25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 21, 2025

“குழந்தைகள் இலக்கியத் திருவிழா”மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்(சாகித்திய அகாடமி விருதாளர்) எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக சிறப்புரையாற்றினார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் பள்ளியில் இன்று(21.03.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான குழந்தைகள் இலக்கியத்; திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்(சாகித்திய அகாடமி விருதாளர்) எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக சிறப்புரையாற்றினார்.விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கியக் கழகம் இணைந்து குழந்தைகள் இலக்கிய திருவிழாவை நடத்துவதில் உண்மையிலேயே ஒரு பெருமையான செயல். ஒரு மிக முக்கியமான செயல். அந்த செயலுக்காக எனது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.குழந்தைகள் இலக்கியத்தை பற்றி பேசுவது, குழந்தைகள் இலக்கியத்தினுடைய தேவைகளை பற்றி நாம் உரையாடல் தொடர்ந்து நிகழ்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கின்ற நவீன ஆய்வுகள், குறிப்பாக மானுடவியல் ஆய்வுகள் தொடங்கி, மனோ தத்துவவியல் ஆய்வுகள் வரை சொல்லுகிற மிக முக்கியமான உண்மை, ஒரு மனிதனுடைய நீண்ட வாழ்வு ஒரு 90 ஆண்டு, 80 ஆண்டுகால நீண்ட வாழ்வில், எது மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்குகிறது அல்லது அந்த வாழ்விற்கு எந்த பகுதி அடிப்படையாக இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பினால், எப்படி ஒரு கரிசல் நிலம் அல்லது செம்மண் நிலம் அல்லது வயல்வெளி அல்லது கரம்பை மண் பகுதி என்று ஒவ்வொரு நிலப்பகுதியிலும், ஒவ்வொரு வகையான செடி, கொடிகள், தாவரங்கள், பயிர்கள் விளையும். அதேபோலத்தான் குழந்தை பருவம் என்பது அந்த பருவத்தில் ஒரு மனிதனுடைய மனநிலை, குழந்தையினுடைய மனதிலே உருவாகின்ற சித்திரம், கனவுகள் தாக்கங்கள், இவையெல்லாம் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது என்று சொல்கிறார்கள்.எனவே தான் குழந்தைப் பருவத்தில் சிறுவர்களாக இருக்கின்ற பொழுது படிக்கின்ற புத்தகம், பார்க்கின்ற நண்பர்கள், பழகுகின்ற நண்பர்கள், பார்க்கின்ற மனிதர்கள், அந்த காலத்தில் அவர்களுக்கு உருவாகிற கதாநாயக பிம்பங்கள் இவையெல்லாம் மிக மிக முக்கியமானது. அந்த வகையில் தான் குழந்தை இலக்கியம் என்பது மொத்த மானுடவியல்; வாழ்விற்கு மிக அடிப்படையான இலக்கியமாக இருக்கிறது. குழந்தை இலக்கியங்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக சமூகத்தில் நல்ல விளைவுகளை உருவாக்குவதற்கான முயற்சி நடக்கிறது என்று அர்த்தம்.நமது ஊர்களில் சிறார்களுக்காக மட்டுமே இருக்கின்ற நூலகங்கள் என்று பார்த்தால் மிகக் குறைவு. சிறுவர்களுக்கான புத்தகங்கள் என்று பார்த்தால் அதைவிட குறைவு. அது சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கின்ற விழிப்புணர்ச்சியில் இருந்து மிக அதிகமாக அது வளர்ந்து கொண்டிருக்கிறது. பெரிய இலக்கியங்களை படைத்து விடலாம். சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்கின்ற பொழுதுதான் அதனுடைய கடினம் தெரியும். நான் 2011-12 ஆம் ஆண்டு காவல் கோட்டம் எழுதி முடித்த பிறகு, அன்றைக்கு தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை உருவாக்குகின்ற பொழுது, ஏழாம் வகுப்பு குழந்தைகளுக்கு பெரியாரைப் பற்றி பாடம் எழுதுகின்ற பணியில் என்னை ஈடுபடுத்தினார்கள். ஏழாம் வகுப்பு குழந்தையினுடைய, அவர்களுக்கு புழக்கமான  சொல், அவர்களுக்கு படிப்பதை போன்று ஒரு சிறிய வாக்கிய அமைப்பில் பெரியாரைப் பற்றி இரண்டு பக்கம் ஒரு பாடத்தை எழுதுவதற்கு நான் பட்டப்பாடு சொல்ல முடியாதது. 1000 பக்கம் காவல் கோட்டம் எழுதியதற்கு பின்பு தான் இங்கே வந்தேன். என் குழந்தை அப்பொழுது சரியாக ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் ஒரு பக்கத்தை நான் எழுதிவிட்டு படித்துப் பார் என்று சொல்லுவேன். எனக்கு புரியவில்லை என்று சொல்லுவாள். ஏறக்குறைய 10 முறை என்னை என் மகள் திருத்தி இருக்கிறார். எனக்கு புரிகின்ற மாதிரி, புரிகிற வாக்கியத்தில் எழுதுங்கள் என்று சொல்லுவாள்.இந்த இரண்டு நாட்கள்(20.03.2025 மற்றும் 21.03.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில்; சிறுவர்களுக்கான கதைகள், பொம்மலாட்டம், மன நல பயற்சிகள், சிறுவர் திரைப்படங்கள், மேஜிக், போன்ற நிகழ்ச்சிகளும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழுவிவாதம், குழந்தைகளின் வாசிக்கும் பழக்கம், கலகல வகுப்பறை, மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்தல் போன்ற பல்வேறு அமர்வுகளும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றன.மேலும், ஆசிரியர்கள் ஃ பெற்றோர்களுக்காக அமைக்கப்பட்ட அரங்கில் மனநல மருத்துவர், பேராசிரியர் துணைத்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை மரு.சிவபாலன் அவர்கள் மற்றும் மனநல மருத்துவர் மற்றும் எழுத்தாளர் மரு.மந்திரிகுமார் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட குழுவிவாத நிகழ்ச்சியும், குழந்தைகளின் வாசிக்கும் பழக்கம் என்ற தலைப்பில் சாகித்ய பால புரஸ்கார் விருதாளர், பள்ளிக் கல்வித்துறையின் சிறார் ஆசிரியர் இதழின் பொறுப்பாசிரியர் திரு.பாலபாரதி அவர்களின் சிறப்புரையும்,  கலகல வகுப்பறை என்ற தலைப்பில் திரு.ரெ.சிவா அவர்களின் சிறப்புரையும், மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்தல் அமர்வில் சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் திரு.உதயசங்கர் அவர்கள் மற்றும் எழுத்தாளர் திரு.ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆகியோரின் சிறப்புரையும் நடைபெற்றது.மேலும், ஆசிரியர்கள் / பெற்றோர்களுக்காக அமைக்கப்பட்ட அரங்கில் குழந்தைகளுக்கான உரிமைகள் என்ற தலைப்பில், இயக்குநர், தோழமை, சென்னை திரு.அ.தேவநேயன் அவர்கள்,  இயக்குநர்(குழந்தைகள் உரிமை மற்றும் மேம்பாட்டு மையம்) திருமதி ஸ்டெகானா ஜென்ஸி அவர்கள் மற்றும் இயக்குநர்(வளர்ச்சி, கல்வி மற்றும் செயல்பாடுக்கான நிறுவனம்) திரு.ம.ஆண்ரூ ஜேசுராஜ் அவர்கள் ஆகியோரின் சிறப்புரைகளும், குழந்தை ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பில், பொது நல மருத்துவர், மருத்துவ எழுத்தாளர், தேசிய அறிவியில் விருது பெற்றவர், இராஜபாளையம் மரு.கு.கணேசன் அவர்கள் மற்றும் குழந்தைகள் மன நல மருத்துவர் மரு.விது.பிரபா அவர்கள் ஆகியோரின் சிறப்புரைகளும்,  இணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், டாக்டர் சங்கர சரவணன் அவர்களின் வினாடி வினா நிகழ்ச்சியும், திரு.தயா அவர்களின் மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Mar 21, 2025

