ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டமானது விவசாயிகள் தங்களிடம் இருக்கின்ற இயற்கை வளங்களை மேம்படுத்தி உரிய முறையில் வளங்களை பயன்படுத்தவும், பயிர் சாகுபடி முறையில் அதிகபட்ச உற்பத்திக்கான நுட்பங்களை பயன்படுத்தவும், பண்ணை கழிவுகளை உற்பத்தி நோக்கங்களுக்காக மறு சுழற்சி செய்யவும், காலநிலை மற்றும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு கறவை மாடு, கோழி, தேனீ வளர்ப்பு போன்ற கலவையான செயல்பாடுகள் மூலம் ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைக்க வழி செய்கிறது.2025-26-ம் ஆண்டுக்கான தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பு விருதுநகர் மாவட்டத்தில் 340 எக்டரில் செயல்படுத்திட ரூ.1.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக வேளாண்மைத் துறை மூலம் 340 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தது ஒரு ஏக்கர் நில உரிமை உடையவராக இருக்க வேண்டும். மேலும் தனது சொந்த செலவில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இனங்களான பயிர் செயல் விளக்கத்திடல், மண்புழு உர தொட்டி மற்றும் கால்நடை இனங்களான ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் தோட்டக்கலை இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்புப் பெட்டி போன்றவற்றை திட்ட வழி காட்டுதலின்படி அமைக்க வேண்டும்.இவ்வாறு ரூ.60 ஆயிரம் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை உருவாக்கிய விவசாயிக்கு பின்னேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எனவே, விருதுநகர் மாவட்ட விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம்.மேலும், தமிழக அரசின் சிறப்பினமாக இத்திட்டத்தில் தேர்வாகும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு மட்டும் கூடுதலாக 20 சதவீத சிறப்பு மானியத்துடன் எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.12 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும். ஆதி திராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,, I A S,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுவரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (18.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களைச் சார்ந்த 1286 குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்களைச் சார்ந்த 45 வழியோர குடியிருப்புகளுக்கான ரூ.1387.73 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், சாத்தூர் வட்டம், உப்பத்தூரில் கீழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், சாத்தூர் நகராட்சி பிரதான சாலையோரத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, சாத்தூர் வட்டம், சூரங்குடி கிராமத்தில் பட்டா வேண்டி விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரரின் வீட்டிற்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து விண்ணப்பதாரருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப்பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (18.07.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும், கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.கோட்டாட்சியர் தலைமையில் மாதாந்தோறும் கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் தவறாது கலந்து கொண்டு விவசாயிகளின் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. வனவிலங்குகளால் பயிர் சேதம் அதிகஅளவில் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், நிவாரணத்திற்கு நடவடிக்கை எடுத்து இழப்பீடு உடனடியாக வழங்கவும் துணை இயக்குநர், மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுத்தினார். வனவிலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் மற்றும் கிராம அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிப்காட் தொழிற் பூங்காவிற்கு கோவிலாங்குளம், வேளாண் அறிவியல் நிலையம் நிலம் கையகப்படுத்துவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பருத்தி காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தில் கொள்முதல் செய்தவற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை) அவர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.கால்நடைகளுக்கு காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுத்தினார்.மேலும், தென்னை பயிருக்கு காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு தோட்டக்கலை துணை இயக்குநர் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுத்தினார். சேதம் அடைந்துள்ள உலர்களங்களை சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரிவிக்குமாறு தலைமை அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டது.மானியத்தில் டிராக்டர் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுத்தப்பட்டது.சேத்தூரில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியர், சிவகாசி அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை, செயற்பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.