25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Jun 23, 2025

பாரா பவர்லிப்டிங் உலக கோப்பை தொடர் .

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பவர்லிப்டிங் உலக கோப்பை தொடர் சீனாவின் பீஜிங்கில்,  . ஆண்களுக்கான 59 கிலோ பிரிவில் அதிகபட்சமாக 153 கிலோ தூக்கிய இந்தியாவின் குல்பாம் அகமது வெண்கலம் வென்றார். இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்.ஆண்களுக்கான 72 கிலோ பிரிவில், 156 கிலோ தூக்கிய இந்தியாவின் ராமுபாய் பம்பாவா வெண்கலம் வென்றார்.. ஆண்களுக்கான மாஸ்டர்ஸ் பிரிவில் 150 கிலோ தூக்கிய இந்தியாவின் ஜோபி மாத்யூ தங்கத்தை கைப்பற்றினார்.. இந்தியாவுக்கு நேற்றைய முதல் நாளில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கம் கிடைத்தது. 

Jun 23, 2025

டைமண்ட் லீக் தடகளத்தின் ஈட்டி எரிதல்

16வது சீசன் டைமண்ட் லீக் தடகளத்தின் 4வது சுற்று பிரான்சின் பாரிசில் நடந்தது. இந்தியா சார்பில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற நீரஜ் சோப்ரா 27, பங்கேற்றார். இவர், முதன் முறையாகதோகா டைமண்ட் லீக் (மே 16) போட்டியில் 90 மீ.,க்கும் (90.23) மேல் எறிந்து இருந்தார். இம்முறை முதல் வாய்ப்பில், அதிக பட்சம் 88.16 மீ., துாரம் எறிந்தார்.. கடைசி, 6வது வாய்ப்பில் 82.89 மீ., துாரம் மட்டும் எறிந்தார். இருப்பினும், நீரஜ் சோப்ரா (88.16) முத லிடம் பிடித்து, பட்டம் கைப்பற்றினார்.

Jun 23, 2025

டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி. 7வது சதம் கடந்த ரிஷாப் பன்ட்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் நடக்கின்றது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்தியா, 3 விக்கெட் டுக்கு 359 ரன் எடுத்திருந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக் கிறது. ரிஷாப் வழக்கம் போல வேகமாக ரன் சேர்த்தார். 99 ரன்னில் இருந்த இவர், சோயப் பஷிர் பந்தில் சிக்சர் அடித்து, 7வது சதம் கடந்தார். இந்திய அணி முதல் இன்னிங் சில் 471 ரன்னுக்கு ஆல் அவுட்டானது, மழை குறுக்கிட, 45 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 133/2ரன் எடுத்தது. இன்று ஆட்டம் தொடரும் .

Jun 21, 2025

விளையாட்டு போட்டிகள் JUNE 21 ST

பாட்மிண்டன் தாய்லாந்தின் ஆசிய பாரா பாட்மின்டன் சாம் பியன்ஷிப் நடக்கிறது.பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் (எஸ்.யு.5), இந்தியாவின் துளசிமதி (தமிழகம்), ஜப்பானின் சுகினோவை சந்தித்தார். துளசிமதி 21-6, 21-15 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.பெண்கள் இரட்டையர் காலிறுதியில் (எஸ்.எல்.3) இந்தியாவின் துளசிமதி, மானசி ஜோஷி ஜோடி, இந்தியாவின் பாலக் கோலி, தாய்லாந்தின் சனிதா ஜோடியை 21-10, 21-16 என வீழ்த்தியது.கலப்பு இரட்டையர் 'ரவுண்டு-16' போட்டியில் துளசிமதி, நிதேஷ் , ஜோடி 21-14, 21-11 என இந்தியாவின் சஞ்சனா, ஜதின் ஆசாத் ஜோடியை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.செஸ் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது.இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட் பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். நேற்று இரண்டாவது சுற்று நடந்தது. பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஷம்சி தினை சந்தித்தார். பிரக்ஞானந்தா, 33வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.அர்ஜுன், ஈரானின் பர்ஹாம் மோதிய போட்டி 35வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. அரவிந்த் சிதம்பரம், உஸ்பெகிஸ்தான் வீரர் நாடிர்பெக்கிடம் தோல்வியடைந்தார். முதல் இருசுற்று முடிவில் இந்திய வீரர்கள் அர்ஜுன் (1.5 புள்ளி), பிரக் ஞானந்தா (1.5) 3, 4 வது இடத்தில் உள்ளனர். ஹாக்கி ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில் இந்திய மாஸ்டர்ஸ் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கிறது.நேற்று நடந்த பெண்கள் போட்டியில் கர்நாடகா அணி 12-0 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை  வீழ்த்தியது. மற்றொரு  போட்டியில் ஹிமாச்சல் அணி, கேரளாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆண்களுக்கான போட்டியில் ஆந்திரா அணி 4-3 என கேரளா அணியை வீழ்த்தியது. 

