25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Jul 07, 2025

குத்து சண்டையில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனையானார் சாக்ஷி. 

   கஜகஸ்தானில், உலக கோப்பை குத்துச்சண்டை கஜகஸ்தானில்,  2வது சுற்றில் பெண்களுக்கான 54 கி.கி., பிரிவு பைனலில் இந்தியாவின் சாக்க்ஷி, அமெரிக்காவின் யோஸ்லின் பெரெஸ் மோதினர். இரண்டு முறை யூத் உலக சாம்பியன் பட்டம் வென்ற சாக்ஷி, 5-0 என்ற கணக்கில்  தங்கம்வென்றார். இத் தொடரில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனையானார் சாக்ஷி.   

Jul 07, 2025

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் 10 விக்கெட் சாய்த்த ஆகாஷ் தீப்.

 இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் 10 விக்கெட் சாய்த்த ஆகாஷ் தீப் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி,  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 587, இங்கிலாந்து 407 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 427/6  ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை (180 ரன்) சேர்த்து இங்கிலாந்துக்கு 608 ரன் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 271 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. தொடர் 1-1என சமநிலையை எட்டியது. கடந்த 58 ஆண்டுகளில் இங்கு ஏற்கனவே பங்கேற்ற 8 டெஸ்டில் 7ல் இங்கிலாந்திடம் தோற்றிருந்தது. ஒரு போட்டி 'டிரா' ஆனது. இளம் வீரர்களுடன் புதிய கேப்டன் சுப்மன் கில், வரலாற்றுசிறப்புமிக்கவெற்றியைத்தேடித்தந்துள்ளார். பர்மிங்ஹாம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி முதல் வெற்றி.ஆகாஷ் தீப், இரு இன்னிங்சி லும் சேர்த்து 10 விக்கெட் (4+6) சாய்த்தார். இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில், சிறந்த பந்துவீச்சை (10/187) பதிவு செய்தார். இந்திய அணி, அன்னிய மண்ணில் தனது'மெகா'  வெற்றியை (336 ரன்) பதிவு செய்தது. இதற்கு முன் 2016ல் நார்த் சவுண்டில் நடந்த வெஸ்ட் இண்டீ சுக்கு எதிரான டெஸ்டில் 318 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இது, ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 4வது சிறந்த வெற்றியானது. மூன்றாவது டெஸ்ட் வரும் ஜூலை 10ல் லார்ட்சில் துவங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் போட்டியில் கோப்பை வென்ற திருப்பூர் அணி .என்.பி.ஆர்., கல்லுாரிதிண்டுக்கல், நத்தம் மைதானத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., பைனலில் திண்டுக்கல், திருப்பூர் அணிகள் மோதின. திருப்பூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்தது. திண்டுக்கல் அணி 14.4 ஓவரில் 102 ரன் எடுத்து தோல்வியடைந்தது. 

Jul 05, 2025

கிராண்ட் செஸ் மூன்றாவது தொடரில் குகேஷ் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தார்.

 குரோஷியாவில் கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது மூன்றாவது தொடர். உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கிறது.4, 5வது சுற்றில் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக், அமெரிக்காவின் பேபியானோவை வென்றார்.6வது சுற்றில் குகேஷ், கார்ல்சனை எதிர்கொண்டார். குகேஷ், துவக்கத்தில் பின் தங்கினார். 35வது நகர்த்தலில் கார்ல்சன் செய்த தவறை பயன்படுத்திய குகேஷ், ஆதிக்கம் செலுத்தினார்.வேறு வழியில்லாத நிலையில் 49 நகர்த்தலில் கார்ல்சன் தோல்வியை ஒப்புக் கொண்டார். இத்தொடரில் குகேஷ் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தார்.முன்னதாக நடந்த பிரக்ஞானந்தா-கார்ல்சன் மோதல், 74வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முதல் 6 சுற்று முடிவில் குகேஷ் (10 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். போலந்தில் ஜான் டுடா (8), அமெரிக்காவின் வெஸ்லே (7.0), கார்ல்சன் (6.0) அடுத்த 3 இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (5.0) 7வது இடத்துக்கு முன்னேறினார்.செஸ் பெண்கள் உலக கோப்பையில் (ஜூலை 5-29) ஜார்ஜியாவில், இந்தியாவின் ஹம்பி, ஹரிகா, வைஷாலி, திவ்யா, பத்மினி ராத் உள்ளிட்ட 9 பேர் பங்கேற்கின்றனர். 

