25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமீபத்திய நிகழ்வுகள்

Sep 13, 2023

13 செப்டம்பர் ராஜபாளைய நகரச் செய்திகள்

விபத்துக்கு வித்திடும் முகப்பு விளக்குகள்மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள விதிமுறைகள் படி பஸ், லாரி, லோடு வாகனங்கள், டுவீலர்களின் முகப்பு விளக்கு பொருத்துவது மற்றும் அவற்றை பராமரிக்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விதிமுறைகளுக்கு மாறாக சிறிய லோடு வேன், டுவீலர்கள், தனியார் பஸ்களில் கூடுதலாக அதிக ஒளி வீசும் விளக்குகளை பொருத்துகின்றனர்.இவை இரவு நேரங்களில் எதிரே ரோட்டில் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை கூச செய்வதோடு குழப்பம் விளைவித்து விபத்துக்கள் ஏற்பட காரணமாகின்றன.குறிப்பிட்ட இடை வெளிகளில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிக ஒளி உமிளும் வாகனங்களின் ஸ்டிக்கர் ஒட்டி இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். மண்டல கல்லூரிகள் இடையேயான கூடைப்பந்து போட்டிஇராஜபாளையம் மதுரை காமராஜர் பல்கலை மண்டல அளவில் கல்லூரிகளிடையேயான கூடைப்பந்து போட்டிகள் இராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியில் நடந்ததுஇறுதி போட்டியில் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியும் இராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியும் மோதியதில் 6063 என்ற கணக்கில் செந்தில்குமார் நாடார் கல்லூரி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கல்லூரி ஆட்சி மன்ற குழுச் செயலாளர் சிங்கராஜ் கோப்பை சான்றிதழ்களை வழங்கினார். முதல்வர் வெங்கடேஸ்வரன், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குநனர் முத்துக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்தினர். பல்கலை ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார். .

