25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமீபத்திய நிகழ்வுகள்

Oct 09, 2023

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நவராத்திரி உற்சவம்

இராஜபாளையம். அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நவராத்திரி உற்சவம் (15.10.2023-24.10.2023) புரட்டாசி மாதம் 28-ம் தேதி (15-10-2023) ஞாயிற்றுக்கிழமை முதல் ஐப்பசி மாதம் 07-ம் தேதி (24-10-2025) செவ்வாய்க்கிழமை வரை நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.அனைவரும் மன அமைதியும் வளமும், நலமும் பெற்று இன்புற்றிருக்க நவராத்திரி நன்னாளில் வழிபட்டு அருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கிறோம்.குறிப்பு: நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை ஸப்தஸதீ பாராயணம் நடைபெற உள்ளது. மாலை சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. ஸப்தஸதீ பாராயணத்திற்கும் சிறப்பு ஸங்கல்பத்திற்கும் நாளொன்றுக்கு ரூ 1000/-இத்திருக்கோவிலில் 22-10-2023 ஞாயிற்றுக்கிழமை துர்க்காஷ்டமி அன்று மாலை 6,00 மணிக்கு நடைபெறும் சிறப்பு திருவிளக்கு பூஜையில் பங்கு கொண்டு அனைத்து நலங்களும் பெற்றுய்ய கேட்டுக்கொள்கிறோம்.துர்க்காஷ்டமியன்று திருவிளக்குபூஜை செய்வது சிறந்த பலனைத்தரும். திருவிளக்கு பூஜை கட்டணம் ரூ 25/- நவராத்திரி பூஜை கட்டளைதாரராக விரும்புபவர்கள் ரூ 3000/- நன்கொடையளித்து திருக்கோவிலில் முன்பதிவு செய்து கொள்ளவும்.(மேலும் விவரங்களுக்கு திருக்கோவில் அர்ச்சகருடன் அல்லது 9003273690 & 9965035085 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளவும்). 

Oct 09, 2023

இராஜபாளையம்.அருள்மிகு ஸ்ரீஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் சர்வ சமுத்ர அக்ரஹாரம், நவராத்திரி உற்சவம்

இராஜபாளையம்.அருள்மிகு ஸ்ரீஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் சர்வ சமுத்ர அக்ரஹாரம், நவராத்திரி உற்சவம்(15.10.2023-24.10.2023)  புரட்டாசி மாதம் 28-ம் தேதி (15-10-2023) ஞாயிற்றுக்கிழமை முதல் ஐப்பசி மாதம் 07-ம் தேதி (24-10-2023)செவ்வாய்க்கிழமை வரை நவராத்திரி விழா  சிறப்பாக உள்ளது.நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை ஸப்தசதீ பாராயணமும், அம்பாளுக்கு அபிஸேகமும் மாலை 6.00 மணிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.ஸப்தஸதீ பாராயணம் நாளொன்றுக்கு சிறப்பு ஸங்கல்பத்திற்கு ரூ 1000/-நவராத்திரி சிறப்பு பூஜைக்கு நாளொன்றுக்கு ரூ 2000/- மேலும் பக்தர்கள் மனமுவந்துஅளிக்கும்நன்கொடைகளும்பூஜாதிரவ்யங்களும்ஏற்றுக்கொள்ளப்படும்.(மேலும் விவரங்களுக்கு திருக்கோவில் அர்ச்சகருடன் அல்லது - 9003273690 & 9965035083 தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளவும்).இப்படிக்கு - பி.ஆர். வெங்கட்ராம ராஜா பரம்பரை அறங்காவலர்

