25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் ரூ.52 இலட்சம் மானியத்தில் விவசாய இயந்திரங்களை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் ரூ.52 இலட்சம் மானியத்தில் விவசாய இயந்திரங்களை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், (19.03.2025) வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் துணை இயக்கம் 2024-25 என்ற திட்டத்தின் கீழ்  ரூ.99.51 இலட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரங்களை 17 விவசாயிகளுக்கு ரூ.52 இலட்சம் மானியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்.
அதன்படி, இன்று 10 டிராக்டர்கள், 4  பவர்டில்லர்கள்,  3 பவர் வீலர்கள்  என மொத்தம் 17 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

பின்னர், வேளாண் பொறியியல் துறை மூலம் நடத்தப்பட்ட “சூரிய மின்சக்தி ஆற்றலும் காலநிலை மாற்றமும் என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் மதுரை வேளாண் கல்லூரியைச் சேர்ந்த 40 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News