25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >> ராஜபாளையம் ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி  >> இராஜபாளையம் கல்வி பள்ளிகளுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் >> ரெயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் ராஜபாளையத்தில் தொடங்கி உள்ளனர். >> சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் >> ராஜபாளையம்தொழில் வர்த்தக சங்கத்தின் 86வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் >>


முக்கிய அறிவிப்பு

Sep 16, 2024

டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் மிலாடு நபி தினமான 17.09.2024 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  F.L-1, F.L-2, F.L-3 மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules,  1981-ன்படி,    மிலாடி நபி தினமான  17.09.2024  (செவ்வாய்)   அன்று ஒரு நாள் மட்டும்  தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும்   F.L-1,  F.L-2,F.L-3  மற்றும் FL-11  மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர்.வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 12, 2024

சிறப்பு கல்வி கடன் முகாம்

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ/மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் 13.09.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவிருந்த சிறப்பு கல்வி கடன் முகாம், நிர்வாக காரணங்களால் 19.09.2024(வியாழக்கிழமை) அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in  என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கல்வி கடன் விண்ணப்ப நகல், மாணவ/மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், பத்து பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டபடிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல்பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட கல்லூரி சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.இம்முகாமில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து 15 தினங்களுக்குள் தகுதியான அனைவருக்கும் கடன் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 11, 2024

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

2025 -ஆம் ஆண்டு  ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in  என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) தேர்வு 15.10.2024 அன்றும் மற்றும் செய்முறை (Practical) தேர்வு 16.10.2024 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in  என்ற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத 04.09.2024 முதல் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க கடைசி தேதி 18.09.2024. அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 11, 2024

போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்த ஆய்வு

 தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்த 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள்  விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடந்த  01-01-2024 முதல்  31-08-2024 முடிய உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும்  குழுவாக இணைந்து 571 முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட  251 கடைகள்  மற்றும்  28 வாகனங்களில்  1183 கிலோ 920 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 251 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும்,  251 கடைகள் மற்றும் 28 வாகனங்களுக்கும்;;  ரூ.65,10,000/- ( ரூபாய் அறுபத்து ஐந்து இலட்சத்து  பத்தாயிரம் )  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 01-09-2024 முதல் 07-09-2024 முடிய ஒரு வாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும்  இணைந்து  மேற்கொள்ளப்பட்ட 15 குழு ஆய்வுகளில் 9 கடைகள் மற்றும் 1 வாகனங்களில் 23 கிலோ 854 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 9 கடைகள் சீல் வைக்கப்பட்டன. 9 கடைகள் மற்றும்  1 வாகனங்களுக்கு ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால்  ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2வது முறையாக  தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை  கடை மூடி சீல் வைக்கப்படும.; 3வது முறையும் தவறு செய்தால்  ரூ.1லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு  வைப்பது  கண்டறியப்பட்டால் கடும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 07, 2024

ஸ்ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் 35 வது ஆண்டு குருபூஜை விழா

ஆதன மீதில் அரசு சிவலிங்கம் போதும் இரண்டினில் ஒன்றைத்தா பித்து மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வங் காதலிற்சோடசங்காணுப சாரமே-திருமூலர்நிகழும் மங்களகரமான குரோதி நாம ஸம்வத்ஸர ஆவணி மாதம் 24ம் தேதி (09.09.2024) திங்கள்கிழமை சஷ்டி திதி நன்னாளில் காலை 9.00 மணிக்கு மேல் ஸ்ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் 35 வது குருபூஜை விழா இராஜபாளையம் சிரஞ்சீவி மலைச்சாரலில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் நடைபெற உள்ளது.சொல்லோவியர், திருப்புகழ் உரைமணி, செந்தமிழ்ப் பேரொளி பேராசிரியர் திரு.சொ.சொ.மீ. சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். ஆன்மீக அன்பர்களும் சீடர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ சுவாமிகளின் குருவருள் பெற்றுய்ய வேண்டுகிறோம்.இப்படிக்குஸ்ரீ P.R.வெங்கட்ராம ராஜா தலைவர், ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் அறக்கட்டளை, இராஜபாளையம்.

Aug 26, 2024

ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்பாதையின் பணிக்காக ரயில் நேரம் மாற்றம்

ராஜபாளையத்தில் நடைபெறும் சுரங்கப் பாதை பணிகளுக்காகடி.பி மில்ஸ் ரோடு, பி.எஸ்.கே ரோடு இடையே சிமென்ட் பிளாக்குகள் தண்டவாளம் அடியில் புதைக்கப்பட உள்ளன. இதற்காக ரயில்- தண்டவாளங்களும் மின் கம்பிகளும் தற்காலிகமாகதுண்டிக்கப்பட உள்ளதால்  ரயில் நேர மாற்றம் தேதி  வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் (06664) ஆக. 26, 27 செப்.8, 9ல் 50 நிமிட கால தாமதமாக செங்கோட்டையில் இருந்து மதியம் 12:10க்கு பதில்  1:00 மணிக்கு புறப்படும் . ராஜபாளையத்திலிருந்து  மதியம் 2:10 மணி புறப்பட்டு மாலை 4:30 க்கு மதுரை சென்று   சேரும். இதன் படி பயண  திட்டத்தை அமைத்து  கொள்ள வேண்டும் மதுரை கோட்ட ரயில்வே  துறை அறிவித்துள்ளது.