கண்மாய்கள் மற்றும் நீர்வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்ற வரும்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அரசு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) திரு.தேவராஜ்,இ.வ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,) திருமதி நாச்சியார் அம்மாள், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ் மற்றும் தோட்டக்கலை துணை இயக்குநர் உட்பட பல துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நடையனேரி கிராமத்தில் (16.07.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 அமைச்சர் பெருமக்கள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.அதன்படி, முதல்நாளான நேற்று 15.07.2025 அன்று 6 இடங்களில் நடைபெற்ற முகாமில் 1080 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று சிவகாசி வட்டம், நடையனேரி கிராமத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும், இம்முகாமில், முதியோர் உதவித்தொகை வேண்டி மனு அளித்த இரண்டு விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும், பட்டா பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்குமாறும் தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.அதனை தொடர்ந்து, பட்டா நகல் வேண்டி விண்ணப்பித்த முதியவருக்கு உடனடியாக இணையவழி பட்டா நகலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாமானது நாளை (17.07.2025) விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், வடமலைகுறிச்சி (சிவஞானபுரம்) சமுதாயக்கூடத்திலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கடாசலபுரம் எஸ்.ஆர்.நாயுடு சமுதாயக்கூடத்திலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சுப்பிரமணியாபுரத்திலும், விருதுநகர் நகராட்சியில், வார்டு -1 லட்சுமி மஹால் புல்லலக்கோட்டை பகுதியிலும், சாத்தூர் நகராட்சி வார்டு -1 ராஜகோபால் திருமண மண்டபம் நடராஜ் தியேட்டர் ரோடு பகுதியிலும், இராஜபாளையம் நகராட்சி- வார்டு 1 ஏ.கே.டி.ஆர்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,18.07.2025 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சி வெள்;ர் பகுதியிலும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை கம்மவார் திருமண மண்டபம் நடராஜ் தியேட்டர் ரோடு, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், தெற்கு வெங்காநல்லூர் சமுதாயக்கூடத்திலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், குன்னூர் பத்திரகாளி திருமண மஹாலிலும், சிவகாசி மாநகராட்சி வார்டு எண் -3ல் விஜய சுந்தர மஹால் திருத்தங்கல் அரசு மருத்துவமனை அருகில், செட்டியார்பட்டி பேரூராட்சியில் இராமதவசி திருமண மஹாலிலும்,22.07.2025 அன்று அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆத்திப்பட்டி சமுதாயக்கூடத்திலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், பொம்மக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலத்திலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், அச்சன்குளம் சமுதாயக்கூடத்திலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், டி.வேலங்குடி ஊராட்சி அங்கன்வாடி மையம் அருகிலும், சிவகாசி மாநகராட்சி வார்டு -4 சூர்யா மஹாலிலும், திருவில்லிபுத்தூர் நகராட்சி வார்டு -5 திருமலை நாயக்கர பகுதியிலும்,23.07.2025 அன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், சத்திரரெட்டியாபட்டி சமுதாயக்கூடத்திலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சியிலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெற்றிலையூரணி பகுதியிலும், அருப்புக்கோட்டை நகராட்சி வார்டு-5ல் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மல்லாங்கிணறு பேரூராட்சியில் சாந்தி மண்டபம் கல்குறிச்சி மெயின்ரோட்டிலும், காரியாபட்டி பேரூராட்சியில் பேரூராட்சி திருமண மண்டபத்திலும்,24.07.2025 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், வெள்;ர் தொடக்கப்பள்ளியிலும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணன் கோவில் மண்படத்திலும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், தெற்கு வெங்காநல்லூர் வேட்டை பெருமாள் கோவில் திருமண மண்டபத்திலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், மூவரை வென்றான் மக்கள் மன்றத்திலும், விருதுநகர் நகராட்சி வார்டு எண் -5ல் லட்சுமி மஹால் புல்லலக்கோட்டை பகுதியிலும், சாத்தூர் நகராட்சி வார்டு எண் 5-ல் உள்ள எஸ்.கே.பேரடைஸ் திருமண மண்டபத்திலும்,25.07.2025 அன்று அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செட்டிக்குறிச்சி சமுதாயக்கூடத்திலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கே.செட்டிக்குளம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோணுகால் சமுதாயக்கூடத்திலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், ஆண்டியேந்தல் ஊராட்சி VPRC Building அருகிலும், சிவகாசி மாநகராட்சி வார்டு எண் 6-ல் சூர்யா மஹாலிலும், இராஜபாளையம் நகராட்சி வார்டு எண்-5ல் என்.