25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு இந்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு இந்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது

புவிசார் குறியீடு (GI)  என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுவதாகும். அந்த பொருள் அந்த பகுதியில் பாரம்பரியமாக தயாரிக்கப்படுவதையும் அதன் தரத்தையும், நற்பெயரையும் உறுதி செய்கிறது.

அதனடிப்படையில் விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு ஏப்ரல் 04, 2025 அன்று வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடானது வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில், தற்போது விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாற்றாங்கல் நடவு செய்யப்பட்டு, மார்ச் இறுதியில் அறுவடை செய்யப்படுவது வழக்கம். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், வெம்பக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் சுமார் 3042 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக கே1, கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் பயிரிடப்படுகின்றன.

மிளகாய் பணப்பயிர். இது வறட்சியை தாங்கி வளரக்கூடியது. சம்பா வத்தல் மற்ற மிளகாயை விட அதிக காரத்தன்மை (‘காப்சைசின்;”) அளவு 0.24 சதவிகிதம் கொண்டது மற்றும் பிரகாசமான சிவப்பு நிறத்தில் உள்ளது. சம்பா வத்தல் நீளம் 6 - 6.5 செ.மீ நீளமுடையதாகவும், கூர் முனை கொண்டதாகவும் இருக்கும். அதிக காரத்தன்மை கொண்ட சம்பா வத்தல் மதிப்பு கூட்டு பொருட்களான ஒலியோரெசின் எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.

புவிசார் குறியீடு மூலம் தயாரிப்புகளுக்கு சட்டப் பாதுகாப்பு, அங்கீகாரம் பெறாத மற்றவர்கள் புவிசார் குறியீடு தயாரிப்புகளை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கிறது. இது நுகர்வோர் விரும்பிய பண்புகளின் தரமான தயாரிப்புகளைப் பெற உதவுகிறது மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் அவர்களின் தேவையை அதிகரிப்பதன் மூலம் புவிசார் குறியீடு பொருட்களின் உற்பத்தியாளர்களின் பொருளாதார செழுமையை ஊக்குவிக்கிறது.

    அந்த வகையில் தற்போது, இந்த சம்பா மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், இனிமேல், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் அதிக விலை கிடைக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

மேலும், விருதுநகர் அதலக்காய், சாத்தூர் வெள்ளரி, இராஜபாளையம் மாம்பழம், தாதம்பட்டி கொடுக்காப்புளி மற்றும் பஞ்சவர்ணம் மாம்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வாங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *