25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 17, 2025

வெடி விபத்தில்உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகைக்கான காசோலைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், இ.குமாரலிங்கபுரம் ஊராட்சியில்  (16.07.2025) மாவட்டத்தில் வெவ்வேறு வெடி விபத்துக்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கும், நீரில் மூழ்கி மரணமடைந்தவருக்கும் என மொத்தம் 18 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  ரூ.48.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, , அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் மற்றும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கும்  நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, விருதுநகர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமம், மெ/ஸ்.பொம்மி பயர் ஒர்க்ஸ் பேக்டரி என்ற பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 29.01.2022 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த  ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த  திரு.ஆறுமுகம் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி நீதிமொழி என்பவருக்கும், நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த திரு.குபேரன் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி சசிதேவி மற்றும் (தாயார்) திருமதி சரஸ்வதி என்பவருக்கும், விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த திரு.தேவேந்திரன் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி சர்மிளாதேவி என்பவருக்கும் என உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.9 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும், வெடிவிபத்தில் காயமடைந்த  நாட்டார்மங்கலம் கிராமத்தை  சேர்ந்த திரு.கணேஷ்பாண்டி என்பவருக்கு ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும்,விருதுநகர் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் இயங்கி வந்த மெ/ஸ்.சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 07.06.2025 அன்று வெடிவிபத்தில் உயிரிழந்த அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தையை சேர்ந்த திரு.சங்கிலி என்பவரின் (மனைவி) திருமதி முத்து என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4,00,000-த்திற்கான நிவாரணத்தொகைக்கான காசோலையினையும்,சாத்தூர் வட்டம், சின்னகாமன்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த மெ/ஸ்.கோகுலேஸ் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் 01.07.2025 அன்று வெடி விபத்தில் உயிரிழந்த சிவகாசி வட்டம் மீனம்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.மகாலிங்கம் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி மகாலெட்சுமி என்பவருக்கும், அருப்புக்கோட்டை வட்டம், சூலக்கரையை சேர்ந்த திரு.வைரமணி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) முனிஸ்வரி என்பவருக்கும், சிவகாசி வட்டம், மத்தியசேனை கிராமத்தை சேர்ந்த திருமதி லட்சுமி என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.கருப்பசாமி என்பவருக்கும், சிவகாசி வட்டம், அனுப்பங்குளம் கிராமத்தை  சேர்ந்த திரு.செல்லப்பாண்டி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி வேல்மணி என்பவருக்கும், ஓ.கோவில்பட்டியை சேர்ந்த திரு.ராமமூர்த்தி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி கலா என்பவருக்கும், சிவகாசி வட்டம், சேர்வைகாரன்பட்டி கிராமத்தை  சேர்ந்த திரு.ராமஜெயம் என்பவரின் வாரிசுதாரரான (தாயார்) திருமதி மகாலட்சுமி என்;பவருக்கும், சேர்வைகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.நாகபாண்டி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி அழகு சித்ரா என்பவருக்கும்,  விருதுநகர் வட்டத்தை சேர்ந்த திரு.புண்ணியமூர்;த்தி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி காளீஸ்வரி என்பவருக்கும் என 8 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.32 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும்,வெடி விபத்தில் காயமடைந்த சிவகாசி வட்டம், மத்திய சேனை கிராமத்தை சேர்ந்த திரு.கருப்பசாமி என்பவருக்கும், விருதுநகர் வட்டம், கன்னிசேரி கிராமத்தை சேர்ந்த திரு.மணிகண்டன் என்பவருக்கும், சூலக்கரை கிராமத்தை சேர்ந்த திருமதி முருகலட்சுமி என்பவருக்கும் என 3 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000 /-வீதம் மொத்தம் ரூ.1.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும் என மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.47.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.மேலும், திருவில்லிபுத்தூர் வட்டம், அச்சம்தவிழ்ந்தான் கிராமத்தில் வசிக்கும் திரு.சிவஞானபாண்டியன் என்பவரின் மகன் செல்வன்.விஜயகுமார் (வயது -15) என்பவர் கடந்த 31.03.2024 அன்று நீரில் மூழ்கி இறந்ததற்கு அவரின் வாரிசுதாரரான தந்தைக்கு  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும்,என ஆக மொத்தம் 18 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  ரூ.48.50 இலட்சத்திற்கான நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.