Jul 05, 2025

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிஇங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி, வலுவான முன்னிலை நோக்கி முன் னேறுகிறது. சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தினார் .இந்தியாவின் முகமது சிராஜ், டெஸ்ட் அரங்கில்  2வது முறையாக ஒரு இன்னிங்சில் 6 விக்கெட் சாய்த்தார். இதற்கு முன், கடந்த ஆண்டு கேப்டவுன் டெஸ்டில் (எதிர்: தென் ஆப்ரிக்கா) 9 ஓவரில், 15 ரன் விட்டுக் கொடுத்து, 6 விக்கெட் கைப்பற்றி, தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் 'தகுதிச்சுற்று 2'ல் டி.என்.பி.எல்., 'டி-தொடரின் 9வது 20' சீசன் திண்டுக்கல், சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் பீல்டிங் தேர்வு செய்தார். சேப்பாக்கம் அணி. 20 ஓவரில் 178/7 ரன் மட்டும் எடுத்தது. திண்டுக்கல் அணி 18.4 ஓவரில் 182/6 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

Jul 05, 2025

டென்னிஸ் ,& பளு தூக்குதல் .

டென்னிஸ் திருச்சியில் தேசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.சென்னையின் தீப்தி வெங்கடேஷ், தனு ஸ்ரீ சதீஸ் ஜோடி, மேற்கு வங்காளத்தின் ரியா ராய், ' எந்திரக்ஷி பட்டாச்சார்யா ஜோடியை எதிர் கொண்டது. இதில் தமிழக ஜோடி, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் கோவர்தன் சுரேஷ், ஹர்ஷல் நிதன் ஜோடி, கர்நாடகாவின் இஷான் பதாகி, அர்ஜுன் சூரி ஜோடியிடம் 6-2, 4-6, 7-10 என்ற செட் கணக்கில்  வீழ்ந்தது.  பளு தூக்குதல் ., ஆசிய யூத், ஜூனியர் பளுதுாக்குதல் கஜகஸ்தானில்,  சாம்பியன் ஷிப் யூத் பெண்களுக்கான 44 கிலோ பிரிவில் , இந்தியாவின் புங்னிதாரா ,'ஸ்னாட்ச்' பிரிவில் 60, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 81 என, மொத்தம் 141 கி.கி., பளுதுாக்கிய புங்னிதாரா, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் அதிக பட்சமாக 81 கி.கி., பளு துாக்கிய அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த புங்னிதாரா 17, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.  

Jul 04, 2025

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதல் இன்னிங்சில் 887 ரன் குவித்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்('ஆண்டர்சன் சச்சின் டிராபி') பங்கேற்கிறது.முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 310/5 ரன் எடுத்திருந்தது. சுப்மன் கில் (114), ஜடேஜா (41) அவுட்டாகாமல் இருந்தனர்.நேற்று,2ம் நாள் ஆட்டம் நடந்தது. வோக்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஜடேஜா. டெஸ்ட் அரங்கில் தனது 23வது அரைசதத்தை பதிவு செய்த ஜடேஜா, ஸ்டோக்ஸ் வீசிய 92வது ஓவரில் வரிசையாக2 பவுண்டரி அடித்தார். பஷிர் வீசிய 107வது ஓவரில் ஜடேஜா, கில் தலாஒரு சிக்சர் விளாச,13 ரன் கிடைத்தது. ஆறாவது விக்கெட்டுக்கு203 ரன் சேர்த்த போது ஜோஷ் டங் வீசிய 'பவுன்சரில்' ஜடேஜா (89) ஆட்டமிழந்தார்.ஏழாவது விக்கெட்டுக்கு144 ரன் சேர்த்த போது ஜோ ரூட்'சுழலில்' வாஷிங்டன் சுந்தர்(42) போல்டானார். அபாரமாக ஆடிய சுப்மன் கில் (269 ரன்,387 பந்து , 3x6, 30x4), ஜோஷ் டங் 'வேகத்தில்வெளியேறினார்.ஆறாவது விக்கெட்டுக்கு சுப்மன், ஜடேஜா ஜோடி 203 ரன் சேர்த்தது. இங்கிலாந்து மண்ணில் பேட்டிங் வரிசையில்6வது அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்கி அதிக ரன் சேர்த்த 3வது இந்திய ஜோடியானது. கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார்., இந்திய அணி முதல் இன்னிங்சில் 887 ரன் குவித்தது.இளம் இந்திய அணி வெற்றி  19 வயதுக் குட்பட்ட இந்திய அணி,இங்கிலாந்து சென்று,5 போட்டி கொண்ட யூத் ஒருநாள் தொடரில் பங்கேற்க,முதல் இரு போட்டி முடிவில் தொடர் 1-1 என இருந்தது.மூன்றாவது போட்டி நார்தாம்ப்டனில் நடந்தது.மழை காரண மாக போட்டி தலா 40 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இங்கிலாந்து அணிக்கு டாகின்ஸ் (62),இசாக் (41) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. மேயஸ் (31), ஆல்பர்ட் (21) உதவி னர். கேப்டன் தாமஸ் ரியு (76) அவுட்டாகாமல் இருந்தார்.இங்கிலாந்து அணி40 ஓவரில்268/6 ரன்எடுத்தது. இந்தியா சார்பில் கனிஷ்க்3 விக்கெட் சாய்த்தார்.இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி,கேப்டன் அபிக்யான் (12) ஜோடி துவக்கம் தந்தது.சிக்சர் மழை பொழிந்த வைபவ், 20 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 31 பந்தில்86 ரன்(9:6,6×4) எடுத்து அவுட்டானார். இந்திய அணி34.3 ஓவரில்274/6 ரன் எடுத்து,4 விக்கெட் டில் வெற்றி பெற்றது. தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.யூத் ஒருநாள் அரங்கில் (19 வயது ) ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என வைபவ் (9) சாதனை படைத்தார். 

