25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பேரிகார்டுகளால் தேசிய நெடுஞ்சாலையில்  விபத்து
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பேரிகார்டுகளால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

இராஜபாளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மாயூரநாதர் சாமி கோவில் அடுத்து பள்ளி முன்பு போலிஸ் சார்பில் ரோட்டின் குறுக்கே பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த இரண்டு டுவீலர் விபத்துகளை காரணம்காட்டி இதற்கு 100 மீட்டர் அருகே வளைவில் தடை ஏற்படுத்தும் விதமாக மற்றொரு பேரிகார்டை போலீசார் அமைத்துள்ளனர். இதனால் தொலைதூரங்களில் இருந்து வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகி வருகின்றன.

நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் இதில் கவனம் செலுத்தி தடை ஏற்படும் போரிகார்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பால தடுப்பு சுவர் உடைந்துள்ளதால் குறுகலாக மாறியது. எச்சரிக்கைக்காக தற்காலிக கம்பிகளை ரோட்டில் ஒரு அடி உள்பகுதி வைத்துள்ளனர். பல்வேறு பகுதியில் இருந்து நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் திடீரென எதிர்ப்படும் பள்ளம், தெரியாமல் தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதன் அருகே ரோட்டோரங்களில் வரிசையாக நிறுத்தப்படும் லாரிகளும் இடைஞ்சலை அதிகப்படுத்துகின்றன. இரவில் இதன் நிலை இன்னும் சிக்கல், மாதக்கணக்கில் தீர்வின்றி தொடரும் பாதிப்பை தடுக்க விரைந்து சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News