25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


சமையல் குறிப்பு

Oct 14, 2026

டீ ருசி அதிகரிக்க.....

டீயில் இஞ்சியை துருவி சேர்த்தால் சாறு நன்றாக இறங்கி டீ ருசி அதிகரிக்கும். கறியில் உப்பு அதிகமாக இருந்தால் ஒரு உருளைக்கிழங்கு துண்டு சேர்த்து கொதிக்க விட்டால் உப்பு குறையும். வெங்காயம் வதக்கும் போது சிறிது உப்பு சேர்த்தால் அது சீக்கிரம் மெலிதாகி நன்றாகவதங்கும். தக்காளி குழம்பில் கொஞ்சம் வெல்லம் சேர்த்தால் புளிப்பு சமநிலையாகி சுவை அதிகரிக்கும். அரிசி வேகும் போது சில துளி எண்ணெய் அல்லது நெய் சேர்த்தால் சாதம் ஒட்டாமல் தனித்தனியாக வரும்.

Oct 06, 2026

ஃப்ரிட்ஜில் வைக்க கூடாத உணவுப் பொருட்கள்.

உருளைக்கிழங்கு- ருசி மாறும். வெங்காயம்- ஈரப்பத்தால் கெட்டுப் போகும். வாழைப்பழம்  - கருப்பாக மாறும். ரொட்டி (பிரெட்) - கடினமாகி விடும். தேன்- உறைந்து விடும். தக்காளி - ருசி குறையும். முழு தர்ப்பூசணி-  வெளியே வைக்கவும் (வெட்டிய பிறகு மட்டும்' ஃபிரிட்ஜில் வைக்கலாம். பூண்டு- முளைக்கும். காபி பொடி- மணமும் ருசியும் மாறிவிடும்.

Sep 30, 2026

சாம்பார் மணம் கமகமக்க....

வடை எண்ணை உறியாமல் இருக்க வெந்த உருளைக் கிழங்கு மசியலை சேர்க்கவும்.பாயசத்திற்கு சர்க்கரையை நேரடியாகப் போடாமல் சர்க்கரையுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை நன்றாகக் கரைந்து ஒரு நிமிடம் கொதித்தபின் பாயசத்தில் சேர்த்து கொஞ்சம் கொதிக்க விட்டால் சுவை மிக நன்றாக இருக்கும்.இடலி அல்லது தோசைக்கு மாவு அரைக்கும்போது இட்லி அரிசியுடன் ஒரு பங்கு சாப்பாட்டு அரிசி சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாக இருக்கும்...உளுந்துவடைக்கு மாவு அரைக்கும்போது நீர்த்துவிட்டால் தேவைக்கேற்ப பச்சரிசி மாவைத் தூவி பிசைய  கெட்டியாகிவிடும்...சாம்பார் வைக்கும்போது கடைசியாக ஒரு துளி அளவு வெந்தயப்பொடி தூவி கலந்து 'இறக்கினால் மணம் கமகமக்கும்...

Sep 25, 2026

சாதம் வடித்த கஞ்சித் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றினால் அவை நன்றாக வளரும்.

கீரைகளை கழுவும் போது சிறிதளவு உப்பு சேர்த்த நீரில் கழுவினால் அழுக்குகள் மற்றும் சிறு பூச்சிகள் நீங்கி சுத்தமாகும். காய்கறிகளை வெட்டியவுடன் நீரில் போட்டு வைக்காமல் உடனே சமைத்தால் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படும். .பூண்டு தோல் அல்லது பூண்டு காம்பை உருளைக்கிழங்குடன் போட்டு ஸ்டோர் செய்தால் சீக்கிரம் முளை வராது.முளைவந்த உருளைக்கிழங்கை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.. பூண்டு காம்புடன் காய்ந்த வேப்பிலைகளை அரிசியில் போட்டு ஸ்டோர் செய்தால் பூச்சி, வண்டு வராது.

Sep 22, 2026

பாசிப்பயறு, கொண்டைக்கடலை செய்யும்போது தேங்காய்த் துருவலுடன் சிறிது இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.

பாசிப்பயறு, கொண்டைக்கடலை செய்யும்போது தேங்காய்த் துருவலுடன் சிறிது இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.புளிசாதம், எலுமிச்சைச்சாதம் போன்றவற்றுக்கு நிலக்கடலை வறுத்துப் போடாமல், எண்ணெயில் பொரித்து போட்டால் மொறு மொறுவென இருக்கும்.சாம்பார் தயாரிப்பதற்கு பருப்பு வேகவைக்கும்போது அதில் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்தால் சீக்கிரம் குழைந்து வரும்.பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் காகிதத்தில் சுற்றி வைத்தால் நீண்ட நாட்கள் பசுமையாக இருக்கும்.எலுமிச்சை பழத்தை சில நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் வைத்து பிழிந்தால் அதிக சாறு கிடைக்கும்.

Sep 16, 2026

கேஸ் பர்னரை பளபளப்பாக சுத்தம் செய்ய......

பர்னரை அடுப்பிலிருந்து எடுத்து, வெதுவெதுப்பான சோப்பு கலந்த' நீரில் 15-20 நிமிடம் ஊறவைக்கவும்.பிடிவாதமான அழுக்கை அகற்ற பேக்கிங் சோடா + சிறிதளவு வினிகர் சேர்த்து தேய்க்கவும்.எண்ணெய் மற்றும் கருமையை  அகற்ற எலுமிச்சை சாறு + பேக்கிங் சோடா சேர்த்து தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.பர்னாரின் துளைகளில் அடைப்பு இருந்தால், மென்மையான பிரஷ் கொண்டு சுத்தம் செய்யுங்கள். அதிகமாக குத்தி விரிவாக்க வேண்டாம்.நன்றாக தண்ணீரில் கழுவி, முழுமையாக உலர்ந்த பிறகே மீண்டும் அடுப்பில் பொருத்தவும்.பர்னர் ஈரமாக இருந்தால் தீ சரியாக எரியாது. அதனால் முழுவதும் உலர்ந்திருப்பதை உறுதி செய்யுங்கள்.வாரத்திற்கு ஒருமுறை சுத்தம், செய்தால், பர்னர் அடைப்பு ஏற்படாமல் நீண்ட நாட்கள் நன்றாக செயல்படும்.மாதத்திற்கு 2-3 முறை ஆழமாக சுத்தம் செய்தால், தீ சீராக எரிந்து எரிவாயு பயன்பாடும் சீராக இருக்கும்.சிறிய பராமரிப்பு, பெரிய பாதுகாப்பு -சுத்தமான பர்னர் சமையலை எளிதாக்கும்.

Sep 07, 2026

புது அரிசி சாதம் குழையாமல் இருக்க.....

புது அரிசி சாதம் குழையாமல் இருக்க,முதலில் சமைக்கும் அரிசியை வெந்நீர் விட்டுக் களைந்து (கழுவிக்) கொள்ள வேண்டும்.பின், களைந்த அரிசியை பானையில் போட வேண்டும்.சாதம் வடிக்கும் போது சிறிது நல்லெண்ணெய் விட்டு வடிக்கலாம்.நல்லெண்ணெய் விட்டு வடிப்பதால், சாதம் குழையாது.மேலும், சாதம் பாத்திரத்தின் அடியிலும் பிடிக்காது.

Aug 25, 2026

ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும் போது அதனுடன் சிறிது கொள்ளு சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும்.

கொத்தமல்லி துண்டுகளை வீணாக்காமல் கழுவி, காயவைத்து ரசப்பொடி அரைக்கும் போது சேர்த்தால், ரசுத்திற்கு அற்புதமான மணம் கிடைக்கும். ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும் போது அதனுடன் சிறிது கொள்ளு சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும்.மட்டன் குழம்பு வைக்கும்போது அதில் தேங்காய் சிரட்டை போட்டு வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.பீன்ஸ், முட்டைக்கோஸ்,கூட்டு செய்யும்போது தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால் பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை கலந்து கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

Aug 21, 2026

கோதுமை அல்லது ரவை உப்புமா செய்யும்போது தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்தால்...

மாவு அரைக்கும் போது சிறிதளவு வடித்த சாதம் சேர்த்து அரைத்தால், இட்லியும் தோசையும் பஞ்சு போல மென்மையாக வரும். பூரி மாவு பிசையும் போது 1 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், பூரி நல்ல நிறத்துடன் நீண்ட நேரம் உப்பி இருக்கும். மீல்மேக்கர் கிரேவியில் உருளைக்கிழங்கு சேர்த்துச் செய்தால், சுவை இன்னும் அருமையாக இருக்கும். கோதுமை அல்லது ரவை உப்புமா செய்யும்போது தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்தால், உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். பாசிப்பருப்பு, துவரம் பருப்பை லேசாக வறுத்து வேகவைத்து சாம்பார் செய்தால், சாம்பார் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க உதவும்.

Aug 18, 2026

அடைக்கு அரைக்கும் போது ஊறவைத்த பட்டாணியையும் ஒரு கைப்பிடி சேர்த்து அரைத்தால், அடை மிகவும் ருசியாக இருக்கும்.

பிரியாணி செய்ய இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் போது, அதில் 4 முந்திரி பருப்பு, 1/2 கைப்பிடி புதினா, 1 பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து போட்டு பிரியாணி செய்து பாருங்கள். சுவை கூடுதலாக கிடைக்கும். பிரியாணி செய்யும் போது தண்ணீர் பாதியும், மீதி தேங்காய் பால் மற்றும் தயிர் ஒரு கப் சேர்த்து செய்தால் பிரியாணி சுவையாக இருக்கும்.அடைக்கு அரைக்கும் போது ஊறவைத்த பட்டாணியையும் ஒரு கைப்பிடி சேர்த்து அரைத்தால், அடை மிகவும் ருசியாக இருக்கும்.கல் உப்பை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் நைசாக தூள் உப்பு கிடைக்கும்தாளிப்பு வடகம் தயார் செய்யும் போது அளவாக விளக்கெண்ணெய் சேர்த்தால் போதுமானது அதிகம் சேர்த்தால் தாளிக்கும் போது எண்ணெய் வாசனை அதிகமாக இருக்கும் (அனைத்து சமையலுக்கும் நன்றாக இருக்காது.)

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News