25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 13, 2025

விருதுநகர் மாவட்டம் தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நிரப்பப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டம் தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்  2 மருத்துவ அலுவலர்கள், 2 செவிலியர்கள், 2 சுகாதார ஆய்வாளர்கள், 2 மருத்துவமனை பணியாளர்கள்  நிரப்பப்பட உள்ளது.இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் இனசுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ 24.03.2025 பிற்பகல் 5.45 மணி வரை சமர்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 12, 2025

சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 19.03.2025 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 19.03.2025 அன்று பிற்பகல் 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட மத்திய மாநில சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Mar 12, 2025

"Coffee With Collector” என்ற 154-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(12.03.2025) சிவகாசி AAA பொறியியல் கல்லூரியில் பயிலும் 60 மாணவர்களுடன் நடைபெற்ற "Coffee With Collector” என்ற 154 ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 154-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.தமிழ் ஆர்வத்தை வளர்த்தல், சிறுகதை படைத்தல், படைப்பிலங்கியங்கள், தமிழ் அறிஞர்கள் குறித்தும் கல்லூரி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.    

Mar 12, 2025

ரூ.4.49 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் (12.03.2025) ரூ.4.49 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 23 பயனாளிகளுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பிலான ஆதிதிராவிட நத்தம் நிலங்களில் வழங்கப்படும் வீட்டுமனை ஒப்படைக்கான இணையவழி பட்டாக்களை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்துதற்கு பல்வேறு திட்டங்கைள வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்;டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதித்திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது.அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.அதன்படி, இன்று ரூ.4.49 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று துவக்கி வைக்கப்பட்டது.மேலும், இந்த புதிய கட்டடம் தரைத்தளம் 6921.19 சதுரடி பரப்பளவிலும்,  முதல்தளம் 6232.30 சதுரடி பரப்பளவிலும் என  வட்டாட்சியர் அலுவலக அறை, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அறை, கணிப்பொறி அறை, அலுவலக அறை, விசாரணை அறை, கூட்ட அரங்கம், பதிவுகள் வைப்பறை, ரசீது மற்றும் தபால் அனுப்பும் அறை, அலுவலர், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்வுதளம், ஆழ்துழை கிணறு அமைத்து தண்ணீர் வசதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.செந்தூர், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் திரு.வள்ளிக்கண்ணு, அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் திரு.செந்தில்வேல், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 12, 2025

