ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முயற்சிப்பேன் அனாஹத் சிங் .
வரும் 2028, ஜூலை 14-30-ல் அமெரிக்காவின் லாஸ் 28 ஏஞ்சல்ஸ் நகரில்ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. பாரிஸ் (2024) ஒலிம்பிக்கை விட பதக்க போட்டிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டன. கிரிக்கெட், ஸ்குவாஷ் உட்பட 5 புதிய போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
''ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஸ்குவாஷ் சேர்க்கப்பட்டுள்ளதுகுறித்து, இந்தியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் 18, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.உலகின் அனைத்து ஸ்குவாஷ் நட்சத்திரங்களும் ஒலிம்பிக்கை எதிர்பார்த்துள்ளனர்.
தற்போது ஒலிம்பிக் என்பதால், ஒவ்வொருவரும், பதக்கம் வேண்டும், இதில் பங்கேற்று வெல்ல வேண்டும் என கனவு காண்பர். அடுத்த சில ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெறுவது லட்சியமாக இருக்கும். என் மனதிலும் ஒலிம்பிக் முக்கியஇடம் பெற்றுள்ளது. பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்," என்றார் அனாஹத் சிங்.
0
Leave a Reply