முட்டை மிளகு வறுவல்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது),
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது,)
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மிளகு - அரை டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப),
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு,
செய்முறை:
வேகவைத்த முட்டைகளை உரித்து, அவற்றின் மேல் லேசாக கீறிக்கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி குழைந்து வரும் வரை வதக்கவும்.
மஞ்சள் தூள், சீரகத் தூள், மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.கடைசியாக முட்டைகளைச் சேர்த்து, மசாலாவுடன் நன்றாகக் கலந்து, மசாலா முட்டையின் மேல் ஒட்டிக்கொள்ளும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.
நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி, சூடாக ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் பரிமாறவும்.
0
Leave a Reply