சிற்றுந்து புதிய வழித்தடத்திற்கு அனுமதி வழங்குவது குறித்த செயல்முறை ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (21.03.2025) போக்குவரத்துத்துறை சார்பில், மாவட்டத்தில் சிற்றுந்து புதிய வழித்தடத்திற்கு அனுமதி வழங்குவது குறித்த செயல்முறை ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S,  அவர்கள் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில், மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் 2024, மோட்டார் வாகன சட்டம் 1988 ன் கீழ் G.O.MS. NO.33, நாள் 23.01.2025-ன் படி அரசாணை பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள்,குக்கிராமங்கள் , குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போதுமான பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்குவதற்காகவும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் மக்கள் தொகை மற்றும் போதுமான பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ள அருகில் உள்ள பேருந்து நிலையம் அல்லது அருகிலுள்ள நகரத்தை அடைய எந்த வழியும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழக அரசால் மேற்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த புதிய விரிவான திட்டம் 2024 வெளியீடு உடனடியாக அமலுக்கு கொண்டு வரும் நோக்கில் விருதுநகர் வட்டாரப்போக்குவரத்து அதிகாரி / மாவட்ட ஆட்சியர் அவர்களால் இதுவரை மூன்று அரசிதழ்கள் வெளியிடப்பட்டன. 56 புதிய வழித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அரசிதழில் விளம்பரப்படுத்தப்பட்டு 28.02.2025 க்குள் விண்ணப்பம் பெற கடைசி நாளாக அறிவிப்பு செய்யப்பட்டது.மாவட்ட அளவில் 14 புதிய வழித்தடத்திற்கு 16 விண்ணப்பம் வரப்பெற்று இந்த 16 விண்ணப்பத்திற்கும் 04.03.2025 அன்று வட்டாரப்போக்குவரத்து அதிகாரி , மாவட்ட ஆட்சியர் அவர்களால் செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.மீதமுள்ள வழித்தடங்களுக்கு மீண்டும் அறிவிப்பு செய்யப்பட்டு 20.03.2025 அன்று விண்ணப்பங்கள் பெற கடைசி தேதியாக தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அளவில் 3 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த மூன்று விண்ணப்பத்திற்கும் வட்டாரப்போக்குவரத்து அதிகாரி / மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களால் 21.03-2025   செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.