ஆர்.கே.திருமண மஹாலிலும்,29.07.2025 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், காரிச்சேரி ஊராட்சி நடுநிலைப்பள்ளி மத்தியசேனையில், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டைப்பட்டி கிராம பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில், இராஜபாளையம் நகராட்சியில், அருள்புத்தூர் கிராம சமுதாயக்கூடத்தில், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், அயன்நத்தம்பட்டி கிராமள முத்தாலம்மன் திருமண மண்டபத்தில், அருப்புக்கோட்டை (நகராட்சி) வார்டு -6ல், தேவாங்கரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காரியாபட்டி (பேரூராட்சி) முகாம் 2-ல், அம்லா திருமண மஹாலில்,30.07.2025- அன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ரோசல்பட்டி முகாம் 1-ல் , சமுதாயக்கூடத்தில், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், நல்லி கிராமம், அஸ்வின் திருமண மஹாலில், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தாயில்பட்டி கிராமம் வார்டு 16-ல், வி.பி.சி. கட்டடத்தில், சிவகாசி மாநகராட்சி வார்டு 7-ல் ஆர்.ஆர்.மஹாலில், திருவில்லிபுத்தூர் நராட்சி வார்டு -6ல் முத்துச்சாமி நாடார் திருமண மஹாலில், செட்டியார்பட்டி பேரூராட்சி முகாம் 2-ல் நெல் அரசி வியாபாரி திருமண மஹாலில்,31.07.2025- சிவகாசி மாநகராட்சி, சுக்கிரவார்பட்டி கிராம தொடக்கப்பள்ளியில், திருவில்லிபுத்தூர் ஊராட்சி, பூவாணி கிராமம் வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டபத்தில், இராஜபாளையம் நகராட்சி, புத்தூர் கிராம சமுhயக்கூடத்தில், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி கிராமம் அழகாபுரி மக்கள் மன்றத்தில், விருதுநகர் (நகராட்சி) வார்டு 6-ல் பெரிய பள்ளி வாசல் திருமண மஹாலில், சாத்தூர் (நகராட்சி) வார்டு 6-ல் ராஜகோபால் திருமண மஹாலிலும், நடைபெறுகிறது.மேலும், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங் களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று (17.07.2025) ஆய்வு மேற்கொண்டார்.அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள். இவ்விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தவும் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தரிசனம் செய்ய வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும், வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்திடும் வகையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழு அமைக்கப்படவுள்ளது என்றும், ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.மேலும், சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், போதை வாஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துக்கூறி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும், தாணிப்பாறை அடிவாரத்தில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளது என்றும்;, சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும், வெளியூர் பேருந்துகள், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்;.சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் சென்று சாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.இந்த ஆய்வின் போது, காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., துணை இயக்குநர் மேகமலை புலிகள் காப்பகம் (திருவில்லிபுத்தூர்) திரு.தேவராஜ்.,இ.வ.ப., சிவகாசி கோட்டாட்சியர் திரு.பாலாஜி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (17.07.2025) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.27.05/-இலட்சம் மதிப்பிலான விபத்து மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் வழங்கினார்.கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடையும் பதிவு பெற்ற,பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளியின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை ரூ.5,00,000/- வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த திரு.பாண்டி த/பெ.முத்துக்குமார், திரு.சின்னமாரிமுத்து த/பெ.சகாதேவன், திரு.சம்பத்குமார் த/பெ.வேலுச்சாமி, திரு.பவுன்ராஜ், த/பெ.கருப்பையா மற்றும் திரு.கருப்பசாமி தஃபெ.சங்கிலி ஆகிய 5 கட்டுமானத் தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.25,00,000/- மதிப்பிலான உதவித்தொகைகள் பெறுவதற்கான உத்தரவினையும்,திரு.சோணமுத்து த/பெ.மாசிலாமணி என்ற பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளியின் சாலை விபத்து மரணத்திற்கு ரூ.2,05,000/- உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினையும், என ஆக மொத்தம் 6 கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.27,05,000/- மதிப்பிலான உதவித்தொகைகள் பெறுவதற்கான உத்தரவினை மரணமடைந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிதாஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கன்னிச்சேரி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துணை சுகாதார நிலைய புதிய மையங்கள், வட்டார சுகாதார அலகு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம் என மொத்தம் ரூ.5.95 கோடி மதிப்பிலான 14 புதிய மருத்துவ கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் (17.07.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி) முதுகலைத் தமிழ்த்துறை மற்றும் தமிழாய்வு மையம், இணைந்து நடத்தும் கரிசல் நிலம் சார்ந்த இரண்டு நாட்கள் நடைபெறும் நாடகப் பயிலரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா ,I A S ,அவர்கள் (17.07.2025) துவக்கி வைத்து உரையாற்றினார்.
