10 கி.மீ., ஆஸ்திரியன் நடை சாம்பியன்ஷிப்பின் , பந்தயத்தில், காய்ச்சலுடன் பங்கேற்ற இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி (45 நிமிடம், 47 வினாடி) தங்கப்பதக்கம் வென்றார்.
"பெடரர், நடால், ஆன்டி முர்ரே, ஜோகோவிச் என நான்கு நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தினர் , என இந்திய டென்னிஸ் ஜாம்பவான் மகேஷ் பூபதி கூறினார்.அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு உலக டென்னிசை முன்னோக்கி அழைத்துச் செல்வர்," அல்காரஸ், சின்னர் புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளனர். போட்டிகளில் 4-5 மணி நேரம் வெற்றிக்காக போராடுகின்றனர் என்றார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிக் நகரில் பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் இளவேனில், 635.9 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடித்தார். இது புதிய தேசிய சாதனை ஆனது. இந்தியாவின் மற்ற வீராங்கனைகள் ரமிதா (632.6) 13, அனன்யா (632.4) 15, மேஹனா (631.0) 25வது இடம் பிடித்து வெளியேறினர்.பைனலில் 231.2 புள்ளி எடுத்த இளவேனில், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார்.ஆண்களுக்கான 10 6. ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் ராவத், 582 புள்ளியுடன் 5வது இடம் பிடித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடம்பிடித்த தென் ஆப்ரிக்கா (69.44 சதவீதம்), ஆஸ்திரேலியா (67.54) அணிகள் பைனலுக்கு முன்னேறின. இந்திய அணி (50.00) மூன்றாவது இடம் பிடித்து வெளியேறியது.இங்கிலாந்தின் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் இன்று பைனல் துவங்குகிறது. பைனலில் சாதித்து கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 30.78 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. தோற்கும் அணிக்கு ரூ.18 கோடி தரப்பட உள்ளது.தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி, டி.என்.பி.எல்., லீக் போட்டியில் கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணாகல் லுாரி மைதானத்தில் நேற்று நடந்த திருச்சி, சேலம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருச்சி அணி 'பீல் டிங்' தேர்வு செய்தது.சேலம் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. திருச்சி அணி 20 ஓவரில் 172/9 ரன் எடுத்து தோல்வியடைந்தது.
2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ள ஆசிய கோப்பை கால்பந்து தொடர். மூன்றாவது கட்ட தகுதிச் சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன.உலகத் தரவரிசையில் 127 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. தகுதிச்சுற்றில் இந்திய அணி, 0-1 என ஹாங்காங் அணியிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்தியா வென்றால், 5.43 லட்சம் பரிசு தரப்படும் என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது.எனினும் தரவரிசையில் 26 இடம் பின் தங்கிய ஹாங்காங்கிடம் தோற்றது, கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
முன்னாள் இந்திய கேப்டன் தோனி, ஹைடன் (ஆஸி.,) உள்ளிட்ட 7 பேர் கிரிக்கெட் அரங்கில் சாதித்த ஜாம்பவான்களுக்கான ஐ.சி.சி., 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம் பிடித்தனர். கோவை, ஸ்ரீ ராம கிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்த டி. என். பி. எல்., லீக் போட்டியில் சேப் பாக்கம், நெல்லை அணிகள் மோதின, சேப்பாக்கம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்தது, நெல்லை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்து தோல்வி யடைந்தது.
