தெருநாய் வாழ்க்கையே போராட்டம் தான்.
தெருநாய்களை பார்த்தாலே பிடிக்கவில்லையா??இன்னும் சிலருக்கு பார்த்தாலே பயமாகவும், அருவருப்பாகவும் இருக்கிறதா??அழித்துவிட நினைக்கிறீர்களாஒரு நிமிடம் அவர்கள் வாழ்க்கையை தெரிந்துக் கொள்ளுங்கள் நாம் எல்லாம் ஒருவேளை சாப்பிடவில்லை என்றால்கூட உயிரே போய்ட்ற மாதிரி ஆர்பாட்டம் செய்வோம் ஒருவேளை அம்மாவோ அல்லது நம் வீட்டில் இருக்கும் யாராவது சமையல் செய்யவில்லை என்றால் மிகக் கடுமையான கோபம் வரும்.
உணவில் கொஞ்சம் சுவை குறைந்தால் தட்டைக் கூட தூக்கி வீசுவீர்கள். ஆனால் அவர்களோ பல நாள் பசியோடு தெருவில் சாப்பாடு இல்லாமல் ரோட்டில் போகின்ற வருபவர்களின் கையையும், முகத்தையும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு யாராவது ஏதாவது கொடுத்து விடமாட்டார்களா நம் பசி போய்விடாதா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன் .அவர்கள் மேல் குறை சொல்லாமல் கொஞ்சம் உணவையும், அன்பையும் கொடுங்கள் அவர்களை பிடிக்காதவர்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லாமல் தள்ளிச்சென்று விடுங்கள். அவர்களும் நம்மை துன்பப்படுத்த மாட்டார்கள் அவர்களை நாமும் துன்பப்படுத்த மாட்டோம். பல நாள் பசியோடு இருக்கும் ஜீவனை.“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல” நம் கல்லை எடுத்து அடிப்பதால் தான் அவர்கள் நம்மை கடிக்க வருகிறார்கள். பேசமுடியாத அந்த ஜீவன்களின் மனவேதனையை புரிந்து கொள்ளுங்கள்.
0
Leave a Reply