25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


அழகுக் குறிப்பு

Apr 14, 2024

பாதம் - வெடிப்பு (  சேற்றுப்புண் )காணாமல் போக

பாதம்- வெடிப்பு காணாமல் போக  கால் டம்ளர் நீரை கொதிக்க வைத்து மஞ்சள் தூளை குழைத்து வெதுவெதுப்பாக இருக்கும் போதே சேற்றுப்புண் மீது தடவி கொள்ள வேண்டும். இரவு முழுவதும் காய்ந்தால் மறுநாளே இந்த புண் ஓரளவு மட்டுப்படும்.விளக்கெண்ணெயை நன்றாக சூடு செய்து, உடனே அதில் வெள்ளை மெழுகு வர்த்தியை உதிர்த்து, பொடி செய்து போட்டால்,பாதங்களில் வறட்சி. மறை ந்து விடும்..கலவையை வெதுவெதுப்பாக பாதத்தில் போட்டால் பாதம் மிருதுவாகும்.. வெடிப்பு காணாமல் போய்விடும்கால் விரல் இடுக்குகளில் வரக்கூடிய புண்கள் தான் சேற்றுப்புண் என்று அழைக்கப்படுகிறது. மண்களில் மழைக்காலங்களில் சேறு சகதிகள் இருக்கும் இடங்களில் பாக்டீரியாவும் நுண்கிருமிகளும் இருக்க கூடும். இந்த இடங்களில் நீண்ட நேரம் நிற்கும் போது, அல்லது இவை கலந்திருக்கும் நீரில் நீண்ட நேரம் நின்று துணிகளை துவைக்கும் போது, பாதங்களுக்கு நடுவே இரண்டு விரல்களுக்கு நடுவே அரிப்பையும் புண்ணையும் உண்டாக்கும்..

Apr 12, 2024

முகத்தில் சுருக்கம் விழாமல் இருக்க ...

எலுமிச்சை மற்றும் சர்க்கரை இவை இரண்டும் சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி10,-15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். கற்றாழை ஜெல் வயதான தோற்றத்தை குறைக்க மிகவும் நன்மை பயக்கும். கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சையுடன் ஒரு நல்ல ஃபேஸ் பேக்கை தயார் செய்து முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.முகத்தில் எலுமிச்சை சாறு தடவுவது பல நன்மைகளை தரும். பளபளப்பான சருமத்தை பெற எலுமிச்சை மிகவும் உதவும். சுருக்கங்களைக் குறைக்கவும் உதவும்.சருமம் கருத்து போவதைத் தடுக்கும்.எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக முன் முகத்தில் தடவவும்-5,-7 நிமிடங்கள் முகத்தை நன்றாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். கலந்து இரவு படுக்க செல்வதற்கு எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டரில் வயதான* தோற்றத்தைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. தேனில் வயதான தோற்றத்தை குறைக்கும் பண்புகள் உள்ளன. தேனை எலுமிச்சை சாறுடன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவவும்..15,-20 நிமிடங்கள் முகத்தை அப்படியே ஊற விடவும். இதன் மூலம் முகத்தில் சுருக்கம் விழாமல் இருக்கும். .

Apr 11, 2024

வெள்ளை முடி கருப்பாக...

.வெள்ளை முடிகருப்பாக வீட்டில் செய்ய வேண்டிய எளிமையான வைத்தியங்கள்.மோசமான உணவு, அதிகப்படியான காபி, டீ, மரபணு போன்ற காரணங்களால் நரை முடி ஏற்படுகிறது.தலை முடி நரைப்பதை தடுக்க,பாதாமில் கேடலேஸ் என்ற என்சைம் உள்ளது, இது தலை முடி நரைப்பதை தடுக்கிறது. இது தவிர, பாதாமில் இருக்கும் காப்பர், மெலனினை உற்பத்தி செய்கிறது, இதனால் வெள்ளை முடி வராது. பாதாம் தலை முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். பாதாம் சாறு தயாரிக்கும் முறைபாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.மறுநாள் காலை அதை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். அரைத்த பேஸ்ட்டை வடிகட்டி சாறை மட்டும்· தனியாக எடுத்துக்கொள்ளவும்.உங்கள் தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசவும்.அதன் பிறகு வடிக்கட்டிய பாதாம் சாறை பயன்படுத்தி உங்கள் தலைமுடியை அலசவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடியில் தடவி மாற்றத்தை பார்க்கவும். BLACK COFFEE தயாரிக்கும் முறைகருப்பு காபியைவெள்ளை முடி பிரச்சனைக்கும் பயன்படுத்தலாம். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து.அதில்4-,5 டீஸ்பூன் காபி தூளை சேர்க்கவும். பின்னர் ஆற வைக்கவும்.இந்த கருப்பு காபியை உங்கள் தலைமுடியில் தடவவும்.சுமார் அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலைமுடியை அலசவும். உங்கள் தலைமுடி கருப்பாக மாறும். .