Mar 21, 2025

மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் (21.03.2025) விருதுநகர் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 19 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.55 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 50 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.25 இலட்சம் மதிப்பிலான முத்ரா கடனுதவிகளையும் என மொத்தம் ரூ.1.80 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள்  வழங்கினார்.மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக மகளிர்சுய உதவிக்குழுக்கள்,  மாற்றுத்திறனாளிகள்,  சிறு வணிகர்கள், மகளிர் தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர், மத்திய கால கடன், முத்ரா கடன்,  பண்ணை சாரா கடன், சம்பள கடன், வீட்டு வசதி கடன், முதலீட்டுக் கடன், குறு சிறு நடுத்தர தொழில் கடன் என சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் இந்த கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களான பேனா நிப், தீப்பெட்டி, திண்பண்டங்கள், பட்டாசு, பருத்தி சார்ந்த தொழில்களும், விவசாயம் சார்ந்த பொருட்களினுடைய வர்த்தகமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.விருதுநகர் மாவட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் வணிகங்கள், செய்தவற்கு உகந்த பகுதியாக இருக்கிறது. இங்கு நிறைய படித்த இளைஞர்கள், வேலைக்கான ஆட்கள் இருக்கக்கூடிய சூழலுடன் தமிழ்நாட்டிலேயே பெரிய அளவில் தொழில் புரியக்கூடிய மாவட்டமாக இருக்கிறது. மாவட்டத்தில் தொழில்களுக்கான மூலப் பொருட்களும், வர்த்தகம் செய்வதற்கான நிறைய வாய்ப்புகளும் இருக்கிறது. அதையெல்லாம் நன்கு பயன்படுத்திக் கொண்டு அனைவரும் சிறந்த தொழில் முனைவராக முன்னேறி சிறந்த பொருளாதாரத்தை பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.பா.செந்தில்குமார், துணைப்பதிவாளர்கள் திரு.குருசாமி, திரு.அந்தோணி மரிய டயர்ஸ், திரு. வீரபாண்டி, உதவி இயக்குநர்(கைத்தறி) திரு.வெங்கடேசலு, வங்கி பொது மேலாளர் திரு.சங்கரநாராயணன், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 21, 2025

