25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த  பண்ணையம் அமைக்கும் விவசாயிகள் ரூ.30,000/- பின்னேற்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் விவசாயிகள் ரூ.30,000/- பின்னேற்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டமானது விவசாயிகள் தங்களிடம் இருக்கின்ற இயற்கை வளங்களை மேம்படுத்தி உரிய முறையில் வளங்களை பயன்படுத்தவும், பயிர் சாகுபடி முறையில் அதிகபட்ச உற்பத்திக்கான நுட்பங்களை பயன்படுத்தவும், பண்ணை கழிவுகளை உற்பத்தி நோக்கங்களுக்காக மறு சுழற்சி செய்யவும், காலநிலை மற்றும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு கறவை மாடு, கோழி, தேனீ வளர்ப்பு போன்ற கலவையான செயல்பாடுகள் மூலம் ஆண்டு முழுவதும்  நிலையான வருமானம் கிடைக்க வழி செய்கிறது.2025-26-ம் ஆண்டுக்கான தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த  பண்ணைய அமைப்பு விருதுநகர் மாவட்டத்தில் 340 எக்டரில் செயல்படுத்திட ரூ.1.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வேளாண்மைத் துறை மூலம் 340 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தது ஒரு ஏக்கர் நில உரிமை உடையவராக இருக்க வேண்டும். மேலும் தனது சொந்த செலவில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இனங்களான பயிர் செயல் விளக்கத்திடல், மண்புழு உர தொட்டி மற்றும் கால்நடை இனங்களான ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் தோட்டக்கலை இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்புப் பெட்டி போன்றவற்றை திட்ட வழி காட்டுதலின்படி அமைக்க வேண்டும்.இவ்வாறு ரூ.60 ஆயிரம் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை உருவாக்கிய விவசாயிக்கு பின்னேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எனவே, விருதுநகர் மாவட்ட  விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம்.

மேலும், தமிழக அரசின் சிறப்பினமாக இத்திட்டத்தில் தேர்வாகும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு மட்டும் கூடுதலாக 20 சதவீத சிறப்பு மானியத்துடன் எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.12 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும். ஆதி திராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,, I A S,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News