அராய்ஜீத் சிங் தலைமையிலான இந்திய ஜூனியர் ஆண்கள் அணி, நான்கு நாடுகளுக்கு இடையிலான தொட ரில் (ஜூன் 21-25) பங்கேற்க பெர்லின் சென்றது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 727 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஜெமிமா 14, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14வது இடத்தில் உள்ளனர். 'டி-20' பேட்டர் வரிசையில் ஸ்மிருதி மந்தனா, 4வது இடத்தில் உள்ளார். 18-ம் தேதி தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி பி.எல்., தொடரின் 2வது கட்ட போட்டிகள் சேலத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த போட்டியில் கோவை, திருச்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' வென்ற கோவை பீல்டிங் செய்தது. திருச்சி அணி 20 ஓவரில், 168/5 ரன் எடுத்தது. கோவை அணி 20 ஓவரில் 154/9 ரன் மட்டும் எடுத்து 14 ரன்னில் தோல்வியடைந்தது.
டென்னிஸ் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், ஜூன் 30-ஜூலை 13ல் லண்டனில் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் பிரிட்டனில் ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது.இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி ஜோடி, செக்குடியரசின் ஜாகுப், டென்மார்க்கின் ஹோல்கர் ஜோடியை சந்தித்தது.'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் இரு செட்டை இரு ஜோடியும் மாறி மாறி வசப்படுத்தின. அடுத்து எடுத்து நடந்த நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' போபண்ணா ஜோடி (10-6) வென்றது.ஒரு மணி நேரம், 41 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 7-6, 6-7, 10-6 வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. வாலிபால் உஸ்பெகிஸ்தானில் 16, 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சர்வதேச தேசிய லீக் வாலிபால் தொடர் நடந்தது. இந்திய அணி 19 வயது பிரிவில் பங்கேற்றது. முதல் 5 போட்டியில் 3 வெற்றி, 2 தோல்வியடைந்தது இந்திய அணி. பின் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, கிர்கிஸ் தான் மோதின. முதல் 'செட்டை இழந்த இந்தியா (21-25) அடுத்த மூன்று செட்டுகளையும் 25-14, 25-08, 25-23 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய அணி 3-1 என வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றியது.
16- ம் தேதி போட்டிகள் டி.என்.பி.எல்., தொடரின் இரண்டாவது கட்ட போட்டி சேலத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் , சேப்பாக்கம் திண்டுக்கல் டிராகன் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் ஆர்.அஸ்வின் முதலில் 'பீல்டிங்' தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் சேப் பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது.,திண்டுக்கல் அணி 8 விக்கெட்டுக்கு 172 ரன்களே எடுத்தது. இதனால் சேப்பாக் |சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன் 5 வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
13- வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி, அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. மொத்தம் 28 லீக் ஆட்டம் உள்பட 31 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்தியாவில் பெங்களூரு, இந்தூர்,கவுகாத்தி,விசாகப்பட்டினத்திலும், இலங்கையில் கொழும்பு நகரிலும் போட்டிகள் நடக்கின்றன.12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா. இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.செப்டம்பர் 30-ந்தேதி பெங்களூருவில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது.