உலக தண்ணீர் தினமான 23.03.2025- அன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் 29.03.2025 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் எனமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான 23.03.2025 - அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் - கலைஞர் கனவு இல்ல திட்டங்களின் பயனாளிகள் தேர்வு மற்றும் திட்ட பணிகளை இறுதி செய்தல் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது - மேற்படி ஓத்திவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டமானது 29.03.2025 - அன்று நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.1. உலக தண்ணீர் தினத்தின் சுருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்• வான்தரும் மழைநீரினை சேகரித்தல்.• சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்துதல்.• உடைந்த குழாய்களை சரி செய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல்.• மறுசுழற்சிக்கு உட்படுத்துதல்.• நிலத்தடி நீரை செறியூட்டுதல்.• நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுக்கட்டுப்பட்டைத் தடுத்தல்.• மரம் வளர்த்தலை ஊக்குவித்தல்,வீட்டுக்கொரு மரம் வளர்த்தல்.• நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல்.• நீhநிலைகளின் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல்.• நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுதல். 2.  கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.     (01.04.2024 முதல்28.02.2025 வரை) 3.  கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல். 4.  சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்.          சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல்,மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி,        தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி மாதம்  இருமுறை சுத்தம் செய்தல;                 (பிரிதி மாதம் 5 - ம் தேதி மற்றும் 20 - ம் தேதி).• தினமும் தகுந்த அளவு குடிளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல்.• இதர பொருட்கள்  குறித்து விவாதித்தல்.எனவே, 29.03.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 20, 2025

‘Coffee With Collector” வெம்பக்கோட்டை, கல்லமநாயக்கர்பட்டி எஸ். எம். எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 158-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (20.03.2025) வெம்பக்கோட்டை, கல்லமநாயக்கர்பட்டி எஸ். எம். எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் 60 மாணவ, மாணவியர்களுடன் நடைபெற்ற ‘Coffee With Collector”  என்ற 158- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 158 -வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.தமிழ் ஆர்வத்தை வளர்த்தல், சிறுகதை படைத்தல், படைப்பிலங்கியங்கள், தமிழ் அறிஞர்கள் குறித்தும் கல்லூரி மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவியர்கள்; உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.    

Mar 20, 2025

பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு செயல் திட்டங்களில் ஒன்றான “குழந்தைகள் இலக்கியத்”திருவிழா