Jun 21, 2025

கிரிக்கெட் உலக டெஸ்ட்சாம்பியன் ஷிப் (2025-27) நான்காவது சீசன்.

 கிரிக்கெட் உலக டெஸ்ட்சாம்பியன் ஷிப் (2025-27) நான்காவது சீசன் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக இங்கி லாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற் கிறது. முதல் டெஸ்ட் நேற்று லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் துவங்கியது.'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ்,  பீல்டிங் தேர்வு செய்தார்.  ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர் களுக்கு இந்தியா, இங்கிலாந்து அணியினர் மவுன அஞ்சலி செலுத்தினர். கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். இங்கிலாந்து மண்ணில் களமிறங்கிய அறிமுக டெஸ்ட் இன்னிங்சில் சதம் விளாசிய 5வது இந்திய வீரரானார் ஜெய்ஸ்வால். இதற்கு முன் விஜய் மஞ்ச் ரேக்கர் (1952,133 ரன், லீட்ஸ்), சந்தீப் பாட்டீல் (1982, 129* ரன் மான்செஸ்டர்), சவுரவ் கங்குலி (1996, 131 ரன், லார்ட்ஸ்), முரளி விஜய் (2014,  146 ரன், நாட்டிங்காம்) இப்படி சாதித்திருந்தனர். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் டுக்கு 359 ரன் எடுத்து இருந்தது. சுப்மன் (127), ரிஷாப் பன்ட் (65) அவுட் டாகாமல் இருந்தனர்.

Jun 21, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் லோகா, சின்னம் அறிமுகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் வரும் செப். 26-அக் 5ல் டில்லி, நேரு மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான 100 நாள் 'கவுன்ட்-டவுண்' நேற்று துவங்கியது.டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் லோகா, சின்னம் அறிமுகம் செய் யப்பட்டன. இந்தியாவின் பாரம்பரியத்தை போற் றும்வகையில், 'கார்ட்டூன்' வடிவ குட்டி யானை 'விராஜ்' சின்னமாக அறிவிக்கப்பட்டது.இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவரும் பாராலிம்பிக்கில் 2 தங்கம் (ஈட்டி எறிதல்) வென்ற வீரருமான தேவேந்திர ஜஜாரியா கூறுகையில், "இந்தியாவில் முதல் முறையாக உலக பாரா தடகள சாம்பியன் ஷிப் நடக்க இருப்பது பெருமையான விஷயம் என்று இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவரும் பாராலிம்பிக்கில் 2 தங்கம் (ஈட்டி எறிதல்) வென்ற வீரருமான தேவேந்திர ஜஜாரியா என்றார்.  100 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 186 பதக்கங்கள்  வழங்கப்படும்.இப்போட்டிகளை சிறப்பாக நடத்துவோம். இதன் மூலம் 2036 ல் ஒலிம்பிக், பாராலிம் பிக்கை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்து வோம்," என்றார்.தன்னம்பிக்கை, வலிமையின் அடையாளமாக 'விராஜ்' சின்னம் விளங்குகிறது என்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 'பாரா' உலக தடகளத்தின் விளம்பர துாதரான நடிகை, எம். பி., கங்கனா ரணாவத் கூறினார்.

Jun 20, 2025

துணை முதல்வர் உதயநிதியால் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக 'லோகோ' வெளியிடப்பட்டது.

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ,ஹாக்கி இந்தியா, ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர், தமிழகத்தில் நவ., 28- டிச., 10 நடக்க உள்ளது.24 சர்வதேச அணிகள் பங்கேற்க  உள்ள  இத் தொடரில் போட்டிகள், சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கம், மதுரை ஹாக்கி அரங்கிலும், நடக்கின்றன. நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில், போட்டி தொடர்பாக, ஹாக்கி இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. உதயநிதி உலக கோப்பை தொடரின் 'லோகோ'வை வெளியிட்டு ,உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக, விளையாட் டுத்துறை பட்ஜெட்டில், 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில், மதுரைஹாக்கிஅரங்கின்சீரமைப்புபணிக்கானதொகையும்உள்ளடங்கும்.இப்போட்டிகள், சென்னை, மதுரையில் நடப்பது பெருமை.தமிழகத்தை விளையாட்டு போட்டிக்கான தலைமையகமாக உருவாக்க அனைவரும் ஒன்றாக உழைப்போம். . ,உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக 'லோகோ' வெளியிடப்பட்டது.