130 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.1.33 கோடி மதிப்பிலான திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்கள் மற்றும் திருமண நிதியுதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (12.03.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், அருப்புக்கோட்டை, சாத்தூர்,வெம்பக்கோட்டை,திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 130 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.79.12 இலட்சம் மதிப்பில் தங்க நாணயங்கள் மற்றும்  ரூ.53.75 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.1.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.மக்களால் அமைக்கப்பட்ட   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு, மக்கள் நலன் காக்கும் அரசாக, செயல்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி வருகிறது.பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.போதிய பணவசதி இல்லாத காரணத்தால் ஏழை பெண்களின் திருமணம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக திருமண நிதியுதவி திட்டம் கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.திருமண உதவித் திட்டம் என்பது, பொருளாதார அளவில் நலிவுற்ற, ஏழை விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமணத்தினை நடத்திட போதிய வசதி இல்லாமல் ஏற்படும் சிரமத்ததை தவிர்த்திக்கும் வகையிலும், சமூகத்தில் பிறப்பு அடிப்படையிலான இனப்பாகுபாட்டினை களைந்து சமநிலையை உருவாக்கிடவும், தாய், தந்தையர்கள் இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவிட தாலிக்கு தங்கம் வழங்கிடும் பொருட்டும், கணவரை இழந்த விதவைகளுக்கு புதுவாழ்வு அளித்திட  விதவை மறுமணம் திருமண நிதியதவி வழங்கிடும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25,000/- மற்றும் பட்டபடிப்பு பயின்ற பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டில், அருப்புக்கோட்டை, சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 130 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.79.12 இலட்சம் மதிப்பில் தங்க நாணயங்கள் மற்றும்  ரூ.53.75 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.1.33 கோடி மதிப்பிலான  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.அதுமட்டுமல்ல பெண்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் செய்யக்கூடிய அரசாக இந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு செயல்படுகிறது.அதற்கு காரணம் பெண்கள் முன்னேறினால் சமுதாய முன்னேறும். சாதாரணமாக ஒரு வீட்டில் பெண் கல்வி கற்றிருந்தால் அந்த குடும்பமே படித்து விடும். கல்வி அறிவு மட்டுமல்ல நாகரீகமும் சேர்ந்து வளரும்.இந்த சமுதாயத்தில் பாதிக்கு மேலான  வேலைகளை பெண்கள்தான் செய்கிறார்கள்.ஆண்களை விட அதிகமாக வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யும் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படுகிறது.அதுபோல,அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. விடியல் பயணம் மூலம் மகளிர்களுக்கு இலவச பயணம்,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எந்தவித பிணையும் இல்லாமல் கடனுதவிகள் வழங்கப்படுகிறது.முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 1 முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவுகள் வழங்கப்படுகிறது.இதனால்,மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதோடு,தாய்மார்களின் பணிச்சுமையும் குறைகிறது.இதுபோன்ற எண்ணற்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்தும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசுக்கு பெண்கள் என்றும் உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து திட்டங்களையும் பெண்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு, குறிப்பாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய வலிமை அடைய வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சி  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 161 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,01,800ஃ வீதம் மொத்தம் ரூ.1.64 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களையும்,15 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கான தங்கத்தினையும்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்  திருமதி ஷீலா சுந்தரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் திரு.சீனிவாசன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கண்காணிப்பாளர் திருமதி யுவஸ்ரீ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 11, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ , மாணவிகளுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கு இணையதள வழியாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில்  இளங்கலை அறிவியல் B.Sc (Hospitality & Hotel Administration) பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் (Diploma) சேர்ந்து படித்திட விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை  சார்ந்தவருக்கு B.Sc (Hospitality & Hotel Administration)  மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பும், ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma in Food Production)  பட்டயப் படிப்பும் மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞர் (Craftsmanship Course in Food Production & Patisserie)  ஆகிய படிப்புகள் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition என்ற  நிறுவனமானது ISO 9001 2015 தரச்சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமையப் பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம் சர்வதேச Amercian Council of Business  அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும்  பிரான்ஸ் நாட்டில் உள்ள  Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில்  பதிமூன்றாவது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது. மேற்கண்ட நிறுவனத்தில் பயில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக  இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மொத்த மதிப்பெண்ணில் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க இப்படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தங்களது திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள் விமானத்துறை, கப்பல் துறை மற்றும் சேவை துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும்.ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000-  முதல் ரூ.35,000- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000-  முதல் ரூ.70,000-  வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் ww.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 11, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) வகுப்புகள் நடைபெற உள்ளது

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது.இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி மற்றும் எம்.எஸ்.சி நர்சிங் பட்டப் படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங், மற்றும் பொது செவிலியர் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்காக கால அளவு இரண்டு மாதமும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும்.  இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் ww.tahdco.com  என்ற முகவரியில் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 10, 2025

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் நான் முதல்வன் பினிஸிங் ஸ்கூல் திட்டத்தின்கீழ் தொழிலக பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு சிறப்பு சேர்க்கை முகாம்