Oct 09, 2023

அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில் நவராத்ரி உற்சவம்

இராஜபாளையம், அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில் நவராத்ரி உற்சவம் ஸ்ரீ சாரதா சரண் நவராத்ரி உற்சவம் நமது நூதன திருக்கோவிலில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள், ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் ஆகியோர்களின் பரிபூர்ண அனுக்ரஹத்துடன் 14.10.2023 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் ஸ்ரீ சாரதாம்பாள் மஹா அபிஷேகம். ஜெகத்ப்ரஸுதிகா அலங்காரம் 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை முதல் 24.10.2023 செவ்வாய்க்கிழமை வரை ஸ்ரீ சாரதா சரண் நவராத்ரி உற்சவம் கீழ்க்கண்டவாறு தினசரி நடைபெற உள்ளன.காலை 6.00 - 9.00 மணி -   நித்ய பூஜைகள் (ஸ்ரீராஜகணபதி ஸ்ரீ நவாவரண,ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசாரியர் பூஜைகள்)காலை 9.00 - 12.00 மணி - ஸ்ரீ தேவீமஹாத்ம்ய பாராயணம்மாலை 5.00-7.00 மணி  -  நித்ய பூஜைகள் (அஷ்டோத்ர, த்ரிசதீ, ஸஹஸ்ரநாம பாராயணங்கள்)இரவு 7.45 மணி -  ரதோற்சவம்23.10.2023 திங்கள்கிழமை காலை திருக்கோவிலில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள யாகசாலையில் மஹாகணபதி ஹோமமும் மஹாசண்டி ஹோமமும் சுமங்கலி, கன்யா பூஜைகளும் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.ஸ்ரீ சாரதா சரண் நவராத்ரி ஒருநாள் பூஜைக்கு ரூ.3000/- நவராத்ரி பூஜைக்கு கட்டளைதாரராக விரும்பும் ஆஸ்தீக மஹாஜனங்கள் திருக்கோவில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொள்ளவும்.24.10.2023 செவ்வாய்க்கிழமையன்று விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் அக்ஷராப்யாசமும் நடைபெற உள்ளன.

Oct 06, 2023

இராஜபாளையம் இரயில் நிலைய கால அட்டவணை

இராஜபாளையம் இரயில் நிலைய கால அட்டவணை 01.08.2023 நிலவரப்படி

Oct 04, 2023

636 ஆட்டோக்களுக்கு முன் பகுதியில் போக்குவரத்து போலீசார் சார்பில் பிரத்தியேக எண் கொண்ட ஸ்டிக்கர் வழங்கி ஒட்டப்பட்டது.

ராஜபாளையம்நகரில் அளவிற்கு அதிகமாக ஆட்டோக்கள் இயங்குவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரிப்பது டன் விதிமீறல் ஆட்டோக் களை கண்டறிவதில் சிக் கல் ஏற்பட்டு வருகிறது.இணைப்பு ரோடுகளை மறைத்தும் இடையூறாக ஆட்டோக்களை நிறுத் துவது, உள்ளிட்ட விதி மீறல் மற்றும் குற்ற செயல் களில் ஈடுபடுவோர் கண்ட றிவதில் சிரமம் ஏற்பட்டுவந்தது . ராஜபாளையத்தில் ஆட்டோக்களை முறைப் படுத்த நகரில் இயங்கும் 23 ஆட்டோ ஸ்டாண்ட் 636 ஆட்டோக்களுக்கு முன் பகுதியில் போக்குவரத்து போலீசார் சார்பில் பிரத்தியேக எண் கொண்ட ஸ்டிக்கர் வழங்கி ஒட்டப்பட்டது.பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு ஆட்டோ டிரைவர்களுக்கு வட்டார போக் குவரத்து இன்ஸ்பெக்டர் லாவண்யா, எஸ்.ஐ.,க்கள் கார்த்திகேயன், பரமசிவம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஸ்டிக்கர்களை ஒட்டினர். இதன்மூலம் விதிமீறல் ஆட்டோக்களை சுலபமாக கண்டறிந்து நடவ டிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

Sep 30, 2023

இராஜபாளையத்தில் குடிநீர் கலங்கலாக வருகிறது

இராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் குடிநீர் வினியோகிக்க ஆறாவது மைல் நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அய்யனார் கோவில் ஆற்று நீர் தேக்கி அதன் அருகிலேயே குளோரினேசன, பில்டர் பெல்ட் எனும் சுத்திகரிப்பு செய்து அனைத்து பகுதிகளுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.வடக்கு ஆண்டாள்புரம், பாரதி நகர், ஸ்ரீரெங்கபாளையம், இந்திரா நகர், மலையடிப்பட்டி தெற்கு உள்ளிட்ட 40,42,42, வார்டு பகுதிகளில் சப்ளையாகும் குடிநீர் கடந்த ஒரு மாதமாக கலங்கலாக வருகிறது. இதனால் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளதுடன், குடிநீரை விலைக்கு வாங்கி உபயோகிக்கின்றனர்.நகராட்சி தலைவர்  MRS பவித்ரா  கலங்கலாக குடிநீர் வருவதை தவிர்க்க அனைத்து மேல்நிலை தொட்டிகளையும் சுத்தப் படுத்தி விட்டோம், தற்போது பெறப்படும் கூட்டுகுடிநீர் சங்கரன்கோவில் நீரேற்று பகுதியிலேயே சுத்தப்படுத்தி அனுப்புகின்றனர்.முன்பே குழாய் பதித்து அதில் சேர்ந்துள்ள மண் தற்போது கலந்து வரவாய்ப்பு உள்ளது. கழிவுநீர் என்றால் துர்நாற்றம் தெரிந்துவிடும், இருப்பினும் சப்ளையாகும் குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தி உள்ளார்.