Jun 20, 2025

ஆசிய கோப்பை வில்வித்தை

 ஆசியகோப்பைவில்வித்தைஸ்டேஜ் 2 போட்டிசிங்கப்பூரில்ஜூனியர்ரிகர்வ்பிரிவுஅணிகளுக்கானஅரையிறுதியில் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் விஷ்ணு, பராஸ் ஹூடா, ஜூயல் சர்கார் இடம் பெற்ற அணி, வங்கதேசத்தை சந்தித்தது.இந்திய அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. இதில் 'நம் பர்-3' ஜப்பான அணியை சந்திக்கவுள்ளது.கலப்பு ரிகர்வ் அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, விஷ்ணு ஜோடி, 5-3 என்ற கணக்கில் சிங்கப்பூரின் தபிதா, எர்ன் லின் ஜோடியை வென்று, பைனலுக்கு முன்னேறியது.காம்பவுண்டு அணிகளுக்கான அரையிறுதியில் குஷால், கணேஷ், மிஹிர் இடம் பெற்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.இப்போட்டி 232-232 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் ஆப்' போட்டியில் இந்தியா 30-29 என வென்றது.பைனலில் கஜகஸ்தானை சந்திக்க உள்ளது.இதுவரை இந்தியாவின் 5 அணிகள் பைனலுக்கு முன்னேறியுள்ளன. 

Jun 20, 2025

டெஸ்ட் தொடருக்கான கோப்பை யை அறிமுகம் செய்த ஆண்டர்சன் (இங்கிலாந்து )சச்சின் ..

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ('ஆண்டர்சன்  சச்சின்' டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இன்று லீட் சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் துவங்குகிறது.கோலி, ரோகித், அஷ்வின் ஓய்வு பெற்ற நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய அத்தியாயம் இளம் சுப்மன் கில் தலைமையில் ஆரம்பமாகிறது.இது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான (2025-2027) இந்தியாவின் முதல் போட்டி . அட்டவணை . (போட்டி மதியம் 3:30 மணிக்கு துவங்கும். )  ஜூன்  20-24  1-வது டெஸ்ட்  - இடம் லீட்ஸ் ஜூலை 2-6, 2-வது டெஸ்ட்-  இடம் பர்கிங்காம்,  ஜூலை 10-14,  3-வது டெஸ்ட் - இடம்  லார்ட்ஸ் ஜூலை 23- 27, 4-வது டெஸ்ட் - இடம் மான்செஸ்டர்.  ஜூலை 31- ஆகஸ்ட் 4 வரை, 5-வது டெஸ்ட், இடம் ஓவல் .தமிழ்நாடுகிரிக்கெட்19-ம்தேதி டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சேலத்தில், நேற்று சேலம், சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேப்பாக்கம் அணி பீல் டிங் தேர்வு செய்தது. சேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 160 ரன் எடுத்தது, சேப்பாக்கம் அணி 16.3 ஓவரில் 162/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது

Jun 19, 2025

கிரிக்கெட் - 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சீசன் துவங்கியது.

 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சீசன் துவங்கியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை லீட்சில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணிக்கு சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.ரோகித் சர்மா, கோலி, அஷ்வின் என சீனியர்கள் ஓய்வு பெற்றதால், இளம் வீரர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தவிர, முதல் டெஸ்டில் களமிறங்கும் லெவன் அணியில் யார்? இடம் பெறுவர் எனத் தெரியவந்துள்ளது. இந்திய அணி வீரர்கள் லண்டனில் இருந்து முதல் டெஸ்ட் நடக்கவுள்ள லீட்சிற்கு ரயிலில் பயணம் செய்தனர். இதுகுறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்டது. ரயில் பயணத்தில் வீரர்கள் தங்களது சிறு வயது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 'ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து, இமாச்சல பிரதேசத்தில் மலைப்ப குதியில் பயணம் செய்துள்ளதாக', துருவ் ஜூரல் தெரிவித்தார்.தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி 18-ம் தேதிசேலத்தில், நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை, நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவு லிங்' தேர்வு செய்தார்.  மதுரை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது.  நெல்லை அணி 18.5 ஓவரில் 158 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை, நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவு லிங்' தேர்வு செய்தார்.  மதுரை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது.  நெல்லை அணி 18.5 ஓவரில் 158 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது.

1 2 ... 96 97 98 99 100 101 102 ... 136 137

AD's



More News