உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரின்அரை இறுதிக்கு இந்திய அணி முன்னேறியது .
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடந்து வருகிறது.
நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில்தென் ஆப்பிரிக்காவை வென்று, தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது.
முன்னதாக எகிப்து அணி கால் இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.மற்றொரு கால்இறுதியில் ஹாங்காங் 3-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் அரை இறுதியில் இந்தியஅணி நடப்பு சாம்பியன் எகிப்தை எதிர்கொள்கிறது.
0
Leave a Reply