25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு செயல் திட்டங்களில் ஒன்றான “குழந்தைகள் இலக்கியத்”திருவிழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு செயல் திட்டங்களில் ஒன்றான “குழந்தைகள் இலக்கியத்”திருவிழா

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம் இணைந்து 20.03.2025 மற்றும் 21.03.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான “குழந்தைகள் இலக்கியத் திருவிழா”வினை சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S.,  அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (20.03.2025) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில்; சிறுவர்களுக்கான கதைகள், பொம்மலாட்டம், மன நல பயற்சிகள், சிறுவர் திரைப்படங்கள், மேஜிக், போன்ற நிகழ்ச்சிகளும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழுவிவாதம், குழந்தைகளின் வாசிக்கும் பழக்கம், கலகல வகுப்பறை, மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்தல் போன்ற பல்வேறு அமர்வுகளும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றது.உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு வாசிக்கக்கூடிய பழக்கத்தை ஒரு இயக்கமாக செய்கிறார்கள். ஒரு பிரச்சனை வந்த பிறகு தான் அதன் பாதிப்பை குறித்து பேசுகின்றோம். இன்று உலகம் முழுவதும் அதிகமாக பேசிக்கொண்டிருக்கக்கூடியது சுற்றுச்சூழல் பிரச்சனை. அது குறித்து இன்னும் கூட அவ்வளவு தீவிரமாக பேசப்பட வில்லை. இன்னும் ஒரு 20 ஆண்டுகள் கழித்து மனிதனுடைய அன்றாட வாழக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் போதுதான், அது குறித்து பேச ஆரம்பிக்கின்றோம். இன்று அது பாதிக்க தொடங்கி இருக்கிறது.

இன்று வெப்பநிலை என்பது சராசரி அளவைவிட அதிகமாக உள்ளது. வெப்பநிலை அதிகமாகும் போது அது உணவு உற்பத்தியை பாதிக்கின்றது. குப்பைகளும், கொட்டப்படும் கழிவுகளும் சுற்றுசூழலை மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு சாதாரண காய்ச்சல் கூட நுரையீரலை பாதிக்ககூடிய அளவிற்கு காற்று மாசு அடைந்துள்ளது.இது போல எந்த ஒன்றும் பிரச்சனை தீவிரமாக மாறுகின்ற போதுதான் அது தொடர்பாக நாம் பேசுகிறோம். இன்று உலகம் முழுவதும் எப்படி சுற்றுசூழல் பாதிப்பை பற்றி பேசுகின்றோமோ அதுபோல இன்னும் 10 ஆண்டுகளில் மிக முக்கியமான பேசு பொருளாக இருக்க போவது குழந்தைகள் செலவிடக்கூடிய திரைநேரம் (Screen time) குறித்ததாக இருக்கும்.கண் மருத்துவர்கள் முதல் குழந்தைகள் உளவியல் நிபுணர்கள் வரை கூறுவது குழந்தைகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திறது எனவும், குழந்தைகள் இளம் பருவத்தில் உடல், மூளை சார்ந்த வளர்ச்சி, எதிர்காலத்திற்கு தேவைப்படும் முக்கியமான பண்புகளான கற்பனை ஆற்றல், வாழக்கையின் இயல்புகளை குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் கதைகளை எளிமையாக சொல்லி தர வேண்டும்.

            ஏனென்றால் இன்று எந்த ஒன்றும் இயல்பாக கிடைத்துவிடுகிறது. நாம் கஷ்டப்பட்ட தேவையில்லை என குழந்தைகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். முந்தைய தலைமுறைக்கு ஏதாவது ஒன்று கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக காத்திருக்க வேண்டும், அதற்காக கஷ்டப்பட வேண்டும். அது கிடைக்காமல் போனால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய குழந்தைகள் இதனை பெரும்பாலும் எதிர்கொள்வதில்லை. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கு நேரடியாக எடுத்துச்சொல்ல வேண்டும் என்றால், அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தற்போது குழந்தைகளுக்கு இல்லை. படிக்கும் வயதில் குழந்தைகளுக்கு கவனச்சிதறல்களை தவிர்க்க முடியாது. ஆனால் எதன் மீது கனவத்தை சிதறடிக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். வாழ்க்கையில் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய பண்புகளை அப்படியே கற்றுக்கொடுப்பதை குழந்தைகள் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, பல்வேறு வடிவங்களையும், யுக்திகளையும் கையாளுவதுதான் இந்த குழந்தைகளுக்கான கற்றல் வழிமுறைகள்.குழந்தைகளுக்கான கற்றல் கற்பித்தல் வழிமுறைகளில் இசையும், இலக்கியமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இசைவடிவிலும், கதை வடிவிலும் தொடர்ச்சியாக ஒரு கருத்தை எடுத்து சொல்வதால் மனதில் பதியும் அளவிற்கு நிற்கிறது. நீதிக்கதைகளை தொடர்ச்சியாக படிக்கும் பொழுது எது நல்லதோ அது அவர்களின் மனிதில் பதிய வேண்டும்.