Sep 11, 2023

ராஜபாளைய நகரச் செய்திகள்

இராஜபாளையத்தில் மின்னஞ்சல் போராட்டம்.இராஜபாளையம் நகர் பகுதி வழியேசெல்லும் தேசிய நெடுஞ்சாலை பஞ்சுமார்க்கெட் முதல் நகர் பகுதியைகடக்கும் வரை மிக மோசமானநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகஇருந்து வருகிறது. பலரும் புகார் தெரிவித்தநிலையில் ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளதைஅடுத்து தேசிய நெடுஞ்சாலை துறைஅமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடந்தது.நிகழ்ச்சி ஒருஞ்கிணைப்பாளர்கள்ராமச்சந்திர ராஜா, மணிகண்டன், மாரியப்பன், தலைமை வகித்தனர். பெண்கள் உள்ளிட்ட 30 க்கும்மேற்பட்டோர் பங்கேற்று மின்னஞ்சல் அனுப்பியதுடன், ஒரு வார காலத்திற்குதொடர்ச்சியாக அனுப்பி அரசின் கவனத்தைஈர்க்க உள்ளதால் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பெய்த மழை காரணமாக  நிலங்களை உழுது தயார்படுத்தும் விவசாயிகள்.ராஜபாளையம், செப். 11- ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில்ஆடி மாதத்தில் பெய்ய வேண்டிய  மழைதற்போது பெய்துள்ளதால் மண்ணை உழுது தயார்படுத்தும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.ராஜபாளையம் வட்டார கண்மாய் ஒட்டியபகுதிகள், சேத்துார், முக வூர், தெற்குவெங்காநல் லுார், சோழபுரம், முதுகுடிஉள்ளிட்ட நன்செய் பாசன பகுதிகளில்நெல் பயிரிடு வது வழக்கம். கண்மாய் ஒட்டிய பகுதி களில்நெல் விவசாயத் திற்கான ஆரம்ப கட்டபணிகளை துவக்குவதற் காக பருவ மழைக்காககாத்திருந்தோம். அதிக சுற்று நீர்வசதி இல்லாதவர்கள் ஆடி 18ல் காய்கறி, பயறு விதைப்பர்..எதிர்பார்த்த மழை பெய்யாததுடன் வெப்பம்அதிகம் இருந்த நிலையில் ,சமீபத்தில்பெய்த மழை காரணமாக உழவுபணி களை துவக்கி உள்ளோம். கண்மாய்கள் வற்றிய சூழ லில்தற்போது கிணற்று நீரை நம்பிஇறங்கியுள்ளனர். விவசாயிகள். தென்னை நார் தொழில் தொடர்சிக்கலை சந்திப்பதை ஒட்டி மட்டைகளை வெளியேற்ற ! முடியாமல் கண்மாயில் எரிக்கும் அவல நிலை.மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ஸ்ரீவில்லிபுத்தூர்வத்திராயிருப்பு இராஜபாளையம், சேத்தூர், தேவதானம், உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகஅளவில் நடைபெற்று வருகிறது. தேங்காய் மட்டைகள் செங்கல் சூளைகளுக்கு மட்டும்பயன்பட்டு வந்த நிலையில், வியாபாரவிரிவாக்க வாய்ப்புகளுக்காக சீனா, ரஷ்யா, உக்ரைன்உள்ளிட நாடுகளுக்கு தென்னை நார் கழிவுகள்ஏற்றுமதி செய்யப்பட்டதால் தகுந்த விலை கிடைத்துவந்தது.கொரோனா பாதிப்பை தொடர்ந்துஉலக தொழில் மந்த நிலைபோர் காரணமாக ஏற்றுமதி அதிகம்இருந்த சீனா உள்ளிட்ட நாடுகள்இறக்குமதியை குறைந்ததால் தென்னை நார் கழிவுகள்கேட்பாரற்ற சூழல் ஏற்பட்டு விட்டது. தேங்காய் பேட்டைகளில் குவியும் மட்டைகளை அப்புறப்படுத்த வழிவின்றி புதிய இடம் தேடிஅலையும் நிலை நார் உற்பத்தியாளர்களுக்குஏற்பட்டுள்ளது. ஒரு கடைக்கு மாதம் 1 லட்சம் வீதம் தேங்காய்கள் தொடர்வரத்துஇருந்து வரும் சூழலில் தேங்காயிலிருந்துபிரிக்கப்படும் மட்டைகளை வியாபரிகள் அப்புறப் படுத்த வழியின்றி கண்மாயில்கொட்டி தீ வைக்க வேண்டியுள்ளது.இந்த அவல நிலையைசரி செய்ய தென்னை நார்ஏற்றுமதிக்கு வழி கிடைக்க விவசாயிகள், வியாபாரிகள் தவிக்கின்றனர். ராஜபாளையம் ராமராஜு பி சர்ஜிகல்காட்டன் மில்ஸ் மு ஸ்தாபகர்ராமராஜு பிறந்த நாளை முன்னிட்டுஇலவச கண் பரிசோதனை, ரத்ததான முகாம் நடந்தது.  ராஜபாளையம் ராமராஜு பி சர்ஜிகல்காட்டன் மில்ஸ் மு ஸ்தாபகர்ராமராஜு பிறந்த நாளை முன்னிட்டுஇலவச கண் பரிசோதனை, ரத்ததான முகாம் நடந்தது. ஆலைஇயக்குனர் ஸ்ரீ கண்டன் ராஜாதலைமை வகித்தார். அரசு மகப்பேறு மருத்துவகுழுவினர் சார் பில் ரத்ததானமும், சக்தி கண் மருத்துவமனை சார் பில் கண்பரிசோதனை முகாமும் நடந்தது. ராம்கோ டெக்ஸ்டைல்ஸ் தலைவர்மோக - னரங்கன், தலைமை நிதி நிலைஅதிகாரி விஜய் கோபால், பொதுமேலா ளர் சந்தோஷ், சுந்தர்ராஜ், ரங்கராஜ், தொழிற்சங்க ர் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  இராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம்சார்பில்மாணவர்களுக்கு விழிப்புணர்வு.இராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம்சார்பில் சேவைகள், பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்சிசி ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில்நடந்தது.இராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கதலைவர் சுகந்தம் ராமகிருஷ்ணன் முன்னிலை விகித்தார். மதுலை ரயில்வே கோட்டவணிக ஆய்வாளர் கோவிந்தராஜ், ரயில்வே பாதுகாப்பு படைடி.எஸ்.பி. வெள்ளைத்துரைபங்கேற்று மாணவர்களிடம் முன்பதிவு இல்லாத பயண சீட்டுஎடுக்கும் அலைபேசி செயலியின் பயன்பாடு, சீசன் டிக்கெட் எடுத்தல், புதுப்பித்தல், ரயில் பயண பாதுகாப்புவிழிப்புணர்வு, ரயில் கடவுப் பாதைபாதுகாப்பு, இவற்றில் மக்களின் பங்கு குறித்து விளக்கிபேசினர்.

