25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமீபத்திய நிகழ்வுகள்

Oct 14, 2024

இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

.187 மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். ஒய்வு கல்வி அலுவலர் பொன்னம்பலம்,தாசில்தார் ராமசுப்பிரமணியம், ஆர்.ஐ. சுந்தர்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். தாளாளர் திருப்பதி செல்வன் வரவேற்றார் முதல்வர் அருணா தேவி முன்னிலை வகித்தார். இரண்டு நாள் நடந்த கண்காட்சியை  எம்.எல்.ஏ தங்கபாண்டியன் துவக்கி வைத்தார் ரோட்டரி சங்க தலைவர் ஆனந்தி, முன்னாள் தலைமை ஆசிரியர் ராமசாமி ,வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

Oct 12, 2024

வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள்.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் , இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு, வேர்ல்ட் விஷன் இந்தியா சார்பில் வழங்கப்பட்டது. சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர், சார்பு நீதிபதி சண்முக வேல் ராஜ் ஊட்டச்சத்து பொருட்கள், இலவச சைக்கிள் வழங்கினார். வேர்ல்ட் விஷன் திட்ட இயக்குனர் செல்வின் அலுவலர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

Oct 11, 2024

பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி 

 வெயிலின் தாக்கத்தால் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்  பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. இதையடுத்து மாலையில் திடீரென குளிர்ந்தகாற்று வீசத்தொடங்கியது.பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் பலத்தமழை பெய்தது. பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் இருந்து பழைய பஸ் நிலையம், மலையடிப்பட்டி கணபதியாபுரம். அரசு  மகப்பேறு மருத்துவமனை, காந்தி கலை மன்றம், சங்கரன்கோவில் முக்கு, புதிய பஸ் நிலையம், சொக்கர்கோவில்,  ரெயில்வே மேம்பாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.   மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவ , பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  

Oct 05, 2024

இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி,

இராஜபாளையத்தில் மதுரை காமராஜ் பல்கலை மண்டலங்களுக்கு இடையே கல்லூரி மாணவியர்க்கான வாலிபால் போட்டியில் மதுரை லேடி டோக் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது.இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் காமராஜ் பல்கலை மண்டலங்களுக்கிடையே வாலிபால் போட்டி நடந்தது. 16 கல்லூரிகள் பங்கேற்றதில் இறுதி சுற்றுக்கு மதுரையில் லேடி டோக் கல்லூரியும், யாதவா கல்லூரியும் மோதின. இதில் மதுலை லேடி டோக் முதலிடமும்,யாதவா கல்லூரி இரண்டாவதும், மங்கையர்க்கரசி கல்லூரி மூன்றாமிடமும், வி.சி. வன்னிய பெருமாள் கல்லூரி நான்காம் இடம் பெற்றன.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் கிருஷ்ணமராஜு பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கினர். முதல்வர் ஐமுனா வரவேற்றார்.

Sep 30, 2024

இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி

விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகம், இராஜபாளையம் சிட்டி வாலிபால் சங்கம் சார்பில் மாநில அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது.சென்னை, திருச்சி, கோவை, வேலூர், கன்னியாகமரி, விருதுநகர் உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் இருந்து கல்லூரி மாணவர்கள் 38 அணியும், மாணவிகள் 28 அணி என 850 போர் பங்கேற்கின்றனர் காலை 7.00 மணிக்கு தொடங்கி மொத்தம் எட்டு ஆட்டங்களில் பகல் இரவு போட்டிகளாக லீக் மற்றம் நாக் அவுட் போட்டிகளாக நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி அக்டோபர் 2ம் தேதி மாலை நடைபெறும்.போட்டிகளை எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், ஊர்க்காவல் படை மதுரை சரக துணைத்தளபதி ராம்குமார் ராஜா தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழக கவுரவ செயலாளர் துரைசிங், இராஜபாளையம் சிட்டி வாலிபால் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Sep 25, 2024

இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் நடுவே அமைந்துள்ள சஞ்சீவி மலையில் திடீரென பற்றிய தீயை வனத்துறையினர் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இராஜபாளையம் கிழக்கு பகுதி ரயில்வே தண்டவாளத்தை அடுத்து சஞ்சீவி மலை உள்ளது. இதையொட்டி வடக்கு மலையடிப்பட்டி, குலார் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, காமராஜபுரம், எம்.ஜி.ஆர் நகர். அண்ணா பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் மலையின் வடக்கு பகுதி உச்சியில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது. அதிவேக காற்றால் ஒரு பகுதியில் பற்றிய தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதில் மூலிகை உள்ளிட்ட பசுமையான மரங்கள் தீக்கிரையாகின. வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Sep 20, 2024

ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், சேத்துார்,தேவதானம் அடுத்த பகுதிகளில் வறண்ட நிலங்கள், மழை பொழிவை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பகுதிகளுக்கு மக்காச்சோளம் ஒவ்வொரு வருடமும் கை கொடுத்து வரும்.  இந்நிலையில் இந்த வருடமும் ரெட்டியபட்டி, சிவலிங்காபுரம், ஆலங்குளம், வடகரை, தென்கரை, என்.புதுார் உள்ளிட்ட பகுதிகளில் மானாவரி பயிராக ஆவணி மாதம் மக்காச்சோளம் பயிரிட்டு ஒரு மாதம் நட்டு வைத்து வளர்ச்சியை எதிர்பார்த்த சூழலில் தற்போது அடுத்து வரும் கடும் வெயில் மற்றும் பொய்த்துப்போன மழையால் கருகி நஷ்டம் ஏற்படுத்தி உள்ளது. கண்மாய், இரவை பாசனம் தவிர மீதி உள்ள மானாவாரி விவசாய நிலங்களில் உழுது ஆவணி மாத பட்டத்தில் மக்காச்சோள விதைகள் ரூ.4000, உழவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு ரூ.11,000 என ஏக்கருக்கு 15,000 என செலவிட்டும் தற்போது ஆவணி புரட்டாசி மாத மழை இல்லாததால் 15 நாட்கள் ஆன மக்காச்சோள கருதுகள் கருகிவிட்டன. கண்மாய் ஒட்டிய கிணற்று பாசன பகுதிகளில் இது ஓரளவு தண்ணீரை பாய்ச்சி தப்பித்த நிலையில் மழையை நம்பிய மக்காச்சோள விவசாயிகள்  பாதிக்கப்பட்டுள்ளனர்

Sep 17, 2024

இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

 ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 416 குழந்தைகளுக்கு ரூ 10 லட்சம் கல்வி உதவி தொகையினை தலைமை நிதி அதிகாரி விஜயகோபால் தொடங்கி வைத்தார். பொது மேலாளர் சுந்தர்ராஜ், மனித வள துணைப் பொது மேலாளர் எட்வின் ஜார்ஜ் வழங்கினர். தொழிலாளர் நல அதிகாரி கவுதமன் வாழ்த்தினார். தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

Sep 13, 2024

M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது

எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு 01.09.2024 ஞாயிறு மாலை இராஜபாளையம் P. S.K. ருக்மணி அம்மாள் கலையரங்கில் வாழ்நாள் சாதனையாளர் விருது  2024 வழங்கப்பட்டது.அன்புத் தோழி கவிஞர் ஆனந்தி Bhimaraja Anandhi  அவர்களின் நாற்று அமைப்பிலிருந்து இந்த நிகழ்வினை மிகவும் சிறப்புற நடத்தினார்கள்.தனது தம்பி M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஒரு ஆளுமைக்கு இந்த விருதினை ஆனந்தி வழங்கி வருகிறார்.ஒவ்வொரு முறையும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த முறையும் கலந்துகொள்ள இயலாதபடி ஒரு நாள் முழுக்க காய்ச்சல் வாட்டியது. நின்று பேசிவிட முடியுமா என்னும் தயக்கம் இருந்தது. முதல் நாள் இரவும், நிகழ்வு நாளிலும் மாத்திரை எடுத்துக்கொண்டு சென்றேன்.உள்ளே நுழையும் போதே, முழுக்க நனைக்காத, பன்னீர் தெளித்தது போலவே சின்ன தூறல் வரவேற்றது.  காற்றினிலே வரும் கீதம் பாடல் பாடி நிகழ்வினை ஆரம்பிக்க ஒரு ஒருமுகப்படுத்தும் மனநிலைக்கு அழைத்துச் சென்றார் பாடகி சுபா. சிறப்புற வரவேற்புரை அளித்த ஆனந்தியைத் தொடர்ந்து எழுத்தாளர் கவிஞர் கலாப்ரியா அவர்கள் நிறைவான தலைமையுரை அளித்தார்.எழுத்தாளர் நரேந்திர குமார் அவர்கள் மிகவும் பொருத்தமானஅறிமுக உரை அளித்தார். எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் வருகை நிகழ்வினை மெருகூட்டியது. அவரும் அன்பு நண்பர் சண்முக சுந்தரம் அவர்களும் வந்திருந்தனர்.எழுத்தாளர் வண்ணதாசன், கொ. மா. கோதண்டம், ராஜேஸ்வரி கோதண்டம், பாவண்ணன் அவர்களின் மனைவி அமுதா மேடையில் இருக்க விருது வழங்கப்பட்டது.விமர்சகர் சுதா, பாவண்ணன் படைப்பினை வாசித்த அனுபவத்தைப் நிதானமாக நமக்குள் கடத்த, மதுமிதா வாழ்த்துரையில் கதைசொல்லியாக பாவண்ணன் அவர்களின் ஒரு கதையையும் சொல்லி முடித்தார்.எழுத்தாளர் கன்யூட் ராஜ் அவர்களின் கச்சிதமான வாழ்த்துரை முடிந்ததும், எழுத்தாளர் பாவண்ணன் மிகவும் நெகிழ்வான மனநிலையில் அற்புதமான ஏற்புரை அளித்தார். அனைவரும் அந்த மன நிலையில் இருக்க,  அன்புப் பரிசு வழங்குதல் முடிந்தது.நிகழ்வினை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கிய தோழி ரமணி நன்றியுரை அளித்தார். தேசிய கீதத்துடன் நிகழ்வு முடிந்தது.எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களை அவரது தந்தையுடன் இணைந்த சித்திரமாக வரைந்த அந்தச் சிறுவன் சிறந்த ஓவியனாக மலரும் எதிர்காலம் அந்த சித்திரத்தில் மலர்ந்திருந்தது.அன்புத் தோழி எழுத்தாளர் கலாப்ரியாவின் மனைவி எங்கள் அன்பு ஆசிரியையை சந்தித்ததில் மகிழ்ச்சி.கலை இலக்கிய பெருமன்றம், தமுஎச மன்ற உறுப்பினர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் என அரங்கு நிறைந்திருந்தது. அனைவரையும் சந்தித்த மகிழ்வு மனதை நிறைத்தது.அனைவரும் நிகழ்வு முடிந்த பிறகும் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக அங்கே இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றோம்.அன்பு மக்களை சந்திக்கும் வகையில், அன்பில் நிறைந்த ஒரு இனிய மாலையை பரிசளித்த அன்புத் தோழி ஆனந்திக்கு அன்பும் நன்றியும்  .நாற்று நிறைவு.