Jul 17, 2025

விருதுநகர் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர்  மற்றும் சாத்தூர்  ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (16.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்  பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் அருங்காட்சியகங்கள் துறை சார்பில், புதிய அருங்காட்சியகம் ரூ.6.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவியல் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ரூ.46.63 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில், கனிமவள நிதியின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தினையும்,பின்னர், பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.75 இலட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை புதிதாக கட்டப்பட்டு வருதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.அதனை தொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், ஊராட்சி அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Jul 16, 2025

உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  (15.07.2025) உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், ஆலடிப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.நவாஸ்கனி அவர்கள் முன்னிலையில்நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடியவர்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கக்கூடியவர்கள், முதலில் நீங்கள் மக்களிடத்தில் செல்லுங்கள். மக்களிடத்தில் இருந்து துவங்குங்கள். மக்கள் என்ன வைத்திருக்கிறார்களோ அவர்களிடத்தில் இருந்து உங்கள் திட்டங்களை தீட்டுங்கள். அவர்களோடு இணைந்து பயணம் செய்யுங்கள்.அவர்களுடைய குறைகளை கேளுங்கள் என்று கூறினார்கள்.அந்த வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மக்களுடைய பிரச்சினைகளை ஒவ்வொரு ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் இருக்கக்கூடிய கிராமங்களில் உங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை நேரடியாக அரசினுடைய அத்தனை துறைகளும் ஒரே இடத்திற்கு வந்து உங்கள் குறைகளை கேட்டு அவற்றை தீர்க்கக்கூடிய முகம்களை தமிழ்நாடு முழுவதும் இன்று நடத்திக் கொண்டிருக்கிறது.தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெற உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மக்களின் கருத்துக்களை எல்லாம் உள்வாங்கி கொண்டு, அவர்களின் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து, தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ ஒரு லட்சம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் முகாம் நடைபெறும் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் துண்டுப்பிரசுரம் (Pயஅphடநவள) மற்றும் விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான மற்றும் தேவைப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து முகாமில் கலந்து கொண்டு பயனடைய உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.ஆலடிப்பட்டியை சுற்றியுள்ள ஊர்கள்  அனைத்தும் சேர்ந்து சுமார் ஏறத்தாழ 1500 குடும்பங்கள் இருக்கின்றன. இந்த குடும்பங்கள் எல்லாம் அவர்களுடைய கோரிக்கையை ஒரே இடத்தில் தருவதற்காக தான் இந்த முகாம் நடைபெறுகிறது.மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். மேலும், மக்கள் அனைவரும் தங்களுடைய குறைகளை இந்த முகாமில் தெரிவித்து பயன்பெறலாம். இந்த முகாமில் நீங்கள் நன்றாக உபயோகப்படுத்தும்படி நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமானது இன்று கடலூர் மாவட்டத்தில்  உள்ள சிதம்பரம் நகராட்சியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த மகத்தான திட்டத்தின் முன்னாடியாக மக்களுடன் முதல்வர் முகாம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து,  மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று குறைகளை கேட்டறிந்து அதனை சரிசெய்யும் அளவிற்கான சிறப்பான திட்டமாக உள்ளது.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில்,  உங்களுடன் ஸ்டாலின் என்ற  சிறப்பு முகாம்கள் ஜீலை 15 ஆம் தேதி முதல் துவங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை 349 முகாம் நடைபெற உள்ளது.  இம்முகாமில் வரும் விண்ணப்பங்களை சரியான முறையில் விசாரணை செய்து தீர்வுகாண உள்ளனர். இதில் முக்கிய சிறப்பு என்னவென்றால் தன்னார்வலர்கள் இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் பற்றிய கருத்துக்களையும், முகாமில் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை முகாம் நடைபெறுவருதற்கு முன்பாகவே வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து விண்ணப்பங்களை கொடுத்துள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெண்கள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெற வேண்டும் எனவும்,இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள  முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து  தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