Jul 04, 2025

கிராண்ட் செஸ் மூன்றாவது தொடரில் குகேஷ் பிரக்ஞானந்தாவை வென்றார் .

 10வது சீசன் (மொத்தம் 3 தொடர்). கிராண்ட் செஸ் தொடரின் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது.உலக சாம்பியன், இந்தியாவின்குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கிறது.முதல் நாளில் 3 சுற்று நடந்தன. முதல் சுற்றில் குகேஷ், போலந்தின் ஜான்டுடாவிடம் தோல்வியடைந்தார். குகேஷ், அடுத்த சுற்றில் பிரான்சின் அலிரே சாவை வென்றார். 3வது சுற்றில் குகேஷ் - பிரக்ஞானந்தா மோதினார்.குகேஷ், 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.முதல் 3 சுற்று முடிவில் கார்ல்சன் (4.0), ஜான் டுடா (4.0), அமெரிக்காவின் வெஸ்லே (4.0), குகேஷ் (4.0) 'டாப் -4' இடங்களில் உள்ளனர். முதல் இரு சுற்றில் 'டிரா' செய்த பிரக்ஞானந்தா (2.0) கடைசி இடத்தில் (10) உள்ளார்.ஜூனியர் செஸ்: இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம்7 பதக்கம் கைப்பற்றியது. இந்தியா அபாரம்ஜார்ஜியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக் கான உலக கோப்பை ஜூனியர் ,சர்வதேச செஸ் கூட்ட மைப்பு ('பிடே') சார்பில் ('கேடட்') தொடர் நடந்தது.  10 வயதுக்கு உட்பட்டோருக்கான ஓபன் பிரிவில் பைனலில் இந்தியாவின் சர்பர்தோ மானி தங்கப்பதக்கம் வென்றார்.பெண்கள்பிரிவு.(10 வயது) பைனலில் இந்தியாவின் திவி பிஜேஷ், சீனாவின் ஜிஹான் செனை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார். வெண்கலப் பதக்கத்துக் கான போட்டியில் இந்தியாவின் ஷர்வானிகா (தமிழகம்), ரஷ்யாவின் வோல்கோவாவை வென்றார். 

Jul 03, 2025

தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி .JULY 2 ND

தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி .JULY 2 NDடி. என் பி.எல்., 'டி-20' தொடரின் 9வது சீசன் தமிழக கிரிக்கெட் சங் கத்தின் சார்பில் நடக்கிறது. தகுதிச்சுற்று 1ல் வெற்றி பெற்ற திருப்பூர் அணி பைனலுக்கு முன்னேறியது. நேற்று, திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் திண்டுக்கல், திருச்சி அணிகள் மோதின. திருச்சி அணி, 20 ஓவரில் 140/9 ரன் எடுத்தது, திண்டுக்கல் அணி 16.4 ஓவரில் 143/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நாளை நடக்கும் தகுதிச்சுற்று 2ல் சேப்பாக்கம் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் இங்கிலாந்து,இந்திய அணி 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. நேற்று, 2வது டெஸ்ட் பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் துவங்கியது.  இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்கிறது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ், 'பவுலிங்' தேர்வு செய்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 310 ரன் எடுத்திருந்தது. சுப்மன் கில் (114), ஜடேஜா (41) அவுட்டாகாமல் இருந்தனர். 

