25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உலக தண்ணீர் தினமான 23.03.2025- அன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் 29.03.2025 அன்று அனைத்து  ஊராட்சிகளிலும் நடைபெறும் எனமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக தண்ணீர் தினமான 23.03.2025- அன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் 29.03.2025 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் எனமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான 23.03.2025 - அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் - கலைஞர் கனவு இல்ல திட்டங்களின் பயனாளிகள் தேர்வு மற்றும் திட்ட பணிகளை இறுதி செய்தல் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது - மேற்படி ஓத்திவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டமானது 29.03.2025 - அன்று நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

1. உலக தண்ணீர் தினத்தின் சுருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்
• வான்தரும் மழைநீரினை சேகரித்தல்.
• சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்துதல்.
• உடைந்த குழாய்களை சரி செய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல்.
• மறுசுழற்சிக்கு உட்படுத்துதல்.
• நிலத்தடி நீரை செறியூட்டுதல்.
• நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுக்கட்டுப்பட்டைத் தடுத்தல்.
• மரம் வளர்த்தலை ஊக்குவித்தல்,வீட்டுக்கொரு மரம் வளர்த்தல்.
• நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல்.
• நீhநிலைகளின் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல்.
• நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுதல்.
 2.  கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.
     (01.04.2024 முதல்28.02.2025 வரை)
 3.  கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல்.
 4.  சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்.
          சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல்,மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி,    
    தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி மாதம்  இருமுறை சுத்தம் செய்தல
;                 (பிரிதி மாதம் 5 - ம் தேதி மற்றும் 20 - ம் தேதி).

• தினமும் தகுந்த அளவு குடிளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல்.

• இதர பொருட்கள்  குறித்து விவாதித்தல்.

எனவே, 29.03.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News