Jul 16, 2025

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆமணக்குநத்தம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற முகாமினை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (15.07.2025) உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில்  தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆமணக்குநத்தம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களைத் தேடி அரசு அதிகாரிகள் சென்று அவர்களுடைய குறைகளை கேட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் மக்களுக்கு உரிய தீர்வை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.அதனடிப்படையில், இன்று தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெற உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இம்முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். பின்னர், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும்.எனவே, இம்முகாமினை அனைத்து பொதுமக்களும் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமானது இன்று கடலூர் மாவட்டத்தில்  உள்ள சிதம்பரம் நகராட்சியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த மகத்தான திட்டத்தின் முன்னாடியாக மக்களுடன் முதல்வர் முகாம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து,  மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று குறைகளை கேட்டறிந்து அதனை சரிசெய்யும் அளவிற்கான சிறப்பான திட்டமாக உள்ளது.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில்,  உங்களுடன் ஸ்டாலின் என்ற  சிறப்பு முகாம்கள் ஜீலை 15 ஆம் தேதி முதல் துவங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை 349 முகாம் நடைபெற உள்ளது.  இம்முகாமில் வரும் விண்ணப்பங்களை சரியான முறையில் விசாரணை செய்து தீர்வுகாண உள்ளனர். இதில் முக்கிய சிறப்பு என்னவென்றால் தன்னார்வலர்கள் இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் பற்றிய கருத்துக்களையும், முகாமில் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை முகாம் நடைபெறுவருதற்கு முன்பாகவே வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து விண்ணப்பங்களை கொடுத்துள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெண்கள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெற வேண்டும் எனவும்,இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள  முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து  தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, இம்முகாமில் பட்டா வேண்டி விண்ணப்பித்தவருக்கு உடனடியாக மனுவை பரிசீலனை செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், நத்தம் பட்டா மாறுதல் உத்தரவினை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.மேலும், புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரம் மற்றும்  உயிர் உரங்களையும்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

Jul 15, 2025

விருதுநகர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர்  நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  (14.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகள், சேவைகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு, அப்பணிகள் முறையாகவும், அரசு விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து வருகின்றனர்.அதன்படி, விருதுநகர் அ.ச.ப.சி.சி. நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், விருதுநகர் அகமது நகரில் அமைந்துள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் தயாரிக்கும் உணவுக்கூடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு உணவுப்பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், சுற்றுப்புறம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் நகராட்சி அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும்  பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.பின்னர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினை சுற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, வளாகத்தை சுற்றி திடக்கழிவு மேலாண்மையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, நகராட்சி அலுவலர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Jul 15, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (14.07.2025) “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள்  செய்தியாளர் சந்திப்பில் உரையாடினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, தீர்வு காணும் வகையில் அனைத்து  கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்புத் திட்டத்தை  15.07.2025 அன்று தொடங்கி வைக்க உள்ளார்கள்.தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெற உள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டமானது  நாளை 15-ம் தேதி  கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.அதனைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால்  துவக்கி வைக்கப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில், இம்முகாம்கள் 15.07.2025 முதல் 07.11.2025 வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளான 15.07.2025 அன்று ஊரகப்பகுதிகளில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆமணக்கு நத்தம், திருச்சூழி ஊராட்சி ஒன்றியம் ஆலடிப்பட்டி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் கீழ கெப்பு லிங்கம்பட்டி,  நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் மறையூர் ஆகிய 4 இடங்களிலும்,நகரப்பகுதிகளான சிவகாசி மாநகராட்சி வார்டு 1 விஜய சுந்தர மஹால், திருவில்லிபுத்தூர் நகராட்சி வார்டு 1 பெருமாள்பட்டி நாடார் திருமண மண்டபம் ஆகிய 2 இடங்களிலும் என மொத்தம் 6 இடங்களில்  முகாம்கள் துவங்கி வைக்கப்பட்டு தொடர்ந்து முகாம்கள் நடைபெறவுள்ளது.உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.இம்முகாமிற்கு முன்னோடியாக முகாம் நடைபெறும் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் துண்டுப்பிரசுரம் (Pamphlets)மற்றும் விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான மற்றும் தேவைப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து முகாமில் கலந்து கொண்டு பயனடைய உரிய விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.இதுவரையில் 36,663 துண்டுப்பிரசுரங்கள்  மற்றும் விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும், இம்முகாம்களின் சிறப்பு நிகழ்வாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள  முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து  தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Jul 15, 2025

தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாமல் இருக்கும் பெரிய வகை உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 இலட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது என்றும், அதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.“உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழுவின் முதலாம் காலாண்டிற்கானக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அன்று (11.07.2025) மாலை மாவட்ட ஆட்சியரகத்தின் சிறுகூட்டரங்கில் நடைபெற்றது. உணவு பாதுகாப்புத் துறையின் செயல்திறனைக் கூராய்வு செய்த பின்னர் உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளை உணவு வணிகர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கி உணவு பாதுகாப்புத் துறையின் அலுவலர்கள் அமுல்படுத்த வேண்டும் எனவும், உணவு வணிகர்களும் அச்சட்டத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றி நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.மேலும், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாமல், மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களை மட்டும் உணவு விநியோகிக்கவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தும் மிகச்சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு, அதாவது வருடாந்திர விற்றுக்கொள்முதல் ரூ.12 இலட்சத்திற்கும் மேற்பட்ட உணவு வணிகர்களுக்கு,தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 இலட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது என்றும், அதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்றும், அவ்விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையிலான நியமன அலுவலர் உள்ளடக்கிய குழுவினர் பரிசீலனை செய்து, கூட்டாய்வுக்குழு சம்பந்தப்பட்ட உணவகத்தினை கள ஆய்வு செய்து, தமது பரிந்துரையை உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு சமர்ப்பிக்கும் என்றும்,அதன் பின்னர், மாநில அளவிலான பரிசீலனைக் குழு பரிசீலித்து, மாவட்டத்திற்கு தலா ஒரு பெரிய உணவகத்தையும், சிறு உணவகத்தையும் சிறந்த உணவகங்களாகத் தேர்ந்தெடுக்கும் என்றும் பேசினார்.சிறந்த உணவகங்களுக்கான விருதில் பங்கேற்க அவசிமானத் தகுதிகள்:1. விண்ணப்பதாரர் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற்று, அது நடப்பில் இருக்க வேண்டும்.2. விண்ணப்பதாரரின் உணவகத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர் உணவு பாதுகாப்பில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.3. விண்ணப்பதாரரின் உணவகத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் தொற்றுநோய்த் தாக்கமற்றவர்கள் என்பதிற்கான மருத்துவச் சான்று அவசியம் இருக்க வேண்டும்.4. விண்ணப்பதாரரின் உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சுகாதாரத் தணிக்கை மேற்கொண்டு, சுகாதார மதிப்பீட்டுச் சான்று (Hygiene Rating) பெற்றிருக்க வேண்டும்.5. விண்ணப்பதாரரின் உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அதிக ஆபத்துள்ள உணவு வணிக வகை;கான தணிக்கை (High Risk Audit by Third-Part Audit Agency)  மேற்கொண்டு அறிக்கை வைத்திருக்க வேண்டும்.6. விண்ணப்பதாரர் தமது உணவகத்தை உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் வழங்கப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியல் மூலம் தாமே தணிக்கை மேற்கொண்டு, அதனை சமர்ப்பிக்க வேண்டும்.எனவே, அனைத்து உணவு வணிகர்களும் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் ஆகியவற்றைத் தவிர்த்து, மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களைப் பயன்படுத்தி, சுற்றுப்புற சூழலை மேம்படுத்த உதவுவதுடன், தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையின் விருதையும் வெல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும்,மேலும், விபரங்களுக்கு விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியரகத்தின் முதல் மாடியில் அறை எண்: 116 & 118-ல் உள்ள மாவட்ட உணவு பாதுகர்ப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தினை அணுகலாம் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Jul 15, 2025

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 18.07.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 18.07.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BAVAN, TVS SUNDARAM BRAKE LININGS LIMITED, DEVENDRAN PLASTICS, ANAAMALAIS TOYOTA, BHARTI AIRTEL LIMITED போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I., டிப்ளமோ மற்றும்  பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 18.07.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது  மேலும் இச்சேவையானது  முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.              இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.              தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., தெரிவித்துள்ளார்.

