வரும் 2028, ஜூலை 14-30-ல் அமெரிக்காவின் லாஸ் 28 ஏஞ்சல்ஸ் நகரில்ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. பாரிஸ் (2024) ஒலிம்பிக்கை விட பதக்க போட்டிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டன. கிரிக்கெட், ஸ்குவாஷ் உட்பட 5 புதிய போட்டிகள் இடம் பெற்றுள்ளன.''ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஸ்குவாஷ் சேர்க்கப்பட்டுள்ளதுகுறித்து, இந்தியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் 18, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.உலகின் அனைத்து ஸ்குவாஷ் நட்சத்திரங்களும் ஒலிம்பிக்கை எதிர்பார்த்துள்ளனர். தற்போது ஒலிம்பிக் என்பதால், ஒவ்வொருவரும், பதக்கம் வேண்டும், இதில் பங்கேற்று வெல்ல வேண்டும் என கனவு காண்பர். அடுத்த சில ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெறுவது லட்சியமாக இருக்கும். என் மனதிலும் ஒலிம்பிக் முக்கியஇடம் பெற்றுள்ளது. பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்," என்றார் அனாஹத் சிங்.
'ஒன்டே' போர்டு சார்பில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் டிராபி எலைட் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கான தொடர் நேற்று காலிறுதி போட்டிகள் துவங்கின. ராஞ்சியில் நடந்த போட்டியில் தமிழகம், டில்லி அணிகள்,. 'டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது. டில்லி அணி 50 ஓவரில் 288/5 ரன் எடுத்தது, தமிழக அணி துவக்கம் கொடுத்தது, , கமலினி 150 ரன்களை கடந்தார்.தமிழக அணி 42.1 ஓவரில் 255/4 ரன் எடுத்து, வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர்அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் ,பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர்.முதல் செட்டை 3-6 என இழந்த சபலென்கா, 2வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இவர், 'டைபிரேக்கர்' வரை சென்ற 3வது செட்டை 7-6 என தன்வசப்படுத்தினார்.இரண்டு மணி நேரம், 31 நிமிடம் நீடித்த போட்டியில் சப லென்கா 3-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில்,இத்தொடரில் பைனல் வரை சென்ற ரிபாகினா, 2வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் சபலென்கா நீடிக்கிறார். போலந்தின் இகா ஸ்வியாடெக் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷ்யாவின் மெத்வெடேவ் ஆண்களுக்கான ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் ஒற்றையர் பைனலில் மோதினர். சின்னர் 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் தனது முதல் பட்டத்தை தட்டிச் சென்றார்.
ஸ்பெயினில் சர்வதேச 'ஜூனியர்' ஓபன் பாட்மின்டன் தொடர் ஸ்பெயினில் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ் யான்ஷ் அகர்வால், ஹரிஷ் ராகவேந்திரன் வைத்தியநாதன் ஜோடி, ஸ்பெயினின் ஜோயல் ஆல்வரஸ், அட்ரியன் ரோட்ரிக்ஸ் விங் ஜோடியை எதிர் கொண்டது. முடிவில் இந்திய ஜோடி 21-12, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது. இந்தியாவின் ஹரிஷ்ராகவேந்திரன் வைத்தியநாதன், ஜனனிகா ஜோடி, இங்கிலாந்தின் மியா பாக்ஸ், டின் விங் வாங் ஜோடியைகலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் சந்தித்தது.இந்திய ஜோடி முதல் செட்டை இந்திய ஜோடி 17-21 என இழந்து, அடுத்த இரு செட்டுகளை 21-13, 22-20 என வசப்படுத்தியது.இந்திய ஜோடி 17-21, 21-13, 22-20 என்ற செட் கணக்கில்பைனலின் முடிவில் வெற்றி பெற்று, தங்கம்வென்றனர்.
6வது அக்ரோபோலிஸ் சர்வதேச உஷு ஓபன் தொடர் கிரீசின் ஏதென்ஸ் நகரில் ஆண்களுக்கான 'நன்-குவான்' பிரிவில் இந் தியாவின் யாஷ் நாம்தியோ தங்கம் வென்றார். தொடர்ந்து இவர், 'நான்-கன்' பிரிவிலும் தங்கம் வென்று ,'நன் தாவோ' பிரிவில் களமிறங் கிய யாஷ், வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார். 'சாண்டா' போட்டியில் இந்தியாவின் அனுஷ்கா, பெண்களுக்கான (18 வயது பிரிவு) 52 கிலோ, தங்கம் கைப்பற்றினார். இந்திய வீராங்கனை ஜோதி, 60 கிலோ சாண்டா, சீனியர் பிரிவில் தங்கம் வென்றார். இந்திய அணி, 7 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கம் வென்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால பாரா லிம்பிக் 14வது சீசன் இத்தாலியின் மிலன், கார்டினா நகரில் நடந்தது. பாரா ஐஸ் ஹாக்கி, பாரா ஆல்பைன்பனிச்சறுக்கு உள்ளிட்ட 6 வகையான விளையாட்டிகளில், 79 தங்கம் வழங்கப்பட்டது. 15 தங்கம் உட்பட 44 பதக்கம் வென்றுசீனா முதலிடத்தை கைப் பற்றியது. இதில் 55 நாடுகளை சேர்ந்த 612 பேர் பங்கேற்றனர் . அமெரிக்கா (13 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்), ரஷ்யா (8 தங்கம், ஒரு வெள்ளி, வெண்கலம்) தட்டிச் சென்றன.