Sep 13, 2024

இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா"

M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய  "யானைகள் திருவிழா"வில் பல பள்ளிகளில் இருந்து, நூற்றுக்கும் மேலாக மாணவர்கள்  கலந்து கொண்டனர்.வைமா குழுமத்தின் Managing DirectorRtn.திருப்பதி செல்வன் கூறிய 5W 1H என்ற ஃபார்முலாசிறப்பாகஇருந்தது.மேலும்அவர்"மனிதர்களைநேசியுங்கள் ,பொருட்களைபயன்படுத்துங்கள்" என்று கூறிய வாசகம் மிகவும் கவர்ந்தது.திருமதி.மைதிலி அவர்கள்  உ.வே.சா பற்றிக் கூறிய செய்திகள் அருமையாக  இருந்தது.ஆம் அந்த ஓலைச்சுவடி மட்டும் கிடைத்திருந்தால் யானைகள் பேசும் மொழியினை நாம் தெரிந்திருக்கலாம்."அரும்புகள் " அமைப்பு நிறுவனர் திரு.மதிவாணன் அவர்கள்  யானைகளைப்பற்றிக்  கூறும் போது அவரின் அகமும் புறமும்   குழந்தையாகிப் போனது .மேலும் அவர் யானை, குழந்தை, கடல் இந்த மூன்றையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றார்.யானை நன்றாக நீந்தும் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் இது எங்கிருந்து இதனைப் பெற்றுக் கொண்டது என்ற செய்தி தான்  நம்மை வியப்பில் ஆழ்த்தியது.யானை கடல் பசுவிலிருந்துதான் பரிணாமம் ஆகியிருக்கிறது இதன் மூதாதையர் கடல் வாழ் உயிரிகள் என்ற செய்தியை புதிதாய் அறிந்தோம்.யானைகளின் கழிவுகளில் இருந்துதான் காடு உருவாகிறது யானைகளை நம்பி 25 உயிரினங்கள் உயிர் வாழ்கின்றன என்பதையும் அறிந்தோம். அவ்ளோ பெரிய பிரமாண்டம் சிறிய எலியைப் பார்த்து பயந்தது என்ற செய்தி சிரிப்பினைத் தந்தாலும் யானையின் மீது பரிவு கொள்ளவே செய்தன.ஒவ்வொரு பலத்திற்குப் பின்னும் ஒரு பலவீனம் உண்டு போல அந்த பலவீனத்தை தெரிந்து கொண்டு மனிதர்கள் அதனை அடக்கி ஆள்கிறார்கள் இன்றைய கூடல் மிகப் பயனுள்ளதாக இருந்தது

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News