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம் இணைந்து 20.03.2025 மற்றும் 21.03.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான “குழந்தைகள் இலக்கியத் திருவிழா”வினை சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S.,  அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (20.03.2025) தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில்; சிறுவர்களுக்கான கதைகள், பொம்மலாட்டம், மன நல பயற்சிகள், சிறுவர் திரைப்படங்கள், மேஜிக், போன்ற நிகழ்ச்சிகளும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழுவிவாதம், குழந்தைகளின் வாசிக்கும் பழக்கம், கலகல வகுப்பறை, மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்தல் போன்ற பல்வேறு அமர்வுகளும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றது.உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு வாசிக்கக்கூடிய பழக்கத்தை ஒரு இயக்கமாக செய்கிறார்கள். ஒரு பிரச்சனை வந்த பிறகு தான் அதன் பாதிப்பை குறித்து பேசுகின்றோம். இன்று உலகம் முழுவதும் அதிகமாக பேசிக்கொண்டிருக்கக்கூடியது சுற்றுச்சூழல் பிரச்சனை. அது குறித்து இன்னும் கூட அவ்வளவு தீவிரமாக பேசப்பட வில்லை. இன்னும் ஒரு 20 ஆண்டுகள் கழித்து மனிதனுடைய அன்றாட வாழக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் போதுதான், அது குறித்து பேச ஆரம்பிக்கின்றோம். இன்று அது பாதிக்க தொடங்கி இருக்கிறது.இன்று வெப்பநிலை என்பது சராசரி அளவைவிட அதிகமாக உள்ளது. வெப்பநிலை அதிகமாகும் போது அது உணவு உற்பத்தியை பாதிக்கின்றது. குப்பைகளும், கொட்டப்படும் கழிவுகளும் சுற்றுசூழலை மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு சாதாரண காய்ச்சல் கூட நுரையீரலை பாதிக்ககூடிய அளவிற்கு காற்று மாசு அடைந்துள்ளது.இது போல எந்த ஒன்றும் பிரச்சனை தீவிரமாக மாறுகின்ற போதுதான் அது தொடர்பாக நாம் பேசுகிறோம். இன்று உலகம் முழுவதும் எப்படி சுற்றுசூழல் பாதிப்பை பற்றி பேசுகின்றோமோ அதுபோல இன்னும் 10 ஆண்டுகளில் மிக முக்கியமான பேசு பொருளாக இருக்க போவது குழந்தைகள் செலவிடக்கூடிய திரைநேரம் (Screen time) குறித்ததாக இருக்கும்.கண் மருத்துவர்கள் முதல் குழந்தைகள் உளவியல் நிபுணர்கள் வரை கூறுவது குழந்தைகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திறது எனவும், குழந்தைகள் இளம் பருவத்தில் உடல், மூளை சார்ந்த வளர்ச்சி, எதிர்காலத்திற்கு தேவைப்படும் முக்கியமான பண்புகளான கற்பனை ஆற்றல், வாழக்கையின் இயல்புகளை குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் கதைகளை எளிமையாக சொல்லி தர வேண்டும்.            ஏனென்றால் இன்று எந்த ஒன்றும் இயல்பாக கிடைத்துவிடுகிறது. நாம் கஷ்டப்பட்ட தேவையில்லை என குழந்தைகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். முந்தைய தலைமுறைக்கு ஏதாவது ஒன்று கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக காத்திருக்க வேண்டும், அதற்காக கஷ்டப்பட வேண்டும். அது கிடைக்காமல் போனால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய குழந்தைகள் இதனை பெரும்பாலும் எதிர்கொள்வதில்லை. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கு நேரடியாக எடுத்துச்சொல்ல வேண்டும் என்றால், அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தற்போது குழந்தைகளுக்கு இல்லை. படிக்கும் வயதில் குழந்தைகளுக்கு கவனச்சிதறல்களை தவிர்க்க முடியாது. ஆனால் எதன் மீது கனவத்தை சிதறடிக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். வாழ்க்கையில் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய பண்புகளை அப்படியே கற்றுக்கொடுப்பதை குழந்தைகள் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, பல்வேறு வடிவங்களையும், யுக்திகளையும் கையாளுவதுதான் இந்த குழந்தைகளுக்கான கற்றல் வழிமுறைகள்.குழந்தைகளுக்கான கற்றல் கற்பித்தல் வழிமுறைகளில் இசையும், இலக்கியமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இசைவடிவிலும், கதை வடிவிலும் தொடர்ச்சியாக ஒரு கருத்தை எடுத்து சொல்வதால் மனதில் பதியும் அளவிற்கு நிற்கிறது. நீதிக்கதைகளை தொடர்ச்சியாக படிக்கும் பொழுது எது நல்லதோ அது அவர்களின் மனிதில் பதிய வேண்டும்.  அங்கு நூலகம், அருங்காட்சியம் ஆகியவை குழந்தைகளை மையப்படுத்தி தான் உள்ளது. இது போன்ற பல முயற்சிகளால் குழந்தைகளுக்கான கற்றல், கற்பித்தல் மிக சிறப்பாக நடைபெறுகிறது. அதை நம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும். குழந்தைகளுக்கு படைப்பாற்றாலை அதிகரிக்க வேண்டும். குழந்தைகளினுடைய உலகம், கதை, பாடல்கள், அறிவியல் செய்திகள், தன்னம்பிக்கை செய்திகள்  ஆகியவை இளம் வயதில் குழந்தைகளுக்கு எடுத்து கூறுவதற்கான வழிமுறைகள் குறித்து நிறைய எழுத்தாளர்கள் படைப்புகளை உருவாக்கி உள்ளனர்.எனவே, குழந்தைகளுக்கான கற்றல், கற்பித்தல் சூழ்நிலைகளை உருவாக்கி தருவது  பெற்றோர்கள், சமூகம், நிறுவனம் ஆகியவற்றின் கடமையாகும். அவற்றை குறித்து விரிவாக பேசுவதற்கும், நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைபள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களை இது போன்று வாசிப்பதற்கு சிறு கதைகளை  வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.நெருப்பின் முதல் துளி என்பது ஒரு சிறு பொறியாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட பொறியை குழந்தைகளுக்கு ஏற்ற வேண்டியது ஒவ்வொருவரினுடைய கடமையாகும். அது குறித்து நாம் விரிவாக பேசுவதற்கும், நிறைய அறிஞர்களினுடைய அனுபவங்களை ஆலோசனைகளை கேட்பதற்குத்தான் இந்த இரண்டு நாள் குழந்தைகள் இலக்கியத்திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.எனவே இதில் இருக்ககூடிய அறிவியல் பூர்வமான உரைகளை கேட்டு கற்றுக்கொண்டு நம் குழந்தைகளுக்கு கடத்தினால் ஆரோக்கியமான மிகச்சிறந்த ஒரு சமுதாயம் உருவாகும்.  எதிர்காலத்தில் வெற்றிகரமான ஒரு தொழில் நிபுணரையோ, மருத்துவரையோ, பொறியாளரையோ உருவாக்குவதை விட, அவர் சிறந்த ஒரு மருத்துவராக, சிறந்த பண்புள்ள பொறியாளராக, சிறந்த பண்புள்ள மனிதராக உருவாக்குவது மிக அவசியம். எனவே இவற்றை எல்லாம் புரிந்து கொள்வதற்கும் இது குறித்து  விவாதிப்பதற்கும் தான் இந்த நிகழ்ச்சி என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள் சிறப்புரையாற்றிய போது தெரிவித்ததாவது:கற்பித்தல் என்பது ஆசிரியரிடமிருந்து குழந்தைகளும், குழந்தைகளிடமிருந்து ஆசிரியர்களும் கற்றுக் கொள்ளும் இடமாக பள்ளிகள் இருந்தால், கற்பித்தல் என்பது மிக அழகாக நடைபெறும். இதில் இசையும், ஓவியமும் மிகப்பெரிய பங்களிப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகின்றது.  அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளுக்கு தொடர்ந்து நல்ல கதைகளை எடுத்து கூற வேண்டும். அது  அவர்களது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு குழந்தைகளுக்கான கதைகளை எடுத்துக் கூறி விரிவாக உரையாற்றினார்.இது போன்ற குழந்தைகள் இலக்கியத் திருவிழாவினை இங்கு வருகை தந்து இருக்கக்கூடிய அனைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், இன்று குழந்தைகளுக்காக நடைபெற்ற கதை சொல்லுதல் நிகழ்ச்சியில், கதையாசிரியர் திரு.நீதிமணி அவர்கள் மற்றும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்(சிறார் கதையாசிரியர், கதைச்சொல்லி) ஆகியோரும்,  பொம்மலாட்டம் நிகழ்ச்சியில்  பொம்மலாட்டக் கலைஞர், கதைச்சொல்லி திருமதி ரதி அவர்களும், சுடுமண் சிற்பங்கள் மற்றும் மண்பாண்டங்கள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் திரு.வீரராஜ் அவர்களும் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர்.இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியர்(பயிற்சி) திருமதி ராமசௌந்தரி,I A S., கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஸ்ரீதரன், கலசலிங்க பல்கலைக்கழக துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசிஆனந்த், முதல்வர்(லிங்கா குளோபல் பள்ளி) திருமதி அல்கா ஷர்மா, அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Mar 19, 2025

மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 24.02.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் துவக்கிவைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 27 முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், பந்தல்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்இ மெயின் பஜார்(75989-65052), திருவில்லிபுத்தூர் பஞ்சாயத்து யூனியன் மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம், வன்னியம்பட்டி விலக்கு(80566-45384), மாத்திநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சூலக்கரை(86104-97590), மேட்டமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாத்தூர்(63807-88272), முகவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சேத்தூர் மெயின் ரோடு,இராஜபாளையம்(76391-15145), பாட்டக்குளம் சல்லிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிருஷ்ணன்கோவில்(73973-06344), சத்திரப்பட்டி ஆலங்குளம் சாலை, அய்யனாபுரம் (88258-14836), சிவகாசி பொது அலுவலர்  கூட்டுறவு பண்டகசாலை, ஆனையூர்(80152-28861), அருணாச்சலபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எம்.ரெட்டியப்பட்டி(91597-91469), வீரசோழன் கூட்டுறவு பண்டகசாலை, வீரசோழன்(93847-16303), கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிருஷ்ணாபுரம்(97863-36396), கொல்லபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மெயின்ரோடு, சாத்தூர்(74492-35707),விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, அல்லம்பட்டி (80726-54056), தாயில்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தாயில்பட்டி (98436-52835), மல்லாங்கிணர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மல்லாங்கிணர்(81247-37854), வத்திராயிருப்பு கூட்டுறவு பண்டகசாலை, வத்திராயிருப்பு (99948-23272), விருதுநகர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, லட்சுமி நகர், விருதுநகர்(87786-53291), எம்.ஜெயக்கவிதா, தெற்கு தெரு, அருப்புக்கோட்டை(98424-04312), எம்.ராமராஜ், பந்தல்குடி சாலை, அருப்புக்கோட்டை (90805-39436), பி.முருகேஸ்வரி காமராஜ் நகர்,இராஜபாளையம்(97882-23277), ஜெ.சுகிர்தராணி, மெயின் ரோடு, மேலையூர்(81109-43955), பெனாசீர், மதுரை மெயின்ரோடு, திருவில்லிபுத்தூர்(96265-65454), எஸ்.அண்ணாமலை சிவகாசி மெயின்ரோடு, எம்.புதுப்பட்டி(99433-01553), ஜி.சுமதி, செங்கமலநாச்சியார்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்(85086-47984), எம்.போஸ் அழகாபுரி, இராஜபாளையம்(99768-98818), எ.முத்துசெல்வி, அம்மன்கோவில்பட்டி, வெள்;ர்(90956-06012), ஜி.ஜெயந்தி, முடங்கியார் ரோடு, இராஜபாளையம்(97916-63020) ஆகிய 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த முதல்வர் மருந்தகங்களின் மருந்துகள் சந்தை விலையைவிட 75 சதவீதம் விலை குறைவாகவும், கூடுதலாக 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும், ஜெனரிக், பிராண்டட், சித்தா, ஆயுர்வேதம், யுனானி டாம்க்கால் மற்றும் சர்ஜிக்கல் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் கிடைக்கும். எனவே, இதனை பொதுமக்கள் பெற்று பயன்பெறுமாறு  மாவட்;ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 19, 2025

