25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Mar 23, 2026

ஐ.எஸ். கால்பந்து லீக் போட்டிசென்னை, கோவா அணிகள் மோதி 1-1 என 'டிரா' ஆனது.

12வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோவா அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் சென்னை அணிக்கு 48வது நிமிடத்தில் இர்பான் யத்வாட் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 88வது நிமிடத்தில் கோவா அணியின் சந்தேஷ்ஜிங்கன் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. மற்றொரு லீக் போட்டி யில் இன்டர் காஷி. பெங்களூரு அணிகள் கோல்கட்டாவில் மோதின.2-1 என்ற கோல் கணக்கில்  பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

Mar 23, 2026

பஞ்சாப் வீரர் திக்விஜய் கிளாசிக் ஸ்னுாக்கரில் திக்விஜய் 'சாம்பியன்' பட்டம் வென்றார்.

சி.சி.ஐ., கிளாசிக் ஸ்னுாக்கர் தொடர் மும்பையில், பைனலில் பஞ்சாப்பின் திக்விஜய் கேடியன், பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் ஆணையம்  பிரிஜேஷ் தமானி மோதி, திக் விஜய் 7-1 (55-59, 88-17, 77-1, 83-73, 76-36, 92-0, 62-53) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட் டத்தை கைப்பற்றினார். திக்விஜய்க்கு, கோப்பையுடன், ரூ.3.5 லட்சம் பரிசுத்தொகையும், இரண்டாவது இடம் பிடித்த பிரிஜேஷிற்கு ரூ. 1.75 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 

Mar 23, 2026

இந்தியாவின் அனாஹத் சிங், அபே சிங் இந்திய ஓபன் ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றனர்.

 இந்திய ஓபன் ஸ்குவாஷ் தொடர் மும்பையில்,  பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் ஹனா மோதாஸ் மோதினர். முதலிரண்டு செட்டை 11-5, 11-6 எனக் கைப்பற்றிய அனாஹத், 3வது செட்டை 9-11 என இழந்தார். 4வது செட்டை 11-6 என தன்வசப்படுத்தினார். மொத்தம் 34 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில்  3-1 (11-5, 11-6, 9-11, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் இந்தியாவின் வீர் சோட்ரானி, அபே சிங் ஆண்களுக்கானபைனலில் மோதி, அபே சிங் 3-0 (11-9, 11-8, 11-4) என்ற கணக்கில்  வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

Mar 21, 2026

பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிசில், பவினா படேல் தங்கம் வென்றார்.

.மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடர் இத்தாலியில் பெண்கள்ஒற்றையர் 'சி 4-5' பிரிவில் ('வீல் சேர்') இந்தியா சார்பில் பவினா படேல்  பங்கேற்றுகாலிறுதியில் 3-0 (11-8, 11-2, 11-6) என்ற நேர் செட்டில்தென் கொரியாவின் சங்யே மூனை வென்றார். அடுத்து நடந்த அரையிறுதியில்மற்றொரு தென் கொரிய வீராங்கனை யங் ஜங்கை சந்தித்து பவினா 3-1என  (8-11, 11-8, 11-4, 11-4) வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.பைனலில் பவினா, துருக்கியின் ஐயர்ம் ஓலக்கை எதிர்கொண்டார். முதல் இரு செட்டை பவினா 11-2, 11-6 14-12 என வென்று, , 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

Mar 21, 2026

இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தான்விஅரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர்மும்பையில். நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தான்வி கன்னா, மலேசியாவின் எய்னா அமா னியை சந்தித் தார்.  முடிவில் தான்வி, 3-1 என்ற செட்கணக்கில்வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.ஜோஷ்னா சின்னப்பா இந்தியாவின் சீனியர் வீராங்கனை, எகிப்தில் நாடியன் எல்ஹாம்மமியுடன் மோதி., ஜோஷ்னா 1-3 என்ற (8-11, 11-8, 6-11, 1-11)கணக்கில் தோல்வியடைந்தார். இந்தியாவின் வீர் சோட்ரானி    ஆண்கள் பிரிவு காலிறுதியில்   3-0 என  (11-9, 11-8, 11-2) மலேசியாவின் முகமது ஷராப்பை வென்றார்.

