது. இப்போது உலகின் பல பகுதியிலும் உணவாக உள்ளது. குறிப்பாக ஐரோப்பா, ஆசியா, அமெரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.பேரிக்காயில் நார், வைட்டமின்- சி. கே மற்றும் பொட்டாஷியம் சத்துகள் நிறைந்துள்ளன. நடுத்தர அளவிலான,180 கிராம் எடையுள்ள பேரிக்காயை உண்டால்,100 கலோரிகள் கிடைக்கும். இது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இதய மற்றும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். பேரிக்காயில் உள்ள பொட்டாஷியம், ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.இது நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கு உகந்த உணவாக உள்ளது. ஜாம், சாலட் மற்றும் இனிப்பு வகைகள் தயாரிக்க பேரிக்காய் பயன்படுகிறது. இதன் மென்மையான இனிப்பு சுவை அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது. தோலுடன் சாப்பிடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும்.பச்சை, சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக, அனைத்து பேரிக்காய்களும் ஒரே மாதிரியான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. ஒரு பெரிய பேரிக்காயில் கிட்டத்தட்ட 6 கிராம் நார்ச்சத்து உள்ளது. "ஒரு பெரிய பேரிக்காயில் சுமார்27கிராம்கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் 18 கிராம் இயற்கை சர்க்கரைகள் உள்ளன,
நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து தாகத்தோடு சிலர் எழுவதுண்டு. நாவறட்சியை போக்குவதற்கு தண்ணீர் அருந்தவும் செய்வார்கள். அப்படி நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா? என்ற கேள்விக்கு நல்லதல்ல என்பதே மருத்துவ நிபுணர்களின் பதிலாக இருக்கிறது. அப்படி தாகமாக எழுந்தால் உடல் நீரிழப்புக்கு ஆளாகி இருப்பதாக அர்த்தம். தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம். ஆனால் அதிகம் பருகக்கூடாது.அது தூக்கத்தை சீர்குலைத்துவிடும். மீண்டும் சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேரிடும். ஆழ்ந்த தூக்கத்தையும், நோய் எதிர்ப்பு அமைப்பையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கும்.அதேவேளையில் உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும். இந்த செயல்முறைகளுக்கு தண்ணீர் மிக முக்கியமானது. அதனால் தூங்க செல்வதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பருகலாம். நள்ளிரவில் அடிக்கடி தாகம் எடுப்பதை தவிர்க்க பகலில் உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைப்பது அவசியம்.
உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள், தினமும் உணவில் ஒரு குறிப்பிட்ட கீரையை சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்த உற்பத்தியை அதிகப்படுத்தலாம். அந்த அற்புதக் கீரை பாலக் கீரை ஆகும்.பாலக் கீரை உடலுக்கு நிறைய ஊட்டச்சத்தை அளிக்கிறது. இது கண் பார்வை திறனை அதிகரிப்பதோடு இரத்த இழப்பைக் குறைக்கிறது. மேலும், இது எலும்புகளை வலுப்படுத்தவும் உதவும். பாலக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், எலும்புகள் மிகவும் வலுவாக இருக்கும்.உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த பாலக் மிகவும் நன்மை பயக்கும். அதாவது, உங்கள் உடலில் நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் சமமாக உள்ளது. பால் சாப்பிடக் கூடாது. இவ்வாறு செய்வதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.உடலில் இரத்தம் சோகை உள்ளவர்கள் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரத்த இழப்பைக் குறைக்க உதவுகிறது.குறைவான ரத்த அளவு உள்ளவர்கள், மேற்கூறிய முறையில் நீராவியில் வேகவைத்த இந்த பாலக் கீரையை ஒரு நேர உணவாக தொடர்ந்து உட்கொண்டு வந்தால், ரத்த அணுக்களின் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும்.பாலக்கீரையின் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும். பாலக் கீரையானது புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது. பாலக் கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும். பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை உணவோடு எடுத்து கொண்டால் பால் அதிகம் சுரக்கும்.
பூசணிப்பழம் சுவையான சமையலுக்கு மட்டுமல்ல, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் ஏஆக மாறி, கண் பார்வை திறனை பாதுகாக்கவும், சரும ஆரோக்கியத்தை பேணவும் உதவுகிறது. பூசணியில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றன.குறிப்பாக, இதில் உள்ள வைட்டமின் சி சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பூசணி விதைகளில் மெக்னீசியம் மற்றும் ஜிங்க் சத்துக்கள் இருப்பதால், அது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகளின் வலிமைக்கும் உதவுகிறது.இது கண் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், செரிமானம், சருமம், மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும் எடை குறைப்புக்கும் நல்லது. இது உடல் சூட்டைக் குறைத்து, நீர்ச்சத்தை அதிகரிக்கும் (குறிப்பாக வெள்ளைப் பூசணி).