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ்; வேலைவாய்ப்பு பயிற்சி  (PM INTERNSHIP) வழங்கும் திட்டத்தின் வாயிலான நடப்பாண்டில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 14,889 நபர்களுக்கு முன்னனி தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேர்வதற்கு தேவையான கல்வி தகுதியுடைய 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்பொறியாளர், இளங்கலை கலை, அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிக நிர்வாகம் மற்றும் பார்மஸி பட்டம் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 11.03.2025 செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இத்திட்டத்திற்கான சிறப்பு சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற 21 முதல் 24-வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்காலத்தில் 12 மாதங்களுக்கு உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.5,000- வீதம் வழங்கப்படும். மேலும் பயிற்சிக்காலத்தில் ஒருமுறை மட்டும் மானியமாக ரூ.6,000 வழங்கப்படும். இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவர்கள் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசியுடன் வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏற்கனவே தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றிருக்க கூடாது. மேலும் முழுநேர பணிசெய்பவராகவோ, முழுநேரக் கல்வி கற்பவராக இருக்ககூடாது.  இத்திட்டத்தில்  விண்ணப்பிக்க 12.03.2025 அன்று கடைசி நாளாகும்.மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம் மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்; (04562 -294755) என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் இணையம் மூலம் விண்ணப்பிக்க https://pminternship.mcg.gov.in/ என்ற வலைதளத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும், நான் முதல்வன் பினிஸிங் ஸ்கூல் (NMFS) என்னும் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சித்திட்டத்தில் இணைந்து பயிற்சி பெற விரும்புவோர் 16 வயது முதல் 45 வரை உள்ளவர்கள் அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் https://candidate.tnskill.tn.gov.in-இல் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இருதிட்டங்களிலும் விண்ணப்பிக்க விரும்புவோர் இம்முகாமில் கலந்துகொள்ளவும், கலந்துகொள்ள இயலாதவர்கள் மேற்காணும் வலைதளங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Mar 10, 2025

அழகாபுரி கிராமம் துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் ழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்  அவர்கள் ஆய்வு. 

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமம் துவக்கப்பள்ளியில் (10.03.2025) முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் ழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சித் தலைவர்  மாணவர்களுக்கு வழங்கப்படும் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

Mar 09, 2025

பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தின் 200-வது நாள் விழாவானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில்  (08.03.2025) பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தின் 200-வது நாள் விழாவானது      மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தின் நகரின் உடைய வடக்கு பகுதியில் இருக்கக்கூடியவர்கள் மிகவும் பாதிப்பு அடைவார்கள். அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் இருக்காது. அதே நேரத்தில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய தெற்கு பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் வளர்ச்சி குறைவாக இருக்கிறது.எனவே, எந்த ஒரு வளர்ச்சியும் சமநிலையோடு, நீடித்த நிலையான அனைத்து தரப்பு வளர்ச்சியும் உள்ளடக்கிய ஒரு முயற்சியாக தான் இருக்கவேண்டும்.புதிய பேருந்து நிலையமானது அரசு அதிகாரத்தின் மூலமாக இயங்க வைக்கக்கூடாது. அது  பொதுமக்களின் ஆதரவோடு தான் வரவேண்டும்.இந்த பேருந்து நிலையம் சரியாக செயல்பட வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக 20 கூட்டங்கள் நடத்தப்பட்டு,அதற்கான சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி பொதுமக்களே பேசி அதனை சரிசெய்தார்கள்.அமைச்சர் பெருமக்கள் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள்கள் உள்ளிட்டோர்களின் பேச்சுவார்த்தை மற்றும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த பேருந்து நிலையம் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட்டது.அதற்கு பின்பும் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதனுடைய நடைமுறை சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.எனவே, ஒவ்வொரு செயலும் பொதுமக்களுடன் இணைந்து மக்களுடைய கோரிக்கையின்  அடிப்படையில் அவர்களின் எந்த நலனையும் பாதிக்காத வகையில் தொடர்ச்சியாக செயல்பட்டு அனைவரும் இணைந்து மிகவும் சிறப்பாக 200 நாள் வந்திருக்கிறது.இந்த பேருந்து நிலையத்தில் கடைகள் பொதுமக்களுக்கு தேவைப்படுவதால் அதிகமான கடைகள் கொண்டு வர வேண்டும். மேலும், பேருந்து நிலையம் ஆரம்பித்த பிறகு இந்த நகரின் உடைய தெற்கு பகுதி நிறைய வளர்ச்சியை பெற வேண்டும். விருதுநகர் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க நகராட்சியாக மாற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.மாதவன், போக்குவரத்து அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 104 105 106 107 108 109 110 ... 121 122

AD's



More News