Mar 21, 2026

ஐ.எஸ்.எல் கால்பந்து லீக் போட்டியில் ஒடிசா அணிவெற்றி.

ஒடிசா அணி ஐ.எஸ்.எல்கால்பந்து லீக் போட்டியில் 4-1 என, வடகிழக்கு யுனைடெட் அணியை வென்றது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன்  லீக் போட்டியில் நேற்று, அசாமின் கவுகாத்தியில் வடகிழக்கு யுனைடெட், ஒடிசா அணிகள் மோதி, ஒடிசா அணி 4-1 கோல் கணக்கில் வென்றது. இதுவரை விளையா டிய 4 போட்டியில், ஒரு வெற்றி, 2 'டிரா', ஒரு தோல்வி என, 5 புள்ளிக ளுடன் ஒடிசா அணி 9வது இடத்துக்கு முன்னேறியது. 

Mar 20, 2026

மெஸ்ஸி கால்பந்து  வீரர் சர்வதேச கால்பந்து அரங்கில்  900 வது கோல்அடித்து சாதனை  .

  வடக்கு, மத்திய அமெரிக்கா, கரீபிய கிளப் அணிகள் பங்கேற்கும் 'கன்காகப்' சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில்,மொத்தம் 27 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டியில் ஒரு கோல் அடித்த மெஸ்ஸி, 38, சர்வதேச கால்பந்து அரங்கில் அதிவேகமாக 900 கோல் அடித்த வீரர் என சாதனை படைத்தார்.1142 போட்டியில் இம் மைல்கல்லை எட்டினார். இந்த இலக்கை அடைந்த இரண்டாவது வீரர் ஆனார். முதலிடத்தில் போர்ச்சுகலின் கிறிஸ்டி யானோ ரொனால்டோ 41, உள்ளார்.

Mar 20, 2026

அனா ஹத்சிங், ஜோஷ்னா சின்னப்பா இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதிக்கு முன்னேறினர்.

இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் மும்பையில் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின்முன்னணி வீராங்கனை அனாஹத் சிங் 18, நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்று,. எகிப்தின் பரிதா வாலித்தை எதிர்கொண்டார்.அனாஹத் முதல் செட் 11-6 ,2  வது செட் 11-9  3வது செட்  11–5 என கைப்பற்றி., 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.இந்தியாவின் சீனியர்  வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 49,  அயர்லாந்தின் பிராயான்னே பிளைனை இரண்டாவது சுற்றில் சந்தித்தார். இதில் ஜோஷ்னா 3-1 என்ற (12– 10, 11-4, 8-11, 11-9) செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார். 

Mar 20, 2026

ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன்பெல்ஜியம், நெதர்லாந்தில், வரும் AUGUST 14 TO 30 ல் நடக்க உள்ளது.

.ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், இரு பிரிவுகளாக 2வது சுற்றில் மோதும். இதில், 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (ஆக. 28)முன்னேறும். பைனல், ஆக. 30ல் நடக்கவுள்ளது.வேல்ஸ் (ஆக. 15), இங்கிலாந்து (ஆக. 17), பாகிஸ்தான் (ஆக. 19) அணிகளுடன்  இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.இந்திய அணி பங்கேற்ற 8 போட்டியில், இந்த ஆண்டுஒன்றில் மட்டும் வெற்றி பெற்றது. ஏழு போட்டியில் தோல்வியடைந்தது. உலக கோப்பை வெல்ல ,கடுமையாக இந்திய அணி போராட வேண்டும். 

Mar 20, 2026

இந்திய வீராங்கனை தன்வி சர்மாஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதிக்கு முன்னேறினார்.

, ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் பிரான்சில்,  .பெண்கள் ஒற்றையர்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மா, அன்மோல் கார்ப் மோதினர்.தன்வி சர்மா 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.இந்தியாவின் ஹரிகரன், அர்ஜுன் ஜோடி, ஸ்காட்லாந்தின் அலெக்சாண்டர் டான், ஆடம் பிரிங்கிள் ஜோடியை  ஆண்கள் இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16 போட்டியில் சந்தித்தது.ஹரிகரன், அர்ஜுன் ஜோடி 26-24, 21-14 என்ற நேர் செட்  கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 136 137

AD's



More News