ஏழாவது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலைக் கணக்கெடுப்பு மத்திய அரசின் 100 சதவீத நிதி உதவியுடன் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் மத்திய அரசின் ஆளுமைக்குட்டபட்ட கூட்டாட்சி பிரதேசங்களிலும் (All States and UTs) ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இக்கணக்கெடுப்பு தற்போது கிராம அளவில் கிராம நிர்வாக அலுவலர்களாலும் நகர்ப்புறங்களில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் களப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தின் சீரிய நோக்கம் சிறுபாசனப்பிரிவு சார்ந்த தெளிவான நம்பகத்தன்மையுடைய புள்ளி விவரத் தொகுப்பு உருவாக்கப்பட்டு, அவை நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த அடித்தளமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே ஆகும். இத்திட்டத்தின் முக்கிய செயல்பாடானது அனைத்து நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர்த் திட்டங்களை உள்ளடக்கிய (பெரும்பாலும் 2000 ஹெக்டேர் வரை -தனியார் உட்பட) சிறுபாசனத் திட்டங்களின் கணக்கெடுப்பு ஆகும்.முதல் சிறுபாசனக் கணக்கெடுப்பு 1986-87ஆம் ஆண்டை மேற்கோளாகக் கொண்டு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டு அதன் தகவல் தொகுப்பு 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதுவரை ஆறு சிறுபாசனக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆறாவது சிறுபாசனக் கணக்கெடுப்பு 2017-18ஆம் ஆண்டை மேற்கோளாகக் கொண்டு நடத்தப்பட்டு, சிறுபாசனக் கணக்கெடுப்பு நோக்கம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, நீர்நிலைக் கணக்கெடுப்பு சேர்த்து நடத்தப்பட்டு மே - 2023 ஆம் ஆண்டு தகவல் தொகுத்து வெளியிடப்பட்டது. தற்போது 2023-24 ஆம் ஆண்டை மேற்கோளாகக் கொண்டு 7-வது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலை கணக்கெடுப்பு, முதல் பெரிய மற்றும் நடுத்தர நீர்பாசனத் திட்டங்கள் கணக்கெடுப்பு மற்றும் முதல் நீருற்று கணக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.மேலும் இவ்விவரங்கள் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் நிலத்தடி நீர் வளங்களை மதிப்பிட பயன்படுத்தப்படுவதுடன் நீர்வள அமைச்சகத்தில் உள்ள பலபிரிவுகளில் இக்கணக்கெடுப்பு விவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தமிழ்நாடு மாநிலம் முழுவதும், விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களால் இப்பணி காகிதங்களை பயன்படுத்தாமல் கைப்பேசி மூலமாக தேசிய தகவல் மையம் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், பெத்துரெட்டியாபட்டி கிராமத்தில் வசிக்கும் திருமதி முனீஸ்வரி என்பவர் வீடு கட்டுவதற்காக மனு அளித்ததன் பேரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் (16.07.2025) பயனாளியின் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார்.கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.தமிழ்நாடு அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து வருகிறது.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024 - 2025 -ஆம் ஆண்டில் 11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலும், 2025-2026 - ஆம் ஆண்டில் 2237 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2025-26 ஆம் ஆண்டில் இது வரை மொத்தம் 189 பயனாளிகளுக்கு வீடுகட்டுதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 இலட்சம் மானியத்தில் கட்டப்பட்டுவரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியை சேர்ந்த, திருமதி முனீஸ்வரி க/பெ. விநாயகராஜ் என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வீடு கட்டுவதற்காக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்ததன் பேரில், அதனை பரிசீலனை செய்து அந்த பயனாளிக்கு இல்லம் தேடி சென்று கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பயன்பெற்ற திருமதி முனீஸ்வரி என்ற பயனாளி, கூலி வேலை செய்து வரும் நாங்கள், சொந்த வீடு கட்டுவற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில், தனது சிரமத்தை அறிந்து சரியான நேரத்தில், என் குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கியமைக்காகவும், வீடு கட்டுவதற்கான எங்கள் கனவை நனவாக்கிய முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தனது உணர்ச்சி பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டார்.