உலக குத் துச்சண்டை 'பியூட்சர்ஸ்' கோப்பை (19 வயது) தொடர் தாய்லாந்துதலைநகர் பாங்காக்கில், பெண்களுக்கான 51 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின்சந்திரிகா பூஜாரி, உஸ்பெகிஸ்தானின் நஜோகத் மர்டோனோவா மோதி,.இதில் சந்திரிகா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை வென்றார்.இந்திய வீராங்கனை குஞ்சன், இங்கிலாந்தின் லில்லி பாசெட்மற்றொரு பைனலில் (48 கிலோ) மோதி,குஞ்சன் 0-4 என தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.இந்தியாவின் ஜாய்ஸ்ரீ தேவி சிரோம், அமெரிக் காவின் ரூயிஸ் பெண்களுக்கான 54 கிலோ பிரிவு பைனலில், மோதி, ஜாய்ஸ்ரீ 1-4 என தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய வீராங்கனை ராதாமணி லாங்ஜம் வெண்கலம் வென்றிருந்தார். இந்தியாவின் அம்பேகர், உஸ்பெகிஸ்தானின் அப்துகனி யார்கின்ஜோனோவ் ஆண்களுக்கான 50 கிலோ பிரிவு பைனலில் மோதி,.அம்பேகர் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இந்தியாவுக்கு இத்தொடரில் 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 5 பதக்கம்கிடைத்தது.
இந்திய ஓபன் 'ஜம்ப்ஸ்' போட்டிகள் பெங்களூருவில், பெண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் தமிழகத்தின் பரணிகா, 4.10 மீ., தாண்டி தங்கத்தை கைப்பற்றினார். பெங்களூரு, தேசிய சிறப்பு மையம் அணியின் சிந்துஸ்ரீ (3.95 மீ.,) வெள்ளி, மத்திய தொழில் பாதுகாப்பு படை அணியின் பபிதா படேல் (3.90 மீ.,) வெண்கலம்வென்றனர். மற்றொரு தமிழக வீராங்கனை கார்த்திகா (3.80 மீ.,) 5வது இடம்பிடித்தார். தமிழகத்தின் சரண் ,ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் (7.77 மீ.,) வெண்கலம், கர்நாடகாவின் புருஷோத்தம் (7.87 மீ.,), ஒடிசாவின் சருண் பாயாசிங் (7.78 மீ.,) தங்கம், வெள்ளி வென்றனர். தமிழகத்தின் ஹரிகரன் ரமேஷ் ஆண்களுக்கான (20 வயது ) 'போல் வால்ட்' போட்டியில் (4.55 மீ.,) தங்கம் வென்றார். ஹர்ஷினி பெண்களுக்கான (18 வயது) உயரம் தாண்டுதலில் (1.50 மீ.,) தங்கம் வென்றார்.
என்.சி.ஏ.ஏ., உள்ளரங்கு தடகளசாம்பியன்ஷிப்('டிவிசன்-1') அமெரிக்காவில்,ஆண்களுக்கான 'டிரிபிள்ஜம்ப்’ பைனலில் ,இந்தியாவின் செல்வ பிரபு 21, கான்சாஸ் பல்கலை., சார்பில் பங்கேற்றார். அதிகபட்சமாக 17.05 மீ., துாரம் தாண்டிய இவர், 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தியாவுக்கு இத்தொடரில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிஎன 2 பதக்கம்கிடைத்தது.லோகேஷ்சத்யநாதன்(நீளம்தாண்டுதல்) ஏற்கனவே தங்கம் வென்றிருந்தார்.
சுவிஸ் ஓபன் ''சூப்பர் 300'' பாட்மின்டன் தொடர் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், ஆண்கள் ஒற்றையர்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் தருண், மலேசியாவின் ஜஸ்டின் ஹோ மோதினர். முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய தருண், இரண்டாவது செட்டை 22-20 என வென்று 21-14, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.