Jul 03, 2025

விளையாட்டு போட்டிகள்.JULY 2ND

கால்பந்து 2026,மார்ச் 1/26ல் ஆஸ்திரேலியாவில்(12 அணிகள்) நடக்கவுள்ளபெண்களுக்கான ஆசிய கோப்பை கால் பந்து தொடரின். நடப்பு சாம்பியன் சீனா, தென்கொரியா,ஜப்பான், ஆஸ்திரேலியா என4 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடக்கிறது. 34 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்-லெஸ்தே அணிகளுடன் இந்திய அணி'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் மங்கோலியா(13,0), திமோர்லெஸ்தே(4,0) அணிகளை வென்ற இந்தியா, நேற்று மூன்றாவது போட்டியில் இராக்கை எதிர்கொண்டது. இந்திய அணி 5,0என்ற கோல் கணக்கில் இந்தியாவெற்றி பெற்றது. 3 போட்டியில் 9புள்ளியுடன் முதலிடத்தில் பட்டியலில் உள்ளது. ஜூலை 5ல் நடக்கவுள்ள கடைசி போட்டியில் தாய்லாந்தை(6) வென்றால்,22 ஆண்டுக்குப்பின் ஆசியகோப்பை தொடருக்கு தகுதி பெறலாம்.   வில்வித்தை,  ஆசிய 'பேர் பவ்' வில்வித்தை சாம்பியன் ஷிப்தாய்லாந்தின் பாங்காக்கில் இன்று துவங்கி. ஜூலை6 வரைநடக்கவுள்ளது. இத்தொடரில் ஜப்பான், இந்தியா, மலேசியா, சீனா உட்பட 13 நாடுகளை சேர்ந்த 407 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில்,சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு, சேலம், விநாயகா மிஷன் கல்லூரி மாணவர் சஞ்சய் உட்பட 7 பேர் கலந்து கொள்கின்றனர். துப்பாக்கி சுடுதல், டேராடூனில் நடந்ததுப்பாக்கி சுடுதல் தேசிய தகுதி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அஞ்சும், சவுரப் சவுத்தரி, மெகுலி கோஷ் ஆகியோர் மீண்டும்  தேர்வாகி இந்தியாவுக்காக விளையாட உள்ள னர். பாட்மின்டன் இந்தியாவின் ஸ்ரீகாந்த்  கனடா ஓபன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில்18-21, 21-19, 21-14 என்ற கணக்கில் சகவீரர் பிரியான்ஷு ரஜாவத்தை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். 

Jul 02, 2025

டேபிள் டென்னிஸ் 1989முதல் நடத்தப்படும் ஆசிய"யூத்"பெண்கள் பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என சாதித்தார் திவ்யான்ஷி .

ஆசிய 'யூத்'டேபிள் டென்னிஸ்சாம்பியன்ஷிப்29வதுசீசன்உஸ்பெகிஸ்தானில். 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் 14 வயது, இந்தியாவின் திவ்யான்ஷி, சீனாவின் ஜிலிங்லியுவை சந்தித்தார். முதல் 6செட்டுகளை இருவரும் மாறிமாறி கைப்பற்ற, 3–3 என ஆனது. 7வது, கடைசி செட்டை திவ்யான்ஷி 11-9 என வென்றார். திவ்யான்ஷி 4-3 என (10-12, 11-9, 11-6, 10-12, 11-9, 5-11, 11-9) பெற்றார்.இவர் 4,2 என்ற கணக்கில் 8,11/(13,11,/12,10,/11,8/,9,11, /11,8) வெற்றி பெற்றார். காலிறுதி, அரையிறுதி, பைனல் எனதொடர்ந்து மூன்று போட்டியில் சீன வீராங்கனைகளை சாய்த்த திவ்யான்ஷி, சாம்பியன் ஆனார். பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சின்ட்ரல்லா, ஹாசினி ஜோடி13 எனஜப்பானின் சாச்சி, மாவோ ஜோடியிடம் தோற்றது.ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் அன்குர், அபிநந்த் ஜோடி3-2 எனமலேசிய ஜோடியிடம் (ருய்ஜெ, ஏ சிம்) தோற்றது.

1 2 ... 93 94 95 96 97 98 99 ... 136 137

AD's



More News