தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் (12.12.2025) நடைபெற்ற அரசு விழாவில், வெல்லும் தமிழ்ப் பெண்கள் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் (12.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுமான் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், 38,263 மகளிருக்கு ரூ.3 கோடியே 82 இலட்சம் மதிப்பில் கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறும் வகையில் மகளிர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிக்கு மாதம் ரூ 1000/ (ஆண்டிற்கு ரூபாய் பன்னிரெண்டாயிரம் மட்டும்) கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் தொகையாக வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 1,11,637 பயனாளிகளுக்கு ரூ.1000/- வீதம் மாதந்தோறும் ரூ.1.12 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விதிகளை தளர்வு செய்து புதிய பயனாளிகள் தேர்வு செய்யும் பொருட்டு, மாவட்டத்தில் ஜீலை -2025 முதல் நவம்பர் -2025 முடிய நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் 67,551 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்து, இதில் 38,263 தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, அருப்புக்கோட்டை வட்டத்தில் 5,199 பயனாளிகள், காரியாபட்டி வட்டத்தில் 2,202 பயனாளிகள், இராஜபாளையம் வட்டத்தில் 7,305 சாத்தூர் வட்டத்தில் 2,190 பயனாளிகள், சிவகாசி வட்டத்தில் 7,800 பயனாளிகள், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 2,944 பயனாளிகள், திருச்சுழி வட்டத்தில் 1,762 பயனாளிகள், வெம்பக்கோட்டை வட்டத்தில் 2,393 பயனாளிகள், விருதுநகர் வட்டத்தில் 3,869 பயனாளிகள், வத்திராயிருப்பு வட்டத்தில் 2,599 பயனாளிகள் என மொத்தம் 38,263 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1000- வீதம் மாதந்தோறும் ரூ.3.83 கோடி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் நமது விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டம் 1,11,637 மற்றும் இரண்டாம் கட்டம் 38,263 ஆக மொத்தம் 1,49,900 பயனாளிகள் மாதந்தோறும் ரூ.14.99 கோடி பெற்று பயனடைய உள்ளனர்.அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில் 1200 பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் (ATM Cards) வழங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் திரு.காளிமுத்து, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் மைக்கேல் ஆண்டனி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, சாத்தூர் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிச்செல்வன், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.ஆர்.மாதவன், திருவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவர்திரு. ரவிக்கண்ணன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply