25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள். >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் நான்காம் திருநாள் >>


முதுமை என்பது ஒரு பருவமே. முதுமையே ஒரு நோயல்ல.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதுமை என்பது ஒரு பருவமே. முதுமையே ஒரு நோயல்ல.

முதுமை என்பது ஒரு பருவமே. முதுமையே ஒரு நோயல்ல. ஆனால், முதுமையில் பல நோய்கள் வரவாய்ப்புகள்அதிகமாகின்றன.நாம் ஏன் முதுமை அடைகிறோம்? என்றுமே இளமையுடன் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்? ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் அதற்கு முடிவு என்று ஒன்று உண்டு. ஆகையால் இளமைக்கு முதுமை ஒரு முடிவு. உடல் முதுமை அடைவதற்கு என்ன கருணங்கள் என்ஆ பல ஆராய்ச்சிகள் நடைபெற்று ஆனால், இன்னும் விளக்கம் கிடைக்கவில்லை. முதுமை அடைய பல காரணங்களைக் கூறுகிறார்கள். அவற்றில் ஒரு சில 

 முன்னோர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்தால் அவர்கள் சந்ததியினரும் அவ்வாறே இருப்பார்கள்.

வயது ஆக ஆக உடலில் உள்ள முக்கிய உயிரணுக்கள் குறைகின்றன.

திறனற்ற உயிரணுக்கள் உற்பத்தி ஆகுதல்.

உயிரணுக்கள் பெருகிவரும் தன்மை குறைவது.

கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படாமல் தங்கி விடுதல்.

ஃப்ரீ ரேடிகல்ஸ் (Free radicals) என்ற திரவம் உடலில் அதிகம் சேர்ந்து மற்ற திசுக்களை அழித்தல்.

உடல் வளர்ச்சிக்குத் தேவையான (Growth hormone ) குறைதல்.

நமது மூளைப்பகுதியிலுள்ள பிட்யூட்ரி என்னும் நாளமில்லாச் சுரப்பி Killer hormone எனும் திரவத்தைச் சுரக்கிறது. இந்தத் திரவம், ஒரு பெண்பூப்பெய்தும் பருவத்தில் சுரக்க ஆரம்பிக்கிறது. இத்திரவம் உடலை அழித்துமரணத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் ஒரு பெண் பூப்படையும் வயது தள்ளிப்போனால்அவள் வாழும் வயதும் அதிகரிக்கும் என்ற ஒரு கருத்து உண்டு.

தலையிலுள்ள மூளைப்பகுதியில் பீனியல் எனும் சுரப்பி Melatonin எனும் திரவத்தைச்சுரக்கிறது. இளமையைப் பாதுகாக்க இத்திரவம் மிகவும் அவசியம். ஆனால், ஒருவர் 25 வயதை அடையும்போது இத்திரவம் குறைகிறது. ஆகையால் முதுமை அப்போதே தொடங்கஆரம்பித்துவிடுகிறது.

இத்தகை தகைய உடல் மாற்றங்கள் காலத்தால் ஏற்படுவது என்றாலும், முதுமை அடைந்தவர்களுக்கெல்லாம் இவை ஏற்படுவதில்லை. சிலருக்குச் சில மாற்றங்களே நிகழும்; மேற்கண்ட மாற்றங்கள் முதுமையில் ஏற்படினும், வாழ்க்கையைப் பக்குவமாக (Balanced life) அமைத்துக்கொண்டால் முதுமையிலும் இன்பம் காணலாம்.

இளமை இனிமேல் போகாது.. முதுமை எனக்கு வாராது என்று உற்சாகமாகப் பாடுங்கள்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News