Sep 27, 2023

ராஜபாளையத்தில் மத்திய அரசின் இரண்டு நாள் புகைப்பட, டிஜிட்டல் கண்காட்சி

ராஜபாளையத்தில் இந்தியஅரசுதகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், மத்திய அரசின் பல்வேறு மக்கள் திட்டங்கள் குறித்து இரண்டு நாள் புகைப்பட, டிஜிட்டல் கண்காட்சி நடந்தது.தென்காசி எம்.பி., தனுஷ் குமார், எம்.எல்.ஏ., தங்கபாண்டியன்",சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குனர் அருண்குமார் விருதுநகர் உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கண்ணன்,டி.ஆர்.ஓ., ரவிக்குமார், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலிப் குமார், லாளர் கல்வி தேசிய தொழிலாளர்  வளர்ச்சி வாரிய அதிகாரி கிரிஜா சிவகாமி உள்ளிட்ட அதி காரிகள் கலந்து கொண்ட னர். தேசிய ஊட்டச்சத்து மாதம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்று சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை, குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.

Sep 19, 2023

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ராம்கோ குருப் சேர்மேன் P. R.வெங்கட்ராமராஜா அவர்கள் பொறுப்பேற்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அறங்காவலர்களாக ராம்கோ குருப் சேர்மேன் P.R.வெங்கட்ராமராஜா, அருப்புக்கோட்டை ராம்குமார், கான்சாபுரம் உமாராணி, காரியாபட்டி நளாயினி, சென்னை மனோகரன் ஆகியோரை அறங்காவலர்களாக நியமணம் செய்தது. நேற்று காலை 9.00 மணிக்கு கோயில் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அறங்காவலர்கள் பொறுப்பேற்றனர்.பின்னர் நடந்த அறங்காவலர் குழு தலைவர் தேர்தலில், வெங்கட்ராமராஜா அறங்காவலர் குழு தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். பின்னர் அறங்காவலர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.இராஜபாளைம் டைம்ஸ் சார்பில் அறநிலையத்துறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் நகர் ராம்கோ சேர்மேன் திரு.P.R.வெங்கட்டராமராஜா அவர்களின் அறநிலையப் பணி | சிறக்க வாழ்த்தி வணங்குகிறோம்.

Sep 16, 2023

என்.சி.சி. இயக்குனர் ஆய்வு

 இராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய மாணவர்படை 5வது சைகை அணி சார்பில் தமிழ்நாடு என்சி.சி. இயக்குனரக் இயக்குநர் அதுல்குமார் ரஷ்தோஹி ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர பயிற்சிகள் குறித்த தகவல்கள் கோப்புகளை ஆய்வு செய்தார் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளை சார்ந்த 350 என்சிசி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மத்திய மாநில நிதி உதவியுடன் மதுரையில் என்சிசி மையம் உள்ளதை போல் இரண்டு மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார். சிறந்த என்சிசி அணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் விருது வழங்கப்பட்டது.ராம்கோ முதன்மை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ், இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் கணேசன், ராஜிக்கள் கல்லூரி முதல்வர்வெங்கடேஸ்வரன்,பாலிடெக்னிக் முதல்வர் சீனிவாசன் ,என்சி.சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Sep 13, 2023

நம் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்

இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்றம் சார்பில் நற்பணி மன்ற தலைர் ராமராஜ் விழா  ஏற்பாடுகளை ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம்.விநாயகர் சதுர்த்தி  விழா பிரம்மாண்ட சிலைகள் மாயூரநாதர்சுவாமி கோயில் முன்பு இருந்து தனித்தனி வாகனங்களில் ஊர்வலமாக வடக்கு போலிஸ் ஸ்டேஷன் முன்பு உள்ள விழாத் திடலுக்கு கொண்டு வரப்பட்டன.இந்த ஆண்டு செப்டம்பர் 13 ல் தொடங்கி 18 வரை விழா நடைபெற உள்ளது. விழா நாட்களில் ,ஆன்மீக பஜனை, இன்னிசை நிகழ்ச்சி, உலக நலவேள்வி, இலவச திருமணம், பரதநாட்டியம், பெரியோர் அருளுரை, நலத்திட்ட உதவிகள் மற்றும் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. 

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News