வேர்க்கடலை பூண்டுப்பொடி.
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை -1/2 கப் ,
வற்றல் மிளகாய் - 4,
கறிவேப்பிலை- 1டீஸ்பூன்,
பூண்டு - 4 பல்,
சீரகம் -1டீஸ்பூன்,
கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
தேவையான பொருட்கள் எல்லாம் தயாராக எடுத்து வைக்கவும்.கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வேர்க்கடலையை சேர்த்து வறுக்கவும்.பின்னர் வற்றல்,சீரகம்,பூண்டு, கல் உப்பு சேர்த்து வறுக்கவும்.சூடுஆறியவுடன் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான வேர்க்கடலை பூண்டுப்பொடி தயார்.
இந்த சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை பூண்டுப்பொடி சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
0
Leave a Reply