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் ரூ.52 இலட்சம் மானியத்தில் விவசாய இயந்திரங்களை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், (19.03.2025) வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் துணை இயக்கம் 2024-25 என்ற திட்டத்தின் கீழ்  ரூ.99.51 இலட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரங்களை 17 விவசாயிகளுக்கு ரூ.52 இலட்சம் மானியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்.அதன்படி, இன்று 10 டிராக்டர்கள், 4  பவர்டில்லர்கள்,  3 பவர் வீலர்கள்  என மொத்தம் 17 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.பின்னர், வேளாண் பொறியியல் துறை மூலம் நடத்தப்பட்ட “சூரிய மின்சக்தி ஆற்றலும் காலநிலை மாற்றமும் என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் மதுரை வேளாண் கல்லூரியைச் சேர்ந்த 40 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 19, 2025

"Coffee With Collector” என்ற 158-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் (19.03.2025) சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பல்வேறு துறைகளில் பயிலும் 100-ற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடனான "Coffee With Collector”  என்ற 158- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 158-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.கல்லூரி மாணவ மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது  தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர்   கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

Mar 19, 2025

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் செவல்பட்டி கிராமத்தில் உள்ள கூரைக்குண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (19.03.2025) முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப.ஜெயசீலன் , I A S, அவர்கள் மானவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

1 2 ... 101 102 103 104 105 106 107 ... 121 122

AD's