கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடினால் அடிக்கடி சிறுநீர் போவது, அதிக தாகம் எடுப்பது. அதிகமாகப் பசிப்பது போன்ற அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும். அதுபோல், ரத்த அழுத்தம் அதிகரித்தாலும் சிலருக்குக் கிறுகிறுப்பு, தலைவலிபோன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடினால் நமக்குஎந்த அறிகுறியும் வெளியில் தெரியாது. நெஞ்சுவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்றவற்றுக்காக ரத்தப் பரிசோதனை செய்யும் போதுதான்கொலஸ்ட்ரால் கூடி இருப்பது தெரிய வரும். ஆகவே, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையும், ஏற்கனவே கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வருடத்துக்கு இரண்டு முறையும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற இணை நோய்கள் இருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும்கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை மேற்கொண்டு, கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
0
Leave a Reply