Sep 06, 2023

மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்... இவர் டிப்ளமோ படித்திருக்கிறார்.. இவரது குடும்பமே பாரம்பரியமான விவசாயத்தையே நம்பியிருப்பவர்கள்.. விவசாய குடும்பம் என்பதால், மோகன்ராஜூக்கு சின்ன வயசில் இருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது..இதனால், டிகிரி படித்தாலும், பெரிய வேலைவாய்ப்புகள் வந்தபோதிலும் அங்கெல்லாம் போகாமல், நேராக விவசாயத்துக்கே வந்துவிட்டார்.மோகன்ராஜூவுக்கு திருமணம் நிச்சயமானது.. செந்தாமரைவிளை பகுதியை சேர்ந்தவர்தான் மணப்பெண் கலையரசி..வண்ண வண்ண மலர்கள் ஜோடிக்கப்பட்ட கார்களில் ஊர்வலம் செல்வது வழக்கம்.. ஆனால், மோகன்ராஜூ வித்தியாசமாக கல்யாணம் செய்து கொண்டார். அதாவது, இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டி மூலம் நிலத்தை உழுதிட வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், புதுமணப்பெண்ணுடன் மாட்டு வண்டியிலேயே சென்று கல்யாணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்ல, திருமணம் முடிந்த கையோடு, கல்யாண பெண்ணை, அவரது வீட்டில் இருந்து, மணமகன் வீட்டிற்கு மாட்டுவண்டியிலேயே ஊர்வலமாக அழைத்து வந்தார் மோகன்ராஜ்.. மாட்டு வண்டியில் மணமக்கள், ஏறி உட்கார்ந்துகொள்ள, அந்த வண்டியை சுற்றிலும், செண்டை மேளத்துடன், உற்சாகமாக ஆட்டம், பாட்டம் என அமர்க்களமானது.மாப்பிள்ளை வீடு வந்து சேரும்வரை, வழிநெடுகிலும் பொதுமக்கள் இந்த மணமக்களுக்கு ஆரவாரத்துடன் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர்.. மணமக்கள் மாட்டுவண்டியிலிருந்து கீழே இறங்கியதும், மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்... அப்போது மணமகன் மோகன்ராஜ் திடீரென டான்ஸ் ஆடி, தங்களுக்கு வரவேற்பு தந்த அனைவருக்கும் உற்சாகமூட்டி சர்ப்ரைஸ் செய்தார்.. இதைப்பார்த்து மொத்த கூட்டமும் கைதட்டி ஆரவாரம் செய்தது.இதற்கு பிறகு, செய்தியாளர்களிடம் மாப்பிள்ளையே பேசினார்.. "மக்கள் விவசாயத்திற்கு எந்திரங்களை பயன்படுத்துவதால் பாரம்பரிய விவசாயங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவதாகவும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட கால்நடைகளும் அழிந்து வருகின்றன.. காளை மாடுகள்: காளை மாடுகளை விவசாய உழவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், இப்படி நான் மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்தேன். இது ஒரு சின்ன விழிப்புணர்வாக இருக்கும் என்றும் நம்புகிறேன்" என்றார்.

Sep 04, 2023

திருமங்கலம் இராஜபளையம் நான்கு வழிச்சாலை

மதுரை மாவட்டத்தையும், கேரளாவின் கொல்லம் நகரத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 744. மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரங்களான T. கல்லுப்பட்டி, ஸ்ரீலில்லிபுத்தூர், இராஜபாளையம், சிவகிரி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை நகரங்களின் மையப்பகுதி வழியாக செல்கிறது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி, கனரக வாகனங்கள் பயணித்து வருகிறது. இதனால் திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை வரை போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த வழித்தடத்தை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டுமென்ற மூன்று மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.முதலில் 60 மீட்டர் அகலத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிட்ட நிலையில் விவசாய நிலங்கள், மரங்கள், கிணறுகள் அதிகம் பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், 45 மீட்டர் அகலத்தில் நான்கு வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி முதற்கட்டமாக திருமங்கலத்தில் இருந்து இராஜபாளைமய் வரையுள்ள 716 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1264 கோடி நிதி ஒதுக்கி கடந்த பலமாதங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக திருமங்கலத்தில் இருந்து இராஜபாளைய் வரை இருந்த மரங்கள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் விறு விறுப்புடன் நடந்து வருகிறது.

Aug 28, 2023

ராஜபாளையம் வழியாக குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில்

ராஜபாளையம் வழியாக நேற்று முதல் மதுரையில் இருந்து கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில்  11முன்பதிவில்லா பெட்டிகள், இரண்டு படுக்கை வசதி ,ஒரு ஏ.சி., என 14 பெட்டிகளுடன்  இப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கைப்படி தென்னக ரயில்வே சார்பில் இயக்கப்படுகிறது. ராஜபாளையம் ரயில் பயனாளர்கள் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், ரயிலுக்கு இன்ஜினுக்கு வாழை மர தோரணம், மாலை அணிவித்து, ரயில் ஓட்டுநர், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்டோருக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி இதை  கொண்டாடினர்.  நகர் பாஜ., கட்சியினர் பொதுமக்கள், ரயில் பயணிகள் கலந்து கொண்டனர்.

