25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்!

உணவு வகைகள் கீழ்க்காணும் உணவு பல ஆராய்ச்சிகளுக்குப் பின்பு நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.இவைஎல்லாம் நமக்குத்தெரிந்தஉணவுவகைகள்தானேஎன்றுஅலட்சியப்படுத்தவேண்டாம். நினைவாற்றலை அதிகரிக்கும் சத்துகள் இவற்றில் அடங்கியுள்ளன.

இந்த உணவுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவற்றைத் தினசரிநாம்உண்ணும்உணவில் இருக்குமாறுபார்த்துக்கொண்டால், எதிர்பார்த்த பலன் நிச்சயம் கிடைக்கும்.

பசலைக்கீரையில் ஃபோலிக் அமிலம் நிறைய உள்ளது.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூ பெர்ரி பழ வகைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் ஆப்பிளில் குவார்செட்டின் (Quercetin) என்னும் சத்து நினைவாற்றலை மேம்படுத்தும் முக்கியமான ஊட்டச்சத்து.

ஆப்பிளைப் போலவே வெங்காயத்திலும் க்வார்சிடின் உள்ளது. கூடுதலாக அந்தோசயானின்  (Anthocyanin) என்கிற பொக்கிஷத்தையும் வெங்காயம் வைத்திருக்கிறது.

மீன் வகைகள் ஞாபக சக்தியை மேம்படுத்தக் கூடியவை. குறிப்பாக, டுனா என்கிற மீன் வகைகளில் ஒமேகா என்னும் சத்து அபரிமிதமாக இருக்கிறது.

எண்ணெயும் இதில் முக்கிய இடம்பிடிக்கிற மீன் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்று லவங்கப்பட்டை எண்ணெய் போன்றவற்றை  அளவறிந்து பயன்படுத்துங்கள்.

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம்  என்று பலர் சொன்னாலும், நம் மூளைக்கு அந்த  மஞ்சள் கரு மிகவும் உகந்தது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் இருக்கும்  வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் பீட்டா  கரோட்டின் ஆகியவற்றுக்கு மறதியை விரட்டும்  வல்லமை உண்டு.

ராஜ்மாவில் உள்ள தையமின் என்கிற  வைட்டமினும் நமக்குத் தேவை.

உலர்ந்த திராட்சையானது இரும்புச்சத்து  பி. காம்ப்ளக்ஸ், ஃபோலிக் ஆசிட், கால்சியம்  மற்றும் மக்னீஷியம் போன்றவற்றைக் கொண்டது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம்  நிறைந்திருப்பதைப் பலரும் அறிவீர்கள்.

கீரின் டீயானது வயதான பின் வரும் ஞாபக மறதி மற்றும் நரம்பு சார்ந்த நோய்களைத்  தடுக்கிறது.

.முளைக்கட்டிய கோதுமையில் ஞாபகசக்தி அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் செலினியம்  சத்துகள் உண்டு.

காபி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பூண்டு, வல்லாரைக் கீரை, வால்நட் போன்றவையும்  நினைவாற்றலை மேம்படுத்த உதவுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News