பெண்களுக்கான ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர் ,டொமினிகன் குடியரசில். பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சஹாஜா, ஜப்பானின் ஹிரோகா குவாட்டா ஜோடி, பிரிட்டனின் எஸ்தர் அடிஷினா, வெனிசுலாவின் சோபியா எலினா ஜோடியை எதிர் கொண்டது.முதல் செட்டை சஹாஜா ஜோடி என 6-3 கைப்பற்றி,. தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 14 நிமி டம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா ஜோடி, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது. இந்திய வீராங்கனை வைஷ்ணவி உஸ்பெகிஸ்தானில் நடந்த ஐ.டி.எப்., ஒற்றையர் பிரிவு பைனலில் 2-6, 4-6 என ரஷ்யாவின் பான்ஷினாவிடம் வீழ்ந்து 2வது இடம் பிடித்தார். டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. ஒற்றையர் பிரிவு தரவரிசையில், பிரெஞ்ச் ஓபனில் பைனல் வரை சென்ற இத்தாலியின் ஜானிக் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண் டார். பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
துப்பாக்கி சுடுதல். உலக கோப்பை தொடர் ஜெர்மனியில் இன்று துவங்குகிறது. இதில் இந்தியாவின் இளவேனில், வருண் தோமர், மனு பாகர், ஈஷா சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கால்பந்து 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ள ஆசிய கோப்பை கால் பந்து தொடரில் மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. இவை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும் போட்டிகள் நடக்கும். புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம்.உலகத் தரவரிசையில் 127வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. கோல் எதுவுமின்றி ,இந்தியா-வங்கதேசம் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது. இன்று ஹாங்காங்கில், நடக்கும் போட்டியில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்திக்கிறது.
சர்வதேச செஸ் நார்வேயில், ('கிளாசிக்கல்') தொடர் நடந்தது. மொத்தம் 6 பேர் பங்கேற்றனர். 9 சுற்று முடிவில் நார்வேயின் கார்ல்சன் (15.0), இந்தியாவின் குகேஷ்(14.5), அமெரிக்காவின் நகமுரா (13.0), பேபியானோ (12.5), பேபியா, இந்தி யாவின் அர்ஜுன் (11.5) 'டாப்-5' இடத்தில் இருந்தனர். 10வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றால் சாம்பியன் ஆகலாம் என்ற நிலையில், பேபியானோவை சந்தித்தார். இதன் 48 வது நகர்த்தலில் செய்த தவறு காரணமாக, 50வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியடைந்தார்.கார்ல்சன், அர்ஜுன் மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' அர்ஜுன் வெற்றி பெற்றார். இதையடுத்து 16 புள்ளி பெற்ற கார்ல்சன், நார்வே தொடரில் 7வது முறையாக சாம்பியன் ஆனார்.ரூ.53 லட்சம் பரிசு பெற்றார். பேபியானோ 15.5 புள்ளியுடன் (ரூ.26.40 லட்சம்) இரண் டாவது இடம் பெற்றார். குகேஷிற்கு (14.5) 3வது இடம், ரூ.15.10 லட்சம் கிடைத்தது.5வது இடம் பெற்ற அர் ஜூன் ரூ. 11.32 லட்சம் பெற்றார்.இந்தியாவின் ஹம்பி, பெண்கள் பிரிவில் 10வது சுற்றில் சீனாவின் வென்சுனை 'டை பிரேக்க ரில்' வென்றார். முடிவில் 15 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்தார். உக் ரைனின் அனா முஜிசக் (16.5), சீனாவின் டிங் ஜீ (16) முதல் இரு இடம் பிடித்தனர். இந்தியாவின் வைஷா லிக்கு (11) 5வது இடம் கிடைத்தது.
.தைவான் தடகள ஓபன் சீனதைபேயில், நடந்தது. பெண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில், தமிழகத்தின் வித்யா ராம்ராஜ்(56.53 வினாடி) தங்கப்பதக்கத்தை சென்றார். ஆண்களுக்கான 400 மீ.,தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில் யாஷஸ் பாலக்ஷா (49.22 வினாடி) வெள்ளி வென்றார். இந்தியாவின் பூஜா பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனலில் - இலக்கை 2 நிமிடம், 02.79 5 வினாடியில் கடந்து, புதிய சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனைடிவிங்கிள் சவுத்தரி (2 நிமி டம், 06.96 வினாடி) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்தியாவின் கிருஷ்ணன்குமார், ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனலில் பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 48.46 வினாடியில் கடந்து, , தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். விஷால், தரம்வீர் சவுத்தரி, சந்தோஷ், மானு அடங்கிய இந்திய அணி ஆண்களுக்கான 4×400 மீ.,தொடர் ஓட்டத்தின் பைனலில் (3 நிமிடம், 05.58 வினாடி) தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றது.