இராஜபாளையம் இராமலிங்க விலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளியில் 76வது இந்திய குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.பள்ளிச் செயலர் திரு R. பாலசுப்பிரமணியன்அவர்கள் தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.தலைமை ஆசிரியை திருமதி மகேஸ்வரி வரவேற்பு ரை ஆற்றினார்.மாணவர்கள் கொடிப் பாடல் பாடி தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி மேற்கொண்டனர்.பின்னர்.விளையாட்டுப் போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.உதவி ஆசிரியை திருமதி வாசுகி நன்றி கூறினார். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
ஸ்ரீராமலிங்கவிலாஸ் ஜெயராம் துவக்கப் பள்ளியில் 78-வது இந்திய சுதந்திர தினவிழா சிறப்பாகக் திரு. R.பாலசுப்பிரமணியன் கொண்டாடப்பட்டது. பள்ளிச் செயலர் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியை B.மகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி ஆசிரியை R.வாசுகி நன்றியுரை கூறினார். மேலும் உயர்திரு. பள்ளிச் செயலர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 78-வது இந்திய சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.