தேர்தல் மை அழியாமல் இருக்க காரணங்கள்.
தேர்தலில் வாக்களிப்பவர் வாக்களித்ததை உறுதிசெய்வதற்காக இடது கை ஆள்காட்டி விரலில் மை ஒன்று வைப்பார்கள். அது சில வாரங்கள் அழியாமல் இருக்கும். அது என் உடனடியாக அழிவதில்லை? காரணங்கள் என்ன ?
இந்தியாவில்தேர்தல்மை பயன்படுத்தும்முறை 1962ம்ஆண்டுமக்களவைத்தேர்தலின்போதுமுதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது விரலில் மை அழியாமல் இருக்க முக்கிய காரணம்.மையில் உள்ள சில்வர் நைட்ரேட் (AgNO 3) என்ற வேதிப்பொருள் தான், இந்த மையை விரலில்வைக்கும்போது, அது தோலில்உள்ளஉப்புச்சத்துமற்றும்ஈரப்பதத்துடன்வினைபுரிந்து,சூரியஒளி படும்போது, சில்வர் நைட்ரேட் சில்வர் குளோரைடாக மாறி தோலுடன் மிகக் கடுமையாக ஒட்டிக்கொள்கிறது.
இந்த சில்வர் குளோரைடு நீரில் கரையாது. சோப்பு, ஆல்கஹால் அல்லது நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு கழுவினாலும் இந்த மை எளிதில் அழியாது. இந்த மை தோலின் மேற்பகுதியில் மட்டும் இல்லாமல், நகம் மற்றும் தோலுக்கு இடையில் உள்ள பகுதியில் ஊடுருவிச் செல்கிறது. நகம் வளர்ந்து பழைய தோல் செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும் வரை சுமார் 2 முதல் 4 வாரங்கள் இந்த மை நீடிக்கும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் இந்த அழியாத மை, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள 'மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்' என்ற அரசு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது..
0
Leave a Reply