குத்துச்சண்டைநியூயார்க்கில் நடந்த தொழில்முறை போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், மெக்சிகோவின் ஜோசு சில்வா மோதினர். இதில் நிஷாந்த் 60-54 என. வெற்றி பெற்றார். ஹாக்கி வரும் டிச. 1-13ல் ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 11வது சீசன் சிலியில் நடக்கவுள்ளது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி, 'சி' பிரிவில் ஜெர்மனி, அயர்லாந்து, நமீபியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக பெல்ஜியம் சென்றுள்ள ஜூனியர் இந்திய பெண்கள் அணி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுடன் 5 போட்டிகளில்விளையாடுகிறது. பெல்ஜியத்துக்கு எதிரான 3 போட்டியிலும் வென்ற இந்தியா, 4வது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. நந்தினி (8வது நிமி டம்), துணை கேப்டன் ஹினா பானோ (14வது) தலா ஒரு கோல் அடித்தனர். டேபிள் டென்னிஸ் ஆமதாபாத்தில் (குஜராத்) அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வதுசீசன்நடந்தது. நேற்று நடந்த பைனலில் மும்பை, ஜெய்ப்பூர் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் மும்பையின் லிலியன் பார்டெட் 2-1 என ஜெய்ப்பூரின் கனக்ஜாவை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ஜெய்ப்பூரின் ஸ்ரீஜா அகுலா 1-2 என மும்பையின் பெர்னாடெட் சோக்சிடம் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையர் போட்டியில் மும்பையின் ஆகாஷ் பால், பெர்னா டெட் சோக்ஸ் ஜோடி 3-0 என ஜெய்ப்பூரின் ஜீத் சந் திரா, பிரிட் ஏர்லேண்ட் ஜோடியை வென்றது. ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஜீத் சந்திரா (ஜெய்ப் பூர்) 2-1 என அபினந்தை (மும்பை) வீழ்த்தினார்.நான்கு போட்டிகளின் முடிவில் மும்பை அணி 8-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றது. மல்யுத்தம்கிர்கிஸ்தானில் நடக்கவுள்ள ஜூனியர் (20 வயது) ஆசிய சாம்பியன்ஷிப் (ஜூலை 5-13) போட்டிக்கு இந்திய வீராங்கனை மான்சி லேதர் (68 கிலோ) தகுதிபெற்றார்.
14- ம் தேதி போட்டிகள் டி.என்.பி.எல்., தொடரின் இரண்டாவது கட்ட போட்டி சேலத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் கோவை, சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேப்பாக்கம் அணி கேப்டன் பாபா அபராஜித் 'பீல்டிங்' தேர்வு செய்தார். கோவை அணி 19.4 ஓவரில் 144 ரன்னில் ஆல் அவுட்டானது, சேப்பாக்கம் அணி 15.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 15 - ம் தேதி இரண்டு போட்டிகள் சேலத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட் டியில் திருச்சி, திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி கேப்டன் சாய் கிஷோர் 'பவுலிங்' தேர்வு செய்தார்.திருச்சி அணி 20 ஓவரில் 7 விக்கெட் டுக்கு 164 ரன் எடுத்தது..திருப்பூர் அணி 18.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்து வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டி மற்றொரு லீக் போட்டியில் சேலம், நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவுலிங்' தேர்வு செய்தார். சேலம் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன் எடுத்தது நெல்லை அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 130 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம் பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212, தென் ஆப்ரிக்கா 138 ரன் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 207 ரன் எடுத்தது.பின், 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி,3ம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்திருந்தது. நேற்று 4ம் நாள் ஆட்டம் நடந்தது. தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 69 ரன் தேவைப்பட்டது. தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஐ.சி.சி., நடத்தும் மிகப் பெரிய தொடர்களில் தென் ஆப்ரிக்க அணி 27 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் ஆனது. கடைசியாக 1998ல் வங்கதேசத்தில் நடந்த ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பை வென்றிருந்தது.உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணிக்கு ரூ. 30.78 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலியா வுக்கு ரூ. 18 கோடி பரிசாக கிடைத்தது.
துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டிஜெர்மனியின் முனிக் நகரில் நடக்கிறது. நேற்று பெண்களுக்கான 10மீ., ஏர் பிஸ்டல் போட்டி நடந்தது.இந்தியா சார்பில் பங்கேற்ற சுருச்சி சிங் 19,தகுதிச்சுற்றில் 588 புள்ளி எடுத்து,2வது இடம்பிடித்தார். ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலம் வென்ற மனுபாகர் (574), 25வதுஇடம் பிடித்து வெளியேறினார்.பைனலில் கடைசி இருவாய்ப்பு முன், சுருச்சி 2வது இடத்தில் இருந்தார், கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட சுருச்சி 241.9 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி டி. என். பி.எல்., தொடரின் இரண்டாவது கட்டபோட்டி சேலத்தில் நேற்று துவங்கியது. இதில் திருப்பூர்,சேலம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேலம் அணி கேப்டன் அபிஷேக் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.திருப்பூர் அணி 20 ஓவரில் 177/8 ரன் குவித்தது. சேலம் அணி 19.5 ஓவரில் 178/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது டென்னிஸ் சீனாவில், ஆண்களுக்கான ஐ.டி.எப்.,டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், சீனதைபேயின் சுங்,ஹாவோ ஹுவாங் மோதினர்.அபாரமாக ஆடிய சசிகுமார் 6,3,6,2 என்றநேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சித்தார்த் விஷ்வகர்மா, அமெரிக்காவின் இவான் ஜு மோதினர்.இதில் சித்தார்த் 6-3, 2-6, 6-4 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். ஹாக்கி சிலியில், வரும் டிச.1,13ல்ஜூனியர் பெண்களுக்கான உலககோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி,'சி' பிரிவில் ஜெர்மனி, அயர்லாந்து, நமீபியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக பெல்ஜியம் சென்றுள்ள ஜூனியர் இந்திய பெண்கள் அணி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுடன் 5 போட்டிகளில் விளையாடுகிறது.முதலிரண்டு போட்டியில் இந்திய அணி,பெல்ஜியத்தை வீழ்த்தியது.மூன்றாவது போட்டியிலும் இந்தியா, பெல்ஜியம் மோதின. இதில் இந்திய அணி 3-2 என 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. இந்தியா சார்பில் சோனம் (4வதுநிமிடம்), லால்தான்ட் லுவாங்கி (32வது), கனிகா சிவாச் (51வது) தலாஒரு கோல் அடித்தனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி நேற்று நடந்த கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் டி.என்.பி.எல்., லீக் போட்டியில் கோவை, மதுரை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மதுரை அணி கேப்டன் சதுர்வேத் 'பவுலிங்' தேர்வு செய்தார். கோவை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது, மதுரை அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்து, இத்தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.டேபிள் டென்னிஸ், அல்டிமேட் டேபிள் டென்னிஸ்ஆமதாபாத்தில்(குஜராத்)6வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் புனே, ஜெய்ப்பூர் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் புனேயின் அனிர்பன் கோஷ், ஜெய்ப்பூரின் ஜீத் சந்திரா மோதினர். இதில் ஜீத் சந்திரா 21 என வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் பிரிட் ஏர் லேண்ட் (ஜெய்ப்பூர்) 2-1 என ரீத் ரிஷ்யாவை (புனே) தோற்கடித்தார். கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் ஜெய்ப்பூரின் பிரிட் ஏர்லேண்ட், ஜீத் சந்திரா ஜோடி 21 என புனேயின் ரீத் ரிஷ்யா. அல்வாரோ ரோபிள்ஸ், ஜோடியை வீழ்த்தியது.ஐந்து போட்டியில்,4ல் வென்ற ஜெய்ப்பூர் அணி 41 புள்ளிகளுடன்முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்து,. 2வது இடத்துக்கு முன்னேறியது. உலக கோப்பை கால்பந்து போட்டி உலக கோப்பை கால்பந்து 'பிபா' தொடர் அமெரிக்காவில்,2026, ஜூன் 11ஜூலை 19ல்.மொத்தம் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதன்,தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிச்சுற்றில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும், முடிவில் பட்டியலில் 'டாப்-6' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறும். பிரேசிலின் சாவ் பாலோ நகரில் இதன் 16 வது சுற்று போட்டி நடந்தது. பிரேசில் அணி பராகுவேயை எதிர்கொண்டது. முதல் பாதி முடிவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன், பந்தை கொண்டு சென்ற மதியாஸ் குன்ஹா, பந்தை பராகுவே கோல் ஏரியாவுக்குள் அனுப்பினார். வினிசியஸ் ஜூனியர்,வலது காலால் பந்தை உதைத்து வலைக்குள் தள்ளி, கோலாக மாற்றினார்.இரண்டாவது பாதியில் இரு அணி தரப்பிலும் யாரும் கோல் அடிக்க வில்லை. முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஹாக்கி வரும் டிச. 113ல் ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 11வது சீசன் சிலியில் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக பெல்ஜியம் சென்றுள்ள ஜூனியர் இந்திய பெண்கள் அணி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுடன் 5 போட்டிகளில் விளையாடுகிறது.பெல்ஜியத்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா, பெல்ஜியம் மீண்டும் மோதின. இந்திய அணி 2-1 என வெற்றி பெற்றது. விளையாட்டு போட்டிகள்.