Aug 14, 2024

சுதந்திர தினமான 15.08.2024 அன்று ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  (F.L-1), FL-2/FL-3    மற்றும் FL-11  ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules 1981-ன்படி,   சுதந்திர தினமான 15.08.2024 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக  மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும்   FL-1/FL-2/FL-3 மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 14, 2024

திரைப்பட தேசிய விருது பெற்ற நடனக் கலைஞரும் மற்றும் நடிகையுமான திருமதி பைரராசு சந்தியா ராஜுவை ஐனாதிபதி திரோபதி முர்மு அவர்கள், ராஷ்டரபதி பவனுக்கு, சுதந்திர தினத்தன்று இரவு விருந்திற்கு அழைக்கப்பட்டு கௌரவப் படுத்தி உள்ளார்.

 திரைப்பட  தேசிய விருது பெற்ற நடனக் கலைஞரும் மற்றும் நடிகையுமான திருமதி  பைரராசு  சந்தியா ராஜுவை ஐனாதிபதி திரோபதி முர்மு அவர்கள் ராஷ்டரபதி பவனுக்கு, சுதந்திர தினத்தன்று இரவு விருந்திற்கு அழைக்கப்பட்டு கௌரவப் படுத்தி உள்ளார். இந்த கௌரவத்தை பெறும்சந்தியா ராஜு தனது ஆரம்பக் கல்வியை கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் சென்னை தி ஸ்கூல் கே.எப்.ஐ பள்ளயிலும், சென்னை பால வித்யா மந்திரில் உயர்நிலைக் கல்வியையும் முடித்தார். உளவியல் இளங்கலைப் பட்டம் உசுமானியா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். தனது பத்து வயதில் வேம்பதி சின்ன சத்யம் அவர்களிடம் குச்சுப்புடி நடனப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் கிசோர் மொசலிகண்டி அவர்களிடமும் பயிற்சி பெற்றார்.சந்தியா ராஜு தனது இளமை பருவத்திலிருந்தே குச்சிப்புடி நடனம் படித்து வருகிறார். அவரது முதல் நடிப்பு அவரது குருவின் பிரபலமான நடன நாடகமான கூஷிர சாகர மதனல்லில் ஒரு சிறிய பாத்திரம், இது தமிழ்நாட்டின் இராஜபாளையத்தில் அரங்கேறியது. சென்னையின் சென்னை மியூசிக் அகாடமியில் உள்ள அவரது ரங்கபிரவேஷத்தில் ஒரு தொழில்முறை தனி கலைஞராக அறிமுகமானார். அவரது முதல் தனிப்பாடல் திருமதி லீலா சாம்சன் மற்றும் ஸ்ரீ சிதம்பரம் ஆகியோரால் மிகவும் பாராட்டப்பட்டது. சந்தியா இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பல தனி குச்சிப்புடி நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். அவரது சில முக்கிய நிகழ்ச்சிகள் பாரிஸின் குய்மெட் மியூசியம், வியன்னாவின் சர்வேதேச அருங்காட்சியகம் மற்றும் பார்டர்ஸ் NYC மற்றும் தென்னாப்பிரிக்காவின் இரண்டு சுற்றுப்பயணங்களையும்,  இந்தியாவில் மும்பையில் உள்ள தேசிய கலைநிகழ்ச்சி மையத்தில் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். சென்னையில் உள்ள கிருஷ்ண கான சபா, நாரத கான சபா, மற்றும் மியூசிக் அகாடமி பல நடன நாடகங்களில் சிறு வேடங்களில் தொடர்ந்து நடித்தார். 15 வயதில் சந்தியா கிருஷ்ணரின் இறுதி நடன நாடகமான கோபிகா கிருஷ்ணாவின் முக்கிய பாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். சந்தியா இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ,பல தனி குச்சிப்புடி நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.அவர் தனது சொந்த ஊரான இராஜபாளையத்தில் P.A.C. RAMASAMY RAJA பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தனது குச்சிப்புடி வீடியோக்கள் முழுவதும் 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளார். இதனால் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட குச்சிப்புடி கலைஞர் என்ற பெருமையைப் பெற்றார். அவரது மிகவும் பிரபலமான வீடியோக்களில் “கிருஷ்ண சப்தம்” , 'முதுகரேயசோதா"வின் நடிப்பு ஆகியவை அடங்கும். அவர் தனது குருவின் குச்சிப்புடியை அடுத்த தலைமுறைக்கு வழங்க நிஷ்ரிங்கலா டான்ஸ் அகாடமியை நிறுவினார்.அவர் ராம்கோ குருப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸின் ஒரு அங்கமான சந்தியா ஸ்பின்னிங் மில்ஸின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.ராம்கோ சோமன் திரு.P.R.வெங்கட்டராமராஜா, திருமதி நிர்மலா அவர்களின் புதல்வியும், மறைந்த சேர்மன் திரு. P.R.ராமசுப்பிரமணியராஜா அவர்களின் பேத்தியுமான சந்தியா ராஜு, தொழிலதிபர் ராமலிங்க ராஜு மகன் ராமராஜுவை மணந்தார்.  நம்  இந்த கௌரவத்தை பெறும்  நம் நகரின் சந்தியா ராஜு அவர்களை வாழ்த்தி ,பெருமை கொள்கிறோம்.

Aug 13, 2024

சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுக்குள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம்  3  ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டு மற்றும் தொழிற்சாலைக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் 14.08.2024 அன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கத்தில் நடைபெறுவதாக இருந்த இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நிர்வாக காரணங்களால்  20.08.2024 அன்று  நண்பகல்  12.00  மணியளவில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோர்கள், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 12, 2024

ராஜபாளையத்தில் நாளை மின் குறைதீர் முகாம்

ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள், இதர குறை களை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக.13 காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை குறைகளை கேட்டறிய இருப்பதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என ராஜபாளையம் மின் கோட்ட செயற் பொறியாளர் முத்துராஜ்  தெரிவித்துள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 17 18

AD's



More News