25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Dec 27, 2024

சைனீஸ் வெஜ் சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, வெங்காயம் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு இரண்டு பல், எண்ணெய் மற்றும் கார்ன் ப்ளார் - தலா ஒரு தேக்கரண்டி, சில்லி சாஸ் அரை தேக்கரண்டி,சோயா சாஸ்- ஒரு தேக்கரண்டி, காய்கறிகள் வேகவைத்த தண்ணீர் - ஒரு கப், மிளகுத்தூள், நூடுல்ஸ் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.வேகவைத்த நுாடுல்ஸுடன், சிறிதளவு கார்ன் ப்ளார் சேர்த்து புரட்டி, எண்ணெயில் போட்டு வறுத்துக் கொள்ளவும்.செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி,பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர், வேக வைத்த காய்கறிக் கலவையை சேர்த்து நன்றாக கிளறி, காய்கறிகள் வேகவைத்த தண்ணீர் ஊற்றி, உப்பு போடவும்.அதன் பின், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் இரண்டையும் ஊற்றி, கார்ன் ப்ளாரை சிறிதளவு நீரில் கரைத்துச் சேர்க்கவும். சூப் சேர்ந்து வரும்போது, அடுப்பை அணைத்து இறக்கவும். மிளகுத்தூளை தூவி, வறுத்த நுாடுல்ஸை சூப்பின் மீது போட்டு பரிமாறவும்.

Dec 27, 2024

பாலக் சூப்

தேவையான பொருட்கள் : 1 கப் - பாலக் கீரை ,1 - வெங்காயம் , 1/2 கப் - காரட் ( துருவியது), 1/2 டீஸ்பூன் -  இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன் - சோயா சாஸ் , சிறிதளவு - மல்லி தழை- 2 டீஸ்பூன் - வெண்ணெய்  தேவையான அளவ-மிளகுதூள்காய்கறி வேகவைத்த தண்ணீர், தேவையான அளவு - உப்பு செய்முறை: வாணலியில் வெண்ணெயை சேர்த்து சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் துருவிய காரட் , இஞ்சி - பூண்டு விழுது  சேர்த்து இதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய பாலக் சேர்த்து வேக வைக்கவும். நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து  இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Dec 27, 2024

மாதுளை ஸ்வீட்கார்ன் சூப்

தேவையானபொருட்கள் :2 கப் - மாதுளை 1/2 கப் - ஸ்வீட் கார்ன்1/2 டீஸ்பூன் -  மிளகுத்தூள் 1 டீஸ்பூன் - இஞ்சிச்சாறு தேவையான அளவு- வெண்ணெய்தேவையான அளவு - உப்பு1 டீஸ்பூன் - சோள மாவு சிறிதளவு மல்லி தழைசெய்முறை : ஸ்வீட் கார்னை வேகவைத்து மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்.மாதுளை முத்துகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும்.சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதனுடன் , இஞ்சிச்சாறு, மாதுளைச் சாறு சேர்த்துக் 5 மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின்னர் அதனுடன் ஸ்வீட்கார்ன் கரைசல் சேர்த்து மேலும் 5 - 8 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி வெண்ணெய், மிளகு தூள் மல்லிதழை தூவி பரிமாறவும்.

Dec 27, 2024

நூடுல்ஸ் வெஜ் சூப்

தேவையான பொருட்கள்:1 கப் - நறுக்கிய காய்கறிகள் (வேக வைத்தது)1/2 கப் - நூடுல்ஸ் ( வேக வைத்தது)4 கப் - காய்கறி வேக வைத்த தண்ணீர் - 1 - வெங்காயம்  தேவையான அளவு-மிளகுத்தூள்சிறிதளவு - வெங்காயத்தாள் சிறிதளவு -மல்லி தழை 2 டீஸ்பூன் - வெண்ணெய்1 டேபிள்ஸ்பூன்  - கார்ன் மாவுதேவையான அளவு - உப்புசெய்முறை: வாணலியில் வெண்ணெயை சேர்த்து  உருகியதும் நறுக்கிய பூண்டு  வெங்காயம் சேர்த்து வதக்கி... காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அதில் வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும். இதில் சோள மாவை  சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து சேர்க்கவும்.நன்கு கொதித்த பின்னர் இறக்கி, பரிமாறும் பாத்திரத்தில் ஊற்றி,மல்லி தழை,வெங்காயத்தாள், மிளகு தூள் சேர்த்துப் பரிமாறவும்.

Dec 20, 2024

முருங்கை இலை துவையல்

தேவையான பொருட்கள் -காம்பு நீக்கிய முருங்கை இலை 3 கையளவு, உளுந்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கடலைபருப்பு 1 டேபிள் ஸ்பூன், வத்தல் 6, புளி சின்ன எலுமிச்சை அளவு, பெருங்காயப் பொடி சிறிதளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் 1 டீஸ்பூன். கடுகு கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் 1 கையளவுசெய்முறை எண்ணெய் விட்டு, கடுகு பொரிந்ததும், உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சிவப்பாக வறுக்கவும், வத்தல் பெருங்காயம், சேர்த்து வதங்கியதும், தேங்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி முருங்கைக்கீரை சேர்க்கவும், 2 நிமிடம் வதக்கி, புளி, உப்பு சேர்க்கவும், நன்றாக ஆறிய உடன் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும், தண்ணீர் தேவை என்றால் சிறிது தெளித்துக் கொள்ளவும், சூடான சாதத்திற்கு சுவையான முருங்கைக்கீரை துவையல்.

