25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


சமீபத்திய நிகழ்வுகள்

Dec 27, 2023

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் 66 ஆம் ஆண்டு விழா

டிசம்பர் 30 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு காந்திகலைமன்றம் பி.எஸ்.கே ருக்மணி அம்மாள் அரங்கத்தில் திரு.பி.ஆர்.வெங்கட்ராம ராஜா அவர்கள் தலைமையில் கவிஞர். கிருஷ்ண பிரசாத் அவர்கள் மருத்துவர். த.அறம் அவர்கள் திரு.அ.லட்சுமிகாந்தன் அவர்கள், திரு.P.லோகநாதராஜா அவர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள். திரு. முனைவர் வி.ப.ஜெயசீலன் (விருதுநகர் ஆட்சத் தலைவர்) அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்.இலண்டனில் உலகளாவிய விருது பெற்ற டாக்டர் கு.கணேசன் அவர்களுக்கு பட்டமளித்தல் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகள் அளித்தல் கவிதைப் போட்டை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தல் நூல்கள் தேர்வு செய்த நடுவர்களுக்கு பாராட்டு, நூல்கள் வெளயீடு வழங்க உள்ளனர். வரவேற்புரை கொ.மா.கோ. இளங்கோ, மன்றத் தலைவர் குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம், நன்றிஉரை V.K. பாரதி பீமா.

Dec 27, 2023

நம் நகரில் மாநில கூடைப்பந்து போட்டி

நம் நகரில் மாநில கூடைப்பந்து போட்டி இராஜபாளையம் சிட்டி பேஸ்கெட் பால் கிளப் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கூடைபந்து போட்டியில் கோவை, மதுரை, தேனி, போடி, செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 18 அணிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இராஜபாளையம் அய்யனார் கோயில் ரோடு ஆனந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜீக்கள் கல்லூாயில் உள்ள இரண்டுஆடுகளங்களில் போட்டிகள் நடைபெறகின்றன.முன்னாள் இந்திய கூடை பந்தாட்ட வீரர் ராமசுப்பிரமணிய ராஜா நேற்று போட்டியை துவக்கி வைத்தார். சந்திர ராஜா.தலைமை வகித்தார்.  டிசம்பர் 29ம் தேதி நடைபெறும் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.31,000தொகையுடன் டிராபி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை இராஜபளையம் சிட்டிபேஸ்கட் பால் தலைவர் ராம்குமார் ராஜா, செயலாளர் பீமானந்த் பொருளாளர் ராம்சிங் ராஜா செய்துள்ளனர்.

Dec 25, 2023

பேரிகார்டுகளால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

இராஜபாளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மாயூரநாதர் சாமி கோவில் அடுத்து பள்ளி முன்பு போலிஸ் சார்பில் ரோட்டின் குறுக்கே பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த இரண்டு டுவீலர் விபத்துகளை காரணம்காட்டி இதற்கு 100 மீட்டர் அருகே வளைவில் தடை ஏற்படுத்தும் விதமாக மற்றொரு பேரிகார்டை போலீசார் அமைத்துள்ளனர். இதனால் தொலைதூரங்களில் இருந்து வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகி வருகின்றன.நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் இதில் கவனம் செலுத்தி தடை ஏற்படும் போரிகார்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பால தடுப்பு சுவர் உடைந்துள்ளதால் குறுகலாக மாறியது. எச்சரிக்கைக்காக தற்காலிக கம்பிகளை ரோட்டில் ஒரு அடி உள்பகுதி வைத்துள்ளனர். பல்வேறு பகுதியில் இருந்து நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் திடீரென எதிர்ப்படும் பள்ளம், தெரியாமல் தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதன் அருகே ரோட்டோரங்களில் வரிசையாக நிறுத்தப்படும் லாரிகளும் இடைஞ்சலை அதிகப்படுத்துகின்றன. இரவில் இதன் நிலை இன்னும் சிக்கல், மாதக்கணக்கில் தீர்வின்றி தொடரும் பாதிப்பை தடுக்க விரைந்து சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Dec 24, 2023

பாலித்தீன் பைகளில் உள்ள உணவுப் பொருள்களை சாப்பிட்டு பாதிப்பிற்கு உள்ளாகும் வன விலங்குகள்

அய்யனார் கோவில் ஆறு அதன் அருகே அமைந்துள்ள நீர்காத்த அய்யனார் கோவில் என பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சுற்றுலா தளமாக உள்ளது. பொது மக்கள் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களில் உணவுகளை கொண்டு வந்து வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதுடன் கழிவுகளை ஆற்றின் அருகே போட்டு செல்கின்றனர்.இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வனப்பகுதியில் யானை, மான், கரடி, காட்டெருமை, சாம்பல் நிற அணில் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளது.இளைஞர்கள் ஆற்றின் அருகே சமைத்து போதையில் பாட்டில்களை உடைத்து விலங்குகள் நடமாடும் பகுதியில் வீசிசெல்வதும் தொடர்கிறது. குருங்குகள், இரையைத் தேடி காட்டிற்குள் செல்லாமல் அங்கு கீழே விழுந்து கிடக்கம் பாலிதீன் பைகளில் உள்ள உணவுகளை பையுடன் சேர்த்து சாப்பிடுகிறது. இதனால் வனவிலங்குகள் பாதிப்பிற்குள்ளாகின்றன்.இதைத் தவிர்க்க ஆற்றிற்கு வருபவர்களை நன்றாகக் கண்காணித்தும் சோதனைக் கூடத்தை தீவிரக் கண்காணிப்பிற்கு வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என வனவிலங்கு சமூக அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். எத்தனை கண்காணிப்பாளர்கள் இருப்பினும் மக்களாகிய நாமும் இவற்றை கடைபிடிக்க வேண்டும்.

1 2 ... 11 12 13 14 15 16 17 18 19 20

AD's



More News