25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உலக கோப்பை செஸ் பெண்கள் தொடர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக கோப்பை செஸ் பெண்கள் தொடர்.

 பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில் ,46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற் கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம் பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.

'நாக் அவுட்' முறையி லான இத்தொடரின் நான்காவது சுற்று நடந்தது. இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா என நான்கு வீராங்கனைகள் பங்கேற்றனர். 19 வயது திவ்யா, உலகின் 'நம்பர்-2' வீராங்கனை, சீனாவின் ஜூ ஜினரை சந்தித்தார். முதல் இரு சுற்று முடிவில் 1.0-1.0 என சமன் ஆனது. நேற்று 'டை பிரேக்கர்' நடந்தது.

இதன் முதல் போட்டியில் வென்ற திவ்யா, அடுத்த போட்டியை 'டிரா' செய்தார். முடி வில் திவ்யா 2.5-1.5 என வெற்றி பெற்று, காலிறு திக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஹம்பி, சுவிட்சர்லாந்தின், அலெக்சாண்ட்ரா மோதினர். இதில் ஹம்பி 2.5-1.5 என வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.

இந்தியாவின் வைஷாலி, கஜகஸ்தானின் கமலிடெனோவாவை 4.5-3.5 என வெற்றி பெற்றார். 

இந்தியாவின் ஹரிகா, உக்ரைனின் கேத்தரினாவை போட்டி முடிவில், ஹரிகா  3.5-2.5 என வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News