Apr 10, 2024

கருப்பான உதட்டை சிவப்பாக மாற்றும் எளிய முறை

இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடுகளை தான் பெண்கள் அதிகமாக விரும்புவார்கள். இருப்பினும், அழகு என்பது காலப்போக்கில் மாறுகின்றன.அதுப்போலவே உதட்டின் வண்ணமும் மாறிவிடும். பலருக்கு கருமையான உதடும் இருக்கிறது. இது அவர்களின் மொத்த அழகையும் தடுக்கிறது .என்று கூறலாம். இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடுகளை தான் பெண்கள் அதிகமாக விரும்புவார்கள். இருப்பினும், அழகு என்பது காலப்போக்கில் மாறுகின்றன.உதட்டின் வண்ணமும் மாறிவிடும் எனவே வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து கருமையான உதட்டை மாற்றலாம்..  தோல் நிறத்தைப் போலவே, உதடுகளின் நிறமும் நபருக்கு நபர் மாறுபடும். கருமையான சருமம் உள்ளவர்களுக்கு உதடுகள் கருமையாக இருக்கும்.இயற்கையாகவே கருமையான உதடுகளைக் கொண்டவர்கள் வீட்டு வைத்தியம் மூலம் தற்காலிகமாக அவர்களை இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற முடியும்..மஞ்சள் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்த பேஸ்டை வடிக்கட்டி சாறு மற்றும் தனித்து எடுத்துக் கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.தனியாக பீட்ரூட் சாறு எடுத்து வைத்ததை அடுப்பில் வைத்து சூடாக்கிக் கொள்ளவும்.  கெட்டியாக வரும் போது சுத்தமான நெய் சேர்த்து மீண்டும் கிளற வேண்டும்.அடுப்பில் இருந்து இறக்கிய ஆறியவுடன் ஒரு சிறிய டப்பாவில் அடைத்து 2 மணி நேரம் குளிரூட்டியில் வைக்கவும். பயன்படுத்தும் முறைமுதலில் மஞ்சள் மற்றும் சர்க்கரை சேர்த்து தயார் செய்து வைத்திருந்த கலவையை வைத்து உதட்டில் தேய்த்து சுத்தம் செய்துக்கொள்ளவும்.அடுத்ததாக குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த கலவையை உதட்டில் பூசலாம்.  உதட்டின் வண்ணமும் இளஞ்சிவப்பு  நிறமாக மாறும்.

Apr 09, 2024

கிருமி நாசினி மஞ்சள் தூள்

மஞ்சளில் ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் மிகுதியாக உள்ளது.  குர்குமினில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும்  ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது. இவை உடலில் கிருமி நாசினியாக செயல்படுகிறதுஸ்டிரெச் மார்க்குகள் இருப்பவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், கடலைமாவு மற்றும் தயிர் கலந்து அந்த பகுதியில் பூச வேண்டும். இவ்வாறு தினமும் செய்துவந்தால் நாளடைவில் ஸ்டிரெச் மார்க்குகள் சருமத்தின் நிறத்திலேயே மாற ஆரம்பிக்கும்.சிறிதளவு மஞ்சள்தூளுடன் அரிசிமாவு. தக்காளிச்சாறு,காய்ச்சாத பால் கலந்து முகத்தில் பூச வேண்டும். இது நன்றாக உலர்ந்தவுடன் முகத்தை சுத்தப் படுத்த வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு சிரமப்படுபவர்கள் ,சிறிதளவு மஞ்சள் தூளுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பாதங்களில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் பாதங்களைக் கழுவ வேண்டும். உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் ,வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால்  குணமாகி விடும்.  மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.

Apr 08, 2024

என்றும் இளமையாக இருக்க …

. சில பெண்களின் முகத்தில் வயதுக்கு முன்னரே முதுமை தோன்றத்தை அடைகிறார்கள். அதே நேரத்தில் சில பெண்கள் தங்கள் வயதை விட10 வயது இளமையாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் சரியான சரும பராமரிப்பு, ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம் மற்றும் சுகாதார நிலைமைகள் ஆகியவையும் இதில் அடங்கும். சில ஆரோக்கியமான பழக்கங்களை கடைப்பிடித்தால் வயதை விட இளமையாக தோற்றமளிக்கலாம்ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க நம் உடலை உள்ளேயும் வெளியேயும் சுத்தம் செய்வது அவசியம். பல வகையான நச்சுகள் மற்றும் பாக்டீரியாக்கள் நம் நாக்கில் குவிந்து கிடக்கின்றன. தினமும் காலையில் செப்பு ஸ்கிராப்பரால் நாக்கை சுத்தம் செய்து வந்தால் நச்சுகள், பாக்டீரியா மற்றும் வாய் துர்நாற்றத்தை நீக்கும்.காலையில் எழுந்தவுடன் சூரிய ஒளியை சில நிமிடங்கள் எடுக்க வேண்டும். சூரிய ஒளியில் சிறிது நேரம் நடக்கலாம் அல்லது உட்காரலாம். இது கார்டிசோல் ஹார்மோனின் அளவை சமப்படுத்துகிறது, உடலுக்கு வைட்டமின்D வழங்குகிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கும் முக்கியமானது.வயதை விட இளமையாக தோற்றமளிக்க ஆரோக்கியமான. புரதம் நிறைந்த காலை உணவுகாலையில் உணவில் சில ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நட்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உடலுக்கு புரதத்தை வழங்குகிறது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது.ஆரோக்கியமாக இருக்க யோகா மற்றும் உடற்பயிற்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் உண்மையான வயதை விட இளமையாக இருக்க விரும்பினால், அனுலோம்-விலோம் தினமும் செய்யுங்கள். இது மன அழுத்தத்தைக் குறைத்து உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிக்கிறது.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நற்பண்புகளின் பொக்கிஷம். நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இதில் காணப்படுகின்றன. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு செப்பு பாத்திரத்தில் சுமார் 300 மில்லி தண்ணீரை எடுத்துக் கொள்வதால் இளமையை தக்க வைத்துக்கொள்ளலாம்

Mar 11, 2024

வயோதிக தோற்றத்திலிருந்து தப்பிக்க!....

பெண்கள் தினமும் கிழங்கு மஞ்சளை தேய்த்து குளித்தால் தோல் சுருக்கத்திலிருந்தும் முக அலர்ஜியில் இருந்தும் அவர்கள் எளிதில் தப்பிக்கலாம்.கஸ்தூரி மஞ்சள் மற்றும் பூலாங்கிழங்கு பெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும். இவற்றை பொடியாக தயாரித்து முகம் மற்றும் கை கால்களில் தடவி குளிர்த்து வர வேண்டும்.தினமும் ஒரு ஜூஸ் என்ற அடிப்படையில் நெல்லி எலுமிச்சை மாதுளை போன்ற பழச்சாறுகளை அருந்தி வர வயோதிக தோற்றத்திலிருந்து தப்பிக்கலாம்.

Mar 08, 2024

பற்சொத்தையை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் 

வாயில் உள்ள சில பாக்டீரியாக்கள் மாவுச்சத்து மற்றும் சர்க்கரையிலிருந்து அமிலத்தை உருவாக்குகிறது. இவை பற்களின் மேல் அடுக்கை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. இதனால் பற்களில் துளைகள் உருவாகும். இது குழி அல்லது புழு தொற்று எனப்படுகிறது.இனிப்பு பொருள்கள் அதிக இனிப்புகள், இனிப்பு குளிர்பானங்கள் மற்றும் ஒட்டும் உணவுகள் போன்றவை பாக்டீரியாவை ஊக்குவிக்கிறது. இவை துவாரங்களை வேகமாக வளரச் செய்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.ஃப்ளூரைடு பற்பசையை ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இரு முறையும் குறைந்தது 2நிமிடங்களுக்கு துலக்க வேண்டும்பற்களுக்கு இடையில் மறைந்துள்ள உணவுத்துகள்கள் அல்லது பாக்டீரியாக்களை அகற்ற  (FLOSS ) ஃப்ளோசிங் செய்யலாம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம் வாயை சுத்தம் செய்யலாம். இதனுடன், இனிப்பு உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லதுபச்சைக் காய்கறிகள் சாப்பிடுவது பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதன் மூலம் பற்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்களைப் பெறலாம் ஒவ்வொரு6 மாதங்களுக்கும் பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்யவும். இதன் மூலம் துளைகளின் ஆரம்ப நிலையிலையை அடையாளம் கண்டு நிரப்பி, பெரிய சேதத்தைத் தடுக்கலாம் 

