25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Jul 18, 2025

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ,சென்னையில்  250 சர்வதேச மகளிர் சாம்பியன்ஷிப் - 2025' சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி.

சென்னை நுங்கம்பாக்கம், எஸ்.டி.ஏ.டி டென்னிஸ் திடலில், சென்னை ஓபன் எனப்படும், 'டபிள்யு.டி.ஏ., 250 சர்வதேச மகளிர் சாம்பியன்ஷிப் - 2025' போட்டி, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, , அக்டோபர், 27 முதல் நவம்பர், 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு, பரிசுத் தொகையாக, 31 லட்சத்து 58,100 ரூபாய் வழங்கப்பட உள்ளது.உலக மகளிர் டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ஆகியவை இணைந்து, இப் போட்டியை நடத்துகின்றன.துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டி: இந்தியாவில் புகழ்பெற்ற, டென்னிஸ் தொடர்களில் ஒன்றான, சர்வதேச டென்னிஸ் போட்டியான, 'சென்னை ஓபன் -2025' சென்னையில் மீண்டும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நமக்கு மிக முக்கி யமான ஆண்டு. தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளோம். இந்த போட்டிக்காக, முதல்வர் ஸ்டாலின், 12 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். அத்துடன் நடப்பு ஆண்டில், ஆசிய சர்பிங், உலகக் கோப்பை ஹாக்கியும் தமிழகத்தில் நடைபெற உள்ளது. சென்னையில் நடக்கவுள்ள சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2025 ஆண்டு போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் துணை முதல்வர் உதயநிதிக்கு 2024ம் ஆண்டு மலரை வழங்கினார்.

Jul 17, 2025

உலக வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர்

இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கானசர்வதேச வாலிபால் கூட்டமைப்பு சார்பில், உலக வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் இரண்டாவது சீசன் 2026 பல்கேரியாவின் சோபியா நகரில் நடக்க உள்ளன.தாய் லாந்தில் ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப்(16 வயது) நடக்கிறது. இதில் 'ஏ' பிரி வில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும்(தாய் லாந்து, ஆஸ்திரேலியா,சீனா) வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதில் நேற்று உலக வாலிபால் சாம்பியன்ஷிப் முதல் சீசனில் பைனலுக்கு முன்னேறிய வலிமையான உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதல் இரு செட்டை இந்தியா 25-21, 25-16 என கைப்பற்றியது. அடுத்த இரு செட்டுகளை உஸ்பெகிஸ்தான் 25-19, 25,18 என வென்றது.கடைசி,5வது செட்டில் இந்திய அணி 15,13 வென்றது.இந்திய அணி 32 என்ற செட் கணக்கில்முடிவில் வெற்றி பெற்றது. முதன் முறையாக உலக வாலிபால் சாம்பியன் ஷிப்பில் பங்கேற்க தகுதி பெற்றது. இந்திய அணிதற்போது 'இ' பிரிவில் 6 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் ஜப்பானை வீழ்த்தினால்,அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.. 

Jul 17, 2025

பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில்….

பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில்.நான்காவது சுற்றில் இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா என நான்கு வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று நடந்த முதல் போட்டியில் திவ்யா, சீனாவின் ஜூ ஜினரை சந்தித்தார்.திவ்யா,49 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். திவ்யா 1.00 என முன்னிலையில் உள்ளார். இன்றைய இரண்டாவது போட்டியில் 'டிரா' செய்தால் காலிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. .  

Jul 17, 2025

ஜப்பான் ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர்….

ஜப்பான் ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டோக்கியோவில்பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, தென் கொரியாவின் சிம் யு ஜின் மோதினர். இதில் சிந்து 15,-21,14,-21 என தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 8-21, 12-21 என தாய்லாந்தின் போர்ன் பாவி சோச்சுவாங்கிடம் சரிந்தார்.முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா 21-15, 18/21,21/18 என சகவீராங்கனை ரக்ஷிதாஸ்ரீயை வென்றார்.முதல் சுற்றில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ,இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் வாங் ஜெங் ஜிங்கை 21–11, 21-18 என வென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21/18,21/10 என தென் கொரியாவின் காங் மின் ஹயுக், கி டோங் ஜு ஜோடியை வீழ்த்தியது. 

Jul 16, 2025

கிரிக்கெட் நான்காவது டெஸ்ட் (ஜூலை 23-27) மான்செஸ்டரில் நடக்கவுள்ளது.

.கிரிக்கெட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 12 ரன்னில் இந்தியா தோல்வி அடைந்தது. சிராஜும் அவுட்டாக, ஜடேஜா செய்வதறியாது திகைத்து நின்றார். ஆனால், இங்கிலாந்து சரியாக திட்டம் வகுத்து வெற்றியை பறித்துச் சென்றது.முதல்3 போட்டிகளிலும் இரு அணிகளும் கடைசி வரை போராடின. இங்கிலாந்து 2,1 என முன்னிலை பெற்றாலும், இரு அணிகளும் சமபலத்தில் காணப்பட்டன. ஒட்டுமொத்தமாக உயர்தர டெஸ்ட் போட்டிகளைகாண முடிந்தது.இதன் பின் இந்திய அணி வீரர்கள், நான்காவது டெஸ்ட்(ஜூலை23,27) நடக்கவுள்ள மான்செஸ்டருக்கு கிளம்பிச் சென்றனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், வீராங்கனைகள்இங்கிலாந்து மன்னர் சார்லசை சந்தித்தனர்.இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர் மன்பிரீத் கவுர் கூறுகையில்," இதற்கு முன் பலமுறை இங்கிலாந்து வந்துள்ளோம். முதன் முறையாக இப்போது தான் இங்கிலாந்து மன்னரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது சிறந்த அனுபவமாக இருந்தது," என்றார்.

