25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமீபத்திய நிகழ்வுகள்

Jun 01, 2023

ராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி திட்டப்பணிகள்

சிவகாசிமாநகராட்சி, ராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நாள் ஒன்றுக்கு ஒருநபருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் அதிகாரிகள் தெரிவித்தனர்..ராஜபாளையம்நகராட்சியில் முடங்கியாறு குடிநீர் மூலம் தினசரி 80 லட்சம்லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. இந்த நீர் 28 ஆயிரம்குடிநீர் இணைப்புகளுக்கு தினசரி நபர் ஒருவருக்கு 61 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம்செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.197.79 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம்தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் குழாய் அமைக்கும் பணிகள்முடிந்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காகபுதிதாக 14 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று சங்கரன்கோவிலில் நடந்த விழாவில் ராஜபாளையம், சிவகாசி உட்பட ரூ.570 கோடி மதிப்பிலான நிறைவடைந்த தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் சிவகாசி மாநகராட்சிக்கு தினசரி 80 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க உள்ளது. ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் வீதம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என ஆணையர் என்.சங்கரன் தெரிவித்தார்.ராஜபாளையம் நகராட்சியில் தற்போது4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினசரி 1.30 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்க உள்ளது. இதன் மூலம் நகராட்சியில் தினசரி குடிநீர் விநியோகிக்கப்படுவதுடன், ஒரு நபருக்கு தினசரி 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படும். இன்னும் ஒரு மாதத்தில் அனைவருக்கும் தடையின்றி தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தெரிவித்தார்.

Apr 17, 2023

ஸ்ரீ.பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 129 வது பிறந்தநாள் உத்சவம்.

ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமிராஜா அவர்களின் 129 வது பிறந்தநாள் உத்சவம் ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 6.30  மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரால் கீர்த்தனாஞ்சலியும், அதனைத் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது. காலை 7.25 மணிக்கு திருஉருவச்சிலைக்கு பூஜைகள் நடத்தப்படும். ஏப்ரல் 23 ஆம் தேதி இராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாணமண்டபம் P.A.C. ராமசாமிராஜா அரங்கத்தில்  " Sacred Geometry" (புனித வடிவியல்) எனும் தலைப்பில் நித்யாஞ்சலி நாட்டிய குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏப்ரல் 24 ஆம் தேதி மாலை 6.30  மணிக்கு புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் அஸ்வதித்திருநாள் பிரின்ஸ் ராமவர்மா அவர்களின் இசைக் கச்சேரி நடைபெற உள்ளது.

Apr 13, 2023

விலை வீழ்ச்சியை நோக்கி தக்காளி

இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு கோடை பருவத்தில் கிணற்று நீரை பயன்படுத்தி தக்காளி சாகுபடி அதிகரித்துள்ளது. குறிப்பாக கலங்காபேரி, புதூர், அய்யனாபுரம், சிவலிங்காபுரம், வடகரை, கிழவிகுளம், சங்கரலிங்காபுரம், கிருஷ்ணாபுரம், நல்லமநாயக்கர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி நடவு செய்யப்பட்ட தக்காளி பயிர்கள் தற்போது வெயில் சீசனில் ,காய்த்து மகசூல் அதிகரிக்கிறது. இதனால் கடந்த சில நாட்களாக இராஜபாளையம் மார்க்கெட்டிற்கு அதிகப்படியான வரத்தினால் ,கடந்த மாதம் ரூபாய் 25 வரை விற்ற தக்காளி தற்போது, படிப்படியாக குறைந்து கிலோ 9 வரை விலை போனது. இதைவிட ரூபாய் 2 க்கு குறையும் நிலைக்கு வந்து ,தற்போது சுற்றிலும் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருவதால், இந்த நிலையில் நிற்கிறது. இது தவிர ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மார்க்கெட்டில் இருந்தும் தக்காளி இங்கு கொண்டு வரப்படுகிறது. இராஜபாளையத்தில் தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒரு கிலோ ரூபாய் 9 வரை விற்பனை ஆகிறது. இதே நிலை நீடித்தால் மேலும் குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Apr 03, 2023

நம் நகரில் தமிழக ஆளுநர் ஸ்ரீ சிருங்கேரி சாரதாம்பாள் ஆலய தரிசனம்

இராஜபாளையம் ராஜீஸ் கல்லூரி Golden Jublie விழாவிற்கு தமிழ்நாடு கவர்னர் ஆளுநர் திரு.R.N. ரவி வருகை தந்தார். விழா முடிந்தவுடன் தெற்குவெங்காநல்லூர் ஸ்ரீ சிருங்கேரி சாரதாம்பாள் ஆலயத்தில் தரிசனம் செய்தார். பின் வேதபாடசாலைக்கு சென்று வேதபாடசாலா மாணவர்களின் வேத பாராயணத்தை பார்வையிட்டார். உடன் ராம்கோ சேர்மன் திரு.P.R. வெங்கட்ராமராஜா மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Mar 30, 2023

பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் கபடி போட்டி

பாரத பிரதம் நரேந்திர மோடி ஜீ அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் R. சங்கர் கணேஷ் என்பவர் தமிழகம் முழுவதும் நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்டு மதுரையில் நடந்த போட்டியில் தமிழ்நாடு அமைச்சர் கபடி கழக நிர்வாகிகள், நடுவர்கள், வீரர்கள், பொது மக்கள் உட்பட அனைவருக்கும் உணவு, குடிநீர், தேநீர், வழங்குதல், MAT சேவை, வீரர்களுக்கு அடிபட்டால் உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தல், வளாகம் முழுவதும் தூய்மைப் பணி உட்பட அனைத்து வேலைகளையும், முகம் சுளிக்காமல் சந்தோஷமாக பலனை எதிர்பார்க்காமல் பணியாற்றினார். மேலும் அவரது சேவையை பார்த்த விழாக் குழுவினர்கள், தமிழக BJB மாநில தலைவர் திரு. K.அண்ணாமலை Ex.IPS அவர்கள் பொற்கரங்களால் மோடி விருதும், சால்வை அணிவித்து பாராட்டினார்கள். தொடர்பு எண் : 94424 79611

Mar 27, 2023

துரோபதி அம்மன் கோவில் பூக்குழித் திருவிழா

நம் நகரில் உள்ள துரோபதி அம்மன் கோவில் பூக்குழித் திருவிழா நிகழ்ச்சிகள்

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News