டென்னிஸ்
பெண்களுக்கான ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர் ,டொமினிகன் குடியரசில். பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சஹாஜா, ஜப்பானின் ஹிரோகா குவாட்டா ஜோடி, பிரிட்டனின் எஸ்தர் அடிஷினா, வெனிசுலாவின் சோபியா எலினா ஜோடியை எதிர் கொண்டது.
முதல் செட்டை சஹாஜா ஜோடி என 6-3 கைப்பற்றி,. தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 14 நிமி டம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா ஜோடி, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.
இந்திய வீராங்கனை வைஷ்ணவி உஸ்பெகிஸ்தானில் நடந்த ஐ.டி.எப்., ஒற்றையர் பிரிவு பைனலில் 2-6, 4-6 என ரஷ்யாவின் பான்ஷினாவிடம் வீழ்ந்து 2வது இடம் பிடித்தார்.
டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. ஒற்றையர் பிரிவு தரவரிசையில், பிரெஞ்ச் ஓபனில் பைனல் வரை சென்ற இத்தாலியின் ஜானிக் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண் டார். பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
0
Leave a Reply