ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-ஐ மற்றும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வு தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-I மற்றும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வு (தாலுகா & ஆயுதப்படை) விரைவில் நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விருப்பமுள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ஒருநாள் கருத்தரங்கு 10.04.2025 அன்று விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் துறை சார்ந்த சிறந்த நிபுணர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வு TNUSRB SI தேர்வர்களுக்கு காலை 9.30 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை மற்றும் TNPSC GROUP - 1 தேர்வர்களுக்கு மதியம் 1.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியில் இத்தேர்வு குறித்து விளக்கங்கள் மற்றும் தெளிவுரை வழங்கப்படும். இந்த ஒருநாள் கருத்தரங்கில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/yqdmFbP1tGqBfA7Z6 என்ற கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினையோ அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ளலாம். எனவே TNPSC குரூப் 1 மற்றும் TNUSRB SI தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply