25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் (21.03.2025) விருதுநகர் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 19 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.55 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 50 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.25 இலட்சம் மதிப்பிலான முத்ரா கடனுதவிகளையும் என மொத்தம் ரூ.1.80 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள்  வழங்கினார்.மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக மகளிர்சுய உதவிக்குழுக்கள்,  மாற்றுத்திறனாளிகள்,  சிறு வணிகர்கள், மகளிர் தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர், மத்திய கால கடன், முத்ரா கடன்,  பண்ணை சாரா கடன், சம்பள கடன், வீட்டு வசதி கடன், முதலீட்டுக் கடன், குறு சிறு நடுத்தர தொழில் கடன் என சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் இந்த கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களான பேனா நிப், தீப்பெட்டி, திண்பண்டங்கள், பட்டாசு, பருத்தி சார்ந்த தொழில்களும், விவசாயம் சார்ந்த பொருட்களினுடைய வர்த்தகமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் வணிகங்கள், செய்தவற்கு உகந்த பகுதியாக இருக்கிறது. இங்கு நிறைய படித்த இளைஞர்கள், வேலைக்கான ஆட்கள் இருக்கக்கூடிய சூழலுடன் தமிழ்நாட்டிலேயே பெரிய அளவில் தொழில் புரியக்கூடிய மாவட்டமாக இருக்கிறது. மாவட்டத்தில் தொழில்களுக்கான மூலப் பொருட்களும், வர்த்தகம் செய்வதற்கான நிறைய வாய்ப்புகளும் இருக்கிறது. அதையெல்லாம் நன்கு பயன்படுத்திக் கொண்டு அனைவரும் சிறந்த தொழில் முனைவராக முன்னேறி சிறந்த பொருளாதாரத்தை பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.பா.செந்தில்குமார், துணைப்பதிவாளர்கள் திரு.குருசாமி, திரு.அந்தோணி மரிய டயர்ஸ், திரு. வீரபாண்டி, உதவி இயக்குநர்(கைத்தறி) திரு.வெங்கடேசலு, வங்கி பொது மேலாளர் திரு.சங்கரநாராயணன், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News