Aug 26, 2023

வெற்றிபெற்ற chanraayan 3

வெற்றிபெற்ற chanraayan 3 விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்றுள்ள நமது இராஜபாளையம் N. A. அன்னப்பராஜா பள்ளியின் மாணவர் திரு. மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Aug 19, 2023

சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு

உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் வடை கடைகள், மாலை நேர சிக்கன், மட்டன் கடைகளில் சோதனை நடத்தி ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் ஓட்டல்கள், பாஸ்ட்புட் கடைகள், ரோட்டோர சிக்கன், மட்டன் வறுவல், வடை கடைகள் ஏராளமாக உள்ளன. சில கடைகளைத் தவிர பெரும்பாலும் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.மேலும் பயன்படுத்திய எண்ணெய்யை அரசே வாங்கும் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் இது குறித்து ஏற்படும் நோய்கள் குறித்து கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

Aug 19, 2023

நான்கு கோட்டை ஷத்திரிய ராஜீக்கள் மகா சபை கூட்டத்தில்  டாக்டர். P.S.வெங்கடேஸ்வரன் அவர்கள் கௌரவிக்கக்கப்பட்டார்

இராஜபாளையம் சக்கராஜாக்கோட்டை தலைவர் திரு. P.B. சின்னவெங்கட்ராஜா, அவர்கள் நான்கு கோட்டை ஷத்திரிய ராஜீக்கள் மகா சபை தலைவராகவும், உபதலைவராக திரு. K.B.ராம்சிங் அவர்களும் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சக்கராஜாக்கோட்டை சாவடி கூட்டத்தில் டாக்டர். P.S.வெங்கடேஸ்வரன் BSC.MS. (General Surgery) M.ch (Vascular Surgery) F.I.C.S.F.V.S.I அவர்கள் ராஜீஸ் சமுகத்தின் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக கௌரவிக்கப்பட்டார்.ராம்கோ சேர்மன் திரு.P.R. வெங்கட்ராமராஜா அவர்கள் சக்கராஜாக் கோட்டை சாவடியில் டாக்டர். திரு.P.S.வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.நான்கு கோட்டை மகாசபை கூட்டத்தில் கோட்டை தலைவர்திரு.P.B.சின்னவெங்கட்ராஜா, அவர்கள் பொன்னாடை அணிவித்து  கௌரவித்தார்.

Aug 10, 2023

இந்திய சேவையாளர் R. சங்கர் கணேஷ்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அனைகரைப்பட்டி அழகர் தோட்டத்தில் 05.08.2023-ம் தேதியன்று மாண்புமிகு அமைச்சர் திரு. K.K.S.S.R அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்ட இந்திய சேவையாளர் R. சங்கர் கணேஷ் இராஜபாளையம் அவர்கள், தேனீக்களை போல் சுறு சுறுப்பாக சேவை செய்ததை பாராட்டி விழாக் குழுவினர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு.K.K.S.S.R. படம் பொறித்த மெடல் ஷீல்டு மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்கள்.தமிழக தேசிய தலைவர்கள் பிறந்த நாள் உட்பட அனைத்து சமுதாய பொது மக்களுக்கும் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார். இவர் செய்யும் சேவைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க தொடர்பு கொள்ளவும்: 94424 79611

Jul 28, 2023

ராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மாடி தோட்டம் வளர்ப்பது குறித்து பயிற்சி முகாம்

ராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மாடி தோட்டம் வளர்ப்பது குறித்து பயிற்சி முகாமில் மாடித்தோட்டம் வளர்ப்பது குறித்தும் காய்கறிகளை பூச்சிகளில் இருந்து பாதுகாப்பதும், அதற்கு தேவையான பருவத்தில் உரங்கள் இடுவது பற்றி தோட்டப்பயிர் ஆர்வலர் ஜெயராமன் விளக்கம் அளித்தார்.ஆர்வம் உள்ளவர்கள் மானிய விலையில் செடி வளர்ப்பு பைகள், தென்னை நார்கழிவு, விதைகள், உரம், வளர்ப்பு கையேடு உள்ளிட்ட மாடி தோட்ட கிட் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் என உதவி இயக்குனர் முத்துலட்சுமி தெரிவித் துள்ளார்.ஏற்பாடுகளை உதவி அலுவலர் பாலமுருகன், விஜயகுமார் செய்திருந்தனர்.விவசாயிகள், கலசலிங்கம் பல்கலை இறுதி ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர் 

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News