25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த  நபர்களின் குடும்பங்களுக்கு விபத்து மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினை    மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு விபத்து மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (17.07.2025) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த  6 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.27.05/-இலட்சம் மதிப்பிலான விபத்து மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் வழங்கினார்.
கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடையும் பதிவு பெற்ற,பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளியின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை ரூ.5,00,000/- வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த  திரு.பாண்டி த/பெ.முத்துக்குமார், திரு.சின்னமாரிமுத்து த/பெ.சகாதேவன், திரு.சம்பத்குமார் த/பெ.வேலுச்சாமி, திரு.பவுன்ராஜ், த/பெ.கருப்பையா மற்றும் திரு.கருப்பசாமி தஃபெ.சங்கிலி ஆகிய 5 கட்டுமானத் தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 இலட்சம்  வீதம்  ரூ.25,00,000/- மதிப்பிலான உதவித்தொகைகள் பெறுவதற்கான உத்தரவினையும்,

திரு.சோணமுத்து த/பெ.மாசிலாமணி என்ற பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளியின் சாலை விபத்து மரணத்திற்கு ரூ.2,05,000/- உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினையும், என ஆக மொத்தம் 6 கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.27,05,000/- மதிப்பிலான உதவித்தொகைகள்  பெறுவதற்கான உத்தரவினை மரணமடைந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிதாஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News