  அங்கு நூலகம், அருங்காட்சியம் ஆகியவை குழந்தைகளை மையப்படுத்தி தான் உள்ளது. இது போன்ற பல முயற்சிகளால் குழந்தைகளுக்கான கற்றல், கற்பித்தல் மிக சிறப்பாக நடைபெறுகிறது. அதை நம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும். குழந்தைகளுக்கு படைப்பாற்றாலை அதிகரிக்க வேண்டும். குழந்தைகளினுடைய உலகம், கதை, பாடல்கள், அறிவியல் செய்திகள், தன்னம்பிக்கை செய்திகள்  ஆகியவை இளம் வயதில் குழந்தைகளுக்கு எடுத்து கூறுவதற்கான வழிமுறைகள் குறித்து நிறைய எழுத்தாளர்கள் படைப்புகளை உருவாக்கி உள்ளனர்.எனவே, குழந்தைகளுக்கான கற்றல், கற்பித்தல் சூழ்நிலைகளை உருவாக்கி தருவது  பெற்றோர்கள், சமூகம், நிறுவனம் ஆகியவற்றின் கடமையாகும். அவற்றை குறித்து விரிவாக பேசுவதற்கும், நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைபள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களை இது போன்று வாசிப்பதற்கு சிறு கதைகளை  வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

நெருப்பின் முதல் துளி என்பது ஒரு சிறு பொறியாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட பொறியை குழந்தைகளுக்கு ஏற்ற வேண்டியது ஒவ்வொருவரினுடைய கடமையாகும். அது குறித்து நாம் விரிவாக பேசுவதற்கும், நிறைய அறிஞர்களினுடைய அனுபவங்களை ஆலோசனைகளை கேட்பதற்குத்தான் இந்த இரண்டு நாள் குழந்தைகள் இலக்கியத்திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.எனவே இதில் இருக்ககூடிய அறிவியல் பூர்வமான உரைகளை கேட்டு கற்றுக்கொண்டு நம் குழந்தைகளுக்கு கடத்தினால் ஆரோக்கியமான மிகச்சிறந்த ஒரு சமுதாயம் உருவாகும்.  எதிர்காலத்தில் வெற்றிகரமான ஒரு தொழில் நிபுணரையோ, மருத்துவரையோ, பொறியாளரையோ உருவாக்குவதை விட, அவர் சிறந்த ஒரு மருத்துவராக, சிறந்த பண்புள்ள பொறியாளராக, சிறந்த பண்புள்ள மனிதராக உருவாக்குவது மிக அவசியம். எனவே இவற்றை எல்லாம் புரிந்து கொள்வதற்கும் இது குறித்து  விவாதிப்பதற்கும் தான் இந்த நிகழ்ச்சி என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள் சிறப்புரையாற்றிய போது தெரிவித்ததாவது:
கற்பித்தல் என்பது ஆசிரியரிடமிருந்து குழந்தைகளும், குழந்தைகளிடமிருந்து ஆசிரியர்களும் கற்றுக் கொள்ளும் இடமாக பள்ளிகள் இருந்தால், கற்பித்தல் என்பது மிக அழகாக நடைபெறும். இதில் இசையும், ஓவியமும் மிகப்பெரிய பங்களிப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகின்றது.  அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளுக்கு தொடர்ந்து நல்ல கதைகளை எடுத்து கூற வேண்டும். அது  அவர்களது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு குழந்தைகளுக்கான கதைகளை எடுத்துக் கூறி விரிவாக உரையாற்றினார்.

இது போன்ற குழந்தைகள் இலக்கியத் திருவிழாவினை இங்கு வருகை தந்து இருக்கக்கூடிய அனைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், இன்று குழந்தைகளுக்காக நடைபெற்ற கதை சொல்லுதல் நிகழ்ச்சியில், கதையாசிரியர் திரு.நீதிமணி அவர்கள் மற்றும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்(சிறார் கதையாசிரியர், கதைச்சொல்லி) ஆகியோரும்,  பொம்மலாட்டம் நிகழ்ச்சியில்  பொம்மலாட்டக் கலைஞர், கதைச்சொல்லி திருமதி ரதி அவர்களும், சுடுமண் சிற்பங்கள் மற்றும் மண்பாண்டங்கள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் திரு.வீரராஜ் அவர்களும் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர்.இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியர்(பயிற்சி) திருமதி ராமசௌந்தரி,I A S., கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஸ்ரீதரன், கலசலிங்க பல்கலைக்கழக துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசிஆனந்த், முதல்வர்(லிங்கா குளோபல் பள்ளி) திருமதி அல்கா ஷர்மா, அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *