விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்வை எனேபிள் இந்தியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சுப்புராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்.துவக்க நிகழ்வில் வத்திராயிருப்பு புதுப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் திரு. பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வசதி, மானியம், தொழில் தொடங்கும் வாய்ப்பு போன்றவற்றை குறித்து விரிவாக விளக்கினார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் - ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் - ஆர்சிட்" அமைப்பின் மேலாளர் திருமதி. பாத்திமா மற்றும் திரு. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பத்து நாட்கள் நடைபெறும் பயிற்சியின் நோக்கம், தொடரும் பயிற்சி அம்சங்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றி எடுத்துரைத்தனர். பயிற்சியாளர் திருமதி சுவேதா அவர்கள் பயிற்சியில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு அம்சங்களை குறித்து விளக்கினார்.இந்தப் பயிற்சியில் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களையும், கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளையும் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த சைமா அறக்கட்டளை இயக்குநர் திரு. இராஜகோபால் அவர்கள் வரவேற்று உரையாற்றினார்.பின்னர் அவர் பேசும்போது, “இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு அரசு தரப்பில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அவர்கள் தொழில் தொடங்க சிறு உதவி தொகை அல்லது பெரிய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்,” என்றார். மேலும், “மாவட்டம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் இதுபோன்ற பயிற்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்காக தொடர்ந்து நடத்தப்படும்,” என்றும் தெரிவித்தார்.
0
Leave a Reply