Mar 05, 2024

மூக்கில் உள்ள வெண்புள்ளி, கரும்புள்ளிகள் மறைய..

ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து20 நிமிடங்கள் கழித்து துடைத்தெடுக்கவும்.எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து10 நிமிடங்கள்கழித்து துடைக்கவும்.டீ ட்ரீ ஆயிலை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து துடைத்து எடுக்கவும்.பருக்கள் வந்துவிட்டால் க்ரீம், ஜெல் என எதுவும் தேடத் தேவையில்லை. ஐஸ் கட்டிகளை எடுத்து பருக்கள் உள்ள இடத்தில் வைத்து நன்கு மென்மையாக மசாஜ் செய்து வந்தாலே போதும் பருக்கள் வேகமாக மறைய ஆரம்பிக்கும்.முகப் பருக்களால் ஏற்படுகின்ற வீக்கம், சிவந்து போதல், கட்டிகள் உண்டாதல் போன்றவற்றையும் சரிசெய்வதில் ஐஸ் கட்டிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.

Mar 04, 2024

கண்களில்கருவளையம் வராமல் தடுக்க…

கண் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே .கண்களை சுற்றிகருவளையம்  இருக்காதுகருவளையம் ஆனது மனக்கவலை, தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இதுபோன்ற காரணங்களினால் தான் வருகிறது. இத்தகைய காரணங்கள் அனைத்தும் ஒவ்வொருவரின் உடல்நிலையினை பொறுத்ததுகண்களில் நீர்சத்து அதிகம் இல்லை என்றால் கருவளையம் வரும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு நிகழாமல் கருவளையம் வருவதை தடுக்க ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, பப்பாளி முட்டைகோஸ் மற்றும் ஆரஞ்சு இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டாலே போதும் கருவளையம் என்பதே எட்டி பார்க்காது.ஒருநாளைக்கு நாம் அனைவரும் தூங்க வேண்டிய சராசரியான தூக்கத்தினை தூங்கவில்லை என்றால் கண்களில் கருவளையம் வரும். ஆகையால் ஒரு நாளைக்கு கண்டிப்பாக 8 மணிநேரம் தூங்க வேண்டும்நீங்கள் கண்களுக்கு கிரீம் பயன்படுத்தும் போதும் அல்லது கண்களில் இருக்கும் கிரீமினை அகற்றும் போதும் கண்களுக்கு கீழே இருக்கும் பகுதியினை பொறுமையாக கையாள வேண்டும் கண்களுக்கும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மசாஜ் செய்வது என்பது நாம் செய்யும் வழக்கமான ஒன்று. கண்களுக்கு கீழே மசாஜ் செய்வது என்பது நம்முடைய கண்களில் கருவளையம் வருவதை தடுக்க செய்கிறது. எப்படி என்றால் கண்களில் நீர்சத்து அதிகமாக ஆகிவிட்டது என்றால் கண்களில் வீக்கம் மற்றும் கருவளையம் போன்றவை ஏற்படும். ஆனால் நாம் மசாஜ் செய்வதன் மூலம் அதிகப்படியான நீர்சத்து ஏற்படுவதை தடுக்கலாம்.முகத்தில் இருக்கும் கண்களுக்கு கீழே வறட்சி ஏற்பட்டால் அதனை சரிசெய்ய Moisturizer பயன்படுத்துவோம். ஆனால் இதற்கு பதிலாக,அவர் அவருடைய கண்களுக்கு கீழே உள்ள தோலிற்கு ஏற்றவாறு, கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் கண்களில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, கருவளையம் வருவதையும் தடுக்கிறது

1 2 ... 14 15 16 17 18 19 20 ... 25 26

AD's



More News