Jul 16, 2025

பெண்களுக்கான உலக செஸ் கோப்பை தொடர் .

 பெண்களுக்கான உலகசெஸ் கோப்பை தொடர்ஜார்ஜியாவில் ,46 நாடுகளில் இருந்து107 பேர் பங்கேற்கின்றனர்.'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம் பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்று நடந்தது. இந்தியாவின்'சீனியர்' வீராங்கனை ஹரிகா, கிரீசின் ஸ்டாவ்ரவுலாவை சந்தித்தார். முதல் இரு போட்டி 'டிரா'ஆக, வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'டை பிரேக்கர்' முதல் இரு போட்டி 'டிரா' ஆனது. 3வது போட்டியில் ஹரிகா வெற்றி பெற்றார். அடுத்து 4வது போட்டியில் ஹரிகா, 28 நகர்த்தல் வரை பின்தங்கி இருந்தார். 29 வது நகர்த்தலில். ஹரிகா வெற்றி பெற்றார். முடிவில் 4.0-2.0 என வென்ற ஹரிகா, 4வது சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில்  வைஷாலி, அமெரிக்காவின் காரிசா மோதினர். 'டை பிரேக்கர்' வரை சென்ற இப்போட்டியில் வைஷாலி 4.0-2.0 என வென்றார்.செஸ் உலக கோப்பை தொடரின் 4வது சுற்றுக்கு, முதன் முறையாக இந்தியாவின் நான்கு வீராங்கனைகள் (ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா) தகுதி பெற்றனர். 

Jul 15, 2025

கிரிக்கெட் லார்ட்சில் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது போட்டி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 387, இந்தியா 387 ரன்எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன் எடுத்தது.பின் 193 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. நான்காவது நாள் ஆட்ட முடிவில் 58/4 ரன் எடுத்திருந்தது. நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய வெற்றிக்கு இன்னும் 135 ரன் தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட் இருந்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ஜடேஜா(61) அவுட்டாகாமல் இருந்தார்.லார்ட்சில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரில் 2,1 என முன்னிலை பெற்றது.நான்காவது டெஸ்ட் வரும் ஜூலை 23ல் மான் செஸ்டரில் துவங்குகிறது. 

Jul 15, 2025

கால்பந்து 'பிபா' உலக கோப்பை 21வது சீசன்.

உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்ற 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் அமெரிக்காவில், ஈஸ்ட் ரூதர்போர்டில் நடந்த பைனலில் இங்கிலாந்தின் செல்சி, பிரான்சின் பாரிஸ்-செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணிகள் மோதின. செல்சி அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. செல்சி அணி சார்பில் பால்மர் 2 (22, 30வது நிமிடம்), ஜோவோ பெட்ரோ (43வது) ஒரு கோல் அடித்தனர். செல்சி அணி 2வது முறையாக உலக சாம்பியன்  பட்டத்தை தட்டிச் சென்றது. இதற்கு முன் 2021-ல் கோப்பை வென்றிருந்தது. 

Jul 15, 2025

டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ஏ.டி.பி., வெளியிட்ட தரவரிசை ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடம்.

ஏ.டி.பி., டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டது. ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர், முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். லண்டனில் நடந்த விம்பிள்டன் பைனலில் அசத்திமுதல் கோப்பை வென்றார். இத்தொடரில் பைனல் வரை சென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ்,2வது இடத்தில் நீடிக்கிறார். அரையிறுதியில் தோல்வியடைந்த அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், 4வது இடத்துக்கு முன்னேறினார். செர்பியாவின் ஜோகோவிச், 6வது இடத்தில் தொடர்கிறார். பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் போலந்தின் இகாஸ்வியா டெக்,4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார்.  விம்பிள்டன் பைனலில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Jul 14, 2025

டென்னிஸ்  சாம்பியன் விருதுடன் ஸ்வியாடெக் .

 பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-4' போலந்தின் இகா ஸ்வியாடெக் 24, 'நம்பர்-12' அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 23, மோதினர். முதல் செட்டை 6-0 எனக் கைப்பற்றிய ஸ்வியாடெக், இரண்டாவது செட்டையும் 6-0 என வென்றார்.மொத்தம் 57 நிமிடம் நீடித்த பைனலில் ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் சுலபமாக வெற்றி பெற்று, விம்பிள்டனில் முதன்மு றையாக கோப்பை வென்றார்.இது, இவரது 6வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.விம்பிள்டன் பைனலில் 6-0, 6-0 என வெற்றி பெற்ற 2வது வீராங்கனையானார் ஸ்வியாடெக். 'ஓபன் எரா'வில் இப்படி வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் ஸ்வியாடெக் ஸ்வியாடெக், ரூ.35 கோடி, 2வது இடம் பிடித்த அனிசிமோவா, ரூ.17 கோடி பரிசு பெற் றனர்.விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் ஸ்வியாடெக்கிடம்(போலந்து) தோற்ற அனிசிமோவா(அமெரிக்கா) கோப்பையை கோட்டைவிட்ட. இந்த சோகத்தில் அழுத அனிசிமோவா கூறுகையில்,"எனது வளர்ச்சிக்காக பல தியாகங்களை செய்தவர் அம்மா. பைனலை காண புளோரிடாவில் இருந்து லண்டன் வந்த அம்மாவுக்கு நன்றி. தோல்விக்காக ரசிகர்களிடம் 'சாரி' கேட்கிறேன்," என்றார். 

1 2 ... 90 91 92 93 94 95 96 ... 136 137

AD's