Jul 15, 2025

சதுரகிரி திருவிழாவினையொட்டி, வத்திராயிருப்பு பகுதியில் வரும் 17.07.2025 அன்று காலை 11 அணியளவில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) கோவிலின் ஆடிப்பூரம் தேர்த்திருவிழா மற்றும் மதுரை மாவட்டத்தின் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலின் நடைபெறவுள்ள ஆடி அமாவாசை திருவிழா ஆகிய தினங்களில் விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அழகாபுரி, தாணிப்பாறை ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள தற்காலிக உணவுக் கடைகள், அன்னதானங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், தத்தமது உணவு வணிகத்திற்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும், தவறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் . “விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) கோவிலில் ஆடிப்பூரம் தேர்த்திருவிழா 28.07.2025 (திங்கள்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தின் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலில் 24.07.2025 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. அத்தினங்களில் விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, தாணிப்பரறை ஆகிய இடங்களில் தற்காலிக உணவுக் கடைகள் அதிகம் அமைக்கப்படவும், அன்னதானங்கள் வழங்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அவ்வாறு அமைக்கப்படவுள்ள தற்காலிக உணவுக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் அன்னதானங்களின் பொறுப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் மற்றும் பின்வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் முக்கிய நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.1. அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் https://foscos.fssai.gov.in  என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தினைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.2. அன்னதானம் வழங்குவோர், தாம் சமையலுக்குப் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் நுகர்வோர்களுக்குக் குடிக்க வழங்கும் தண்ணீர் ஆகியவற்றை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அல்லது பொது சுகாதாரத் துறை பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும். மேலும், முன் அனுமதி இல்லாமல் தனியார் இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறு போன்ற நீராதாரங்களில் தண்ணீர் எடுத்து சமையலுக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தக்கூடாது.3. சாப்பாடு, வடை, பஜ்ஜி போன்ற உடனே உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை சமைத்து விற்பவர்கள் அல்லது உணவுப் பொருட்களை விற்பனை மட்டும் செய்பவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, ஈக்கள் மற்றும் அசுத்தம் இல்லாத சுகாதரமான சூழலில் அவற்றை தயாரித்து, பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும்.4. அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடாது.5. சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். பயன்படுத்தி மீதமான ஆறிய நிலையில் உள்ள எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.6. பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் அதன் தயாரிப்பு நாள், காலாவதி நாள், உணவு பாதுகாப்பு உரிமம் எண் உள்ளிட்ட அனைத்து லேபிள் விபரங்களை அவசியம் அச்சிட்டிருக்க வேண்டும்.7. உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் அனைத்துப் பணியாளர்களும் டைபாய்டு மற்றும் மஞ்சள்காமாலைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு, “தொற்றுநோய்த் தாக்கமற்றவர்களாக” இருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும்.8. காலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட் எந்தவகை பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. மேலும், கெட்டுப்போன அல்லது பழைய உணவுகளை விற்பனை செய்யக்கூடாது.9. டைனிங் டேபிள் மற்றும் வளாகத்தினை சுத்தம் செய்யும் நபர்கள் சாப்பாடு பரிமாறக்கூடாது. திருவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, அப்பகுதி உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் 09.07.2025 அன்று திருவில்லிபுத்தூரில் நியமன அலுவலரது தலைமையில் நடைபெற்றது.அதுபோல், சதுரகிரி திருவிழாவினையொட்டி, வத்திராயிருப்பு பகுதியில் வரும் 17.07.2025 அன்று காலை 11 அணியளவில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. எனவே, அன்றைய தினம் நடைபெறவுள்ள பயிற்சி முகாமில் வத்ராயிருப்பு, தாணிப்பாறை, அழகாபுரி உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த உணவு வணிகர்கள் மற்றும் அன்னதானம் வழங்கவுள்ளவர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது” என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்தார்.

Jul 15, 2025

தமிழ்நாட்டைச் சேர்ந்த  புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் சீக்கிய மதத்தினர் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்

  தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ. 10,000/-வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்புனித பயணம் புத்த மத தொடர்புடைய 1. பீகாரில் உள்ள புத்த கயா, 2. உத்திரபிரதேசத்தில் உள்ள குசிநகர், 3. வாரணாசியில்உள்ள சாரநாத் கோவில், 4. பீகாரில் உள்ள ராஜ்கிர், வைஷாலி, 5. நேபாளத்தில் உள்ள லும்பினிபோன்ற புனித தலங்களையும், சமண மத தொடர்புடைய 1. இராஜஸ்தானில்உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமண கோவில், ஜெய்சால்மர் சமண கோவில், 2. ஜார்கண்டில் உள்ள சிக்கர்ஜி 3. குஜராத்தில் உள்ள பாலிடனா. 4. பீகாரில் உள்ள பவபுரி சமண கோவில் போன்ற இடங்கள்.  5. கர்நாடகாவில் சரவணபெலகோலா போன்ற புனித தலங்களையும்மற்றும் சீக்கிய மத தொடர்புடைய  1. பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகர்சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமா சாகிப், 2 பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப்(குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் (மஹாராஷ்டிரா) போன்ற இடங்கள், 3. பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீ நான்காணா சாகிப், குருத்வாரா ஸ்ரீ சச்சா சௌதா, மண்டி சுகர்கானா, குருத்வாராஸ்ரீ பஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப் போன்ற புனித தலங்களையும்உள்ளடக்கியது.இத்திட்டத்தின் கீழ் 01.07.2025க்குபிறகு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும்.  இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்டஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்.மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரிஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம்,சென்னை-600 005 என்ற முகவரியினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

1 2 ... 67 68 69 70 71 72 73 ... 121 122

AD's



More News