Dec 20, 2024

முடக்கத்தான் கீரை துவையல்

தேவையான பொருட்கள்.-4 கப் முடக்கத்தான் கீரை,1/4கப் நல்லெண்ணை,1தேக்கரண்டி கடுகு,1தேக்கரண்டி சீரகம்,1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி|,1தேக்கரண்டி வெந்தயம்,1 மேஜைக்கரண்டி உளுந்து,1 மேஜைக்கரண்டி தனியா,½கப் கடலை பருப்பு,4பல் பூண்டு, 1/2 கப்  புதினா இலைகள்,1 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை,4 காரமிளகாய்,சிட்டிகை பெருங்காயம்,2 அங்குலம் இஞ்சி தோலுரித்தது,2 மேஜைக்கரண்டி புளி பேஸ்ட், தேவையான உப்பு செய்முறை - மிதமான நெருப்பில் ஒரு ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணையில் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் தாளிக்க பருப்புகள், மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு வறுக்க வாசனை வரும் வரை,2 நிமிடம் கீரை, புதினா, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க-5 நிமிடங்கள். மஞ்சள் பொடி சேர்க்க வதக்கலையும், புளியும் சேர்த்து பிளெண்டரில்1 கப் நீர் சேர்த்து அரைக்க. உப்பு சேர்த்து கலக்க. ருசியான முடக்கத்தான் கீரை துவையல் தயார். முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம்.

Dec 20, 2024

பிரண்டை துவையல்

தேவையான பொருட்கள்-1 கப் சுத்தம் செய்த பிரண்டை,3 பச்சை மிளகாய்,2 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு,1 டேபிள்ஸ்பூன் உளுந்து பருப்புஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி,1/4 கப் தேங்காய் துருவல்,தேவையான அளவு உப்புதாளிக்க:1டேபிள்ஸ்பூன் நல்லெண்ணை,1/4டீஸ்பூன்  கடுகு, 1/4 டீஸ்பூன் உளுந்து பருப்பு,1/4 டீஸ்பூன் கடலை பருப்பு,கறிவேப்பிலைசெய்முறை-பிரண்டையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வறுக்க தேவையான மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்வாணலியில் எண்ணெய் ஊற்றி,பருப்பு,மிளகாய் எல்லாம் சேர்ந்து நன்கு வறுத்து எடுக்கவும்.அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரண்டையை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்எல்லாம் சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு உப்பு,புளி கரைசல் சேர்த்து நன்கு அரைக்கவும்பின்னர் அரைத்த பிரண்டை துவையலை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து,கடுகு தாளித்து சேர்க்கவும்.இப்போது மிகவும் சுவையான, சத்தான பிரண்டை துவையல் சுவைக்கத்தயார்.இந்த பிரண்டை துவையல் சூடான சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சுவைக்கலாம்.

Dec 20, 2024

வல்லாரைக் கீரை துவையல்

தேவையான பொருட்கள்-2 கப் வல்லாரைக்கீரை,தேவையான அளவு எண்ணெய்,ஒரு துண்டு கட்டி பெருங்காயம்,2ஸ்பூன் உளுந்து,3 பச்சை மிளகாய், 10 சின்ன வெங்காயம்,2 துண்டு இஞ்சி,சிறிதளவு புளி, தேவையான அளவு உப்பு ,1 கப் தேங்காய்,சிறிதளவுதண்ணீர் .செய்முறை -கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், உளுந்து, பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு 10 சின்ன வெங்காயம், இரண்டு துண்டு இஞ்சி, சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளவும்.2 கப் வல்லாரைக்கீரை,தேவையான அளவு உப்பு, தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.அனைத்தையும் நன்கு வதக்கி ஆறவிடவும் பிறகு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.சுவையான ஆரோக்கியமான வல்லாரைக் கீரை துவையல் ரெடி..

Dec 20, 2024

கருணைக்கிழங்கு தோல் துவையல்

தேவையான பொருட்கள் -1/4 கிலோகருணைக்கிழங்கு, 2 பெரியவெங்காயம்,2 தக்காளி,6 வரமிளகாய்,1/4 கப் துருவிய தேங்காய்,1கைப்பிடி கொத்தமல்லி தழை,2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு,1/4 டீஸ்பூன் கடுகு உளுந்து,2 கொத்து கருவேப்பிலை,தேவையான அளவு உப்பு,தேவையான அளவு எண்ணெய் செய்முறை-முதலில் கருணைக்கிழங்கை நன்றாக கழுவி குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும் பிறகு அதன் தோலை மட்டும் எடுத்துக் கொள்ளவும்பிறகு ஒரு கடாயில்3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும் பிறகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு எடுத்து வைத்த கருணைக் கிழங்கின் தோல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கிய பிறகு தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கவும்பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக வதக்கி5 நிமிடங்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.சுவையான ஆரோக்கியமான கருணைக்கிழங்கு தோல் துவையல் தயார்

Dec 20, 2024

கருஞ்சீரகத்தில் துவையல்

தேவையானபொருட்கள்கருஞ்சீரகம் – கால் கப்(இதை தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)பச்சை மிளகாய் – 2வர மிளகாய் – 4எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்பூண்டு – 10 பல்பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)கல் உப்பு – தேவையான அளவுசெய்முறைஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதை எடுத்து ஆறவைக்கவேண்டும்.அதே கடாயில் இரண்டு மிளகாய்களையும் ஒன்றாக சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.பின்னர் அனைத்தும் ஆறியபின் மிக்ஸி ஜாரில் அல்லது கையில் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.கடைசியாக வறுதத் கருஞ்சீரகத்தை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் மையாக அரைத்து விடக்கூடாது.இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.கருஞ்சீரகம் பல்வேறு நன்மைகள் நிறைந்து என்பதால் இதைஅவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது

1 2 ... 51 52 53 54 55 56 57 ... 72 73

AD's



More News