வாழை மரத்தின் நடுப்பகுதியில் இருக்கும் வாழைத்தண்டை உணவில் சேர்ப்பது, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் ஒரு சிறப்பான வழியாகும்.வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.மேலும், குடலில் உள்ள கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது. இதன் சாற்றை இரண்டு அல்லது மூன்று வேளை வீதம் தினமும் அருத்தினால். வறட்டு இருமல் நீங்கும்.நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டு சாறு ஒரு டம்ளர் குடித்தால் விஷம் தானாக இறங்கி விடும்.வாழைப்பூச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால், கை கால் எரிச்சல், வெள்ளைப்படுதல் மற்றும்மாத விலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும்.வாழைத் தண்டில் கால்ஷியம் பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருட்களும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துகளும் உள்ளன.நரம்புகளில் தேங்கிநிற்கும் உப்பு படிவங்கள் நீங்கி பார்வையை தெளிவடையச் செய்யும்.வாழத்தண்டு சாறு நரம்பு மண்டலத்தை தூண்டி சுறுசுறுப்பு அடைய செய்யும்.பித்தத்தை குறைக்கவும் உதவும். மாதம் ஒருமுறை வாழைத்தண்டு, சூப் செய்து அருந்துவது நல்லது வயது முதிர்ந்த ஆண் பெண் இருபாலருக்கும் மூட்டு வீக்கம் மூட்டு வலி வந்து கைகால்கள் வீங்கி இருந்தால் வாழைத்தண்டு சாறை குடித்தால் மிகுந்த பயனளிக்கும்.வாழைத்தண்டை சமைத்து உண்ண, சிறுநீர் பாதைகளில் ஏற்படும் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி தணியும்.வாழைத் தண்டை சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழைத்து, தீப்புண் மேல் பூசி வர தீப்புண் ஆறும். சீழ் வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். இதன் பூவை பொரியல் செய்து உண்பதால் அஜீரணம், நீரிழிவு நோய் நீங்கும் குளிர்ச்சியை உண்டாக்கும். வயிற்று புழுக்களை ஒழிக்கும் திறன் கொண்டது. பித்த நோய்களையும் இருமலையும் நீக்கும்.வாழைத்தண்டு காது சம்பந்தமான பிரச்னை, கருப்பை நோய்கள் மற்றும் ரத்தக் கோளறுகள் ஆகியவற்றை குணமாக்கும் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி உலர்த்திப் பொடி செய்து அத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டுவர காமாலை நோய் குணமாகும் .தேள்,பூரான் கடித்த இடத்தில் வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரை பூச வலி குறையும்.வாழைத்தண்டில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, மற்றும் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.வாழைத்தண்டு சாறு குடிப்பதால், சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் கரைய வாய்ப்புகள் உண்டு. இது இயற்கையான சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கப் பெரிதும் உதவுகிறது.வாழைத்தண்டை ஜூஸ், பொரியல், கூட்டு, அல்லது அடை போன்ற பல்வேறு வடிவங்களில் வாரத்திற்கு ஒரு முறையாவது சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. சுமார்28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன.பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டிஅக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும். ஆராய்ச்சி முடிவுகள், பிஸ்தா பருப்பு இதயத்திற்கு நன்மை தரும் கொழுப்பை கொண்டிருப்பதால் பல்வேறு இதய வியாதிகளை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும்.மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு நல்ல வகையில் கட்டுப்படுத்தும். மேலும் இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.பிஸ்தா சாப்பிட்டபிறகு உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது. இது பெப்டைட்1 என்னும் ஹார்மோன் அளவை அதிகரித்து உடலின் க்ளுகோஸ் அளவை சீராக வைக்கிறது.பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் இந்த நார்ச்சத்து குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுகிறது.குடலில் உள்ள பாக்டீரியா இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.கூர்மையான மூளை, புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு.உடலில் வீக்கத்தைக் குறைக்கும்.இரத்த சோகையைக் குணப்படுத்தும்.வயிற்று எரிச்சலுக்கு உதவுகிறது.இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கும்.முதுமை வரை கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.வயதானதால் அதிகரித்து வரும் விளைவுகளைத் தடுக்கிறது.
வல்லாரைக்கீரை ஆற்றங்கைரையிலும் வயல் வரப்பிலும் குளக்கரையிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர்ப்பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.இந்தக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிகமாக உள்ளன. இதை உணவாகப் பயன்படுவதைவிட, மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் எரிச்சல், சிறுநீர் மஞ்சளாக மாறுதல் முதலியவை குணமாகும். மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது, ஆனால், இந்தக் கீரையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் தலைவலி, மயக்கம் முதலியவை வருமாம். அளவோடு சேர்க்கவும்.வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும் மருத்துவக் குணமும்கெட்டுவிடும். வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்துச் சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்துப் பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம்.வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால்குடல்புண், குடல்நோய்,வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஆகியவை அகலும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் இது, கண்நோய்களுக்குச் சிறந்த மருந்து,வல்லாரைக்கீரைபொதுவாகமூளைவளர்ச்சிக்குஉதவுகிறது.ஞாபகசக்தியைவளர்க்கிறது.நரம்புத்தளர்ச்சியைக்கட்டுப்படுத்துகிறது.இதயபலத்துக்கும்.தாதுவிருத்திக்கும்உதவுகிறது.காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர்க்கோளாறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
பால் மற்றும் பால் சார்ந்த தயிர். வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது. ஆனால், மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது. நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.மதிய உணவின் போது, துாதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.இரவு துாங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் துாள், மிளகு துாள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை இந்த சீசனில் உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்.கண்டிப்பாக மழைக்காலத்தில் நம் உணவு பதார்த்தங்களில் மிளகுப் பொடியைச் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.மழை நேர காய்ச்சலுக்கு, நிலவேம்பு கஷாயம் கொடுப்பது சிறந்தது. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இந்த நிலவேம்பு பொடியுடன், தண்ணீர் சேர்த்து காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டி வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.