தேவையான பொருட்கள் - கடலை மாவு, சர்க்கரை, நெய், தண்ணீர் தலா ஒரு கப், மில்க்மெய்டு - அரை டின், கேசரி கலர் அரை டீஸ்பூன், வறுத்த பாதம், முந்திரி துண்டுகள் ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை: அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில்கடலை மாவைக் கொட்டி, வாசனை வரும்வரை வறுக்கவும். இதில் சிறிது சிறிதாக தண்ணீரைக் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். மில்க்மெய்ட், நெய், கலர் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி, பாதாம், முந்திரி தூவி இறக்கவும்.
தேவையானவை பொருட்கள் - கேரட் துருவல்,பீட்ரூட் துருவல், பரங்கிக்காய் துருவல், தேங்காய் துருவல் -தலா அரை கப், கோவா - கால் கப், சர்க்கரை - 2 கப் நெய் - கால் கப், பாதாம், முந்திரி துண்டுகள் -சிறிதளவு.செய்முறை: அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில் நெய்யை விட்டு, தேங்காய் துருவலை போட்டு வறுக்கவும். காய்கறி துருவலைகளைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பாலை ஊற்றி வேக விடவும். கலவை நன்றாக வெந்ததும் கோவா சேர்த்து, சர்க்கரையைத் தூவி கிளறவும். இந்த கலவை ஒட்டாமல் அல்வா பதத்தில் வந்ததும் ஒரு முறை கிளறி இறக்கவும். பாதம். முந்திரி தூவி பரிமாறவும்.
தேவையான பொருட்கள் - இஞ்சி துருவல் - அரை கப். கேரட் துருவல், சர்க்கரை - தலா ஒரு கப், பால் ஒன்றரை கப். நெய் - அரை கப், கலர் - கால் டீஸ்பூன்.செய்முறை: கேரட், இஞ்சியுடன் பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதை அடுப்பில் வைத்துக் கிளறவும். கலவை வெந்து கொதித்துக் கொண்டிருக்கும் போது சர்க்கரை, நெய், கலர் சேர்த்துக் கிளறி கெட்டியாக ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
தேவையான பொருட்கள் :- பாசுமதி அரிசி - 2 கப். பட்டாணி - அரை கப்,பெரிய வெங்காயம் - 2. எலுமிச்சம்பழச்சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு. தாளிக்க: பட்டை - 1. லவங்கம் -2, ஏலக்காய் -2, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.அரைக்க : பச்சை மிளகாய் - 4. புதினா - ஒரு கட்டு, மல்லி - அரை கட்டு, தேங்காய் துருவல் - அரை கப், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு - 5 பல்.செய்முறை: ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து வதக்கி அரைத்தெடுங்கள். பாசுமதி அரிசியை ஊறவைத்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து வெங்காயம் சேர்த்துக் கிளறுங்கள். சிறிது உப்பையும் போட்டு நன்கு வதக்குங்கள். பிறகு, பட்டாணியையும் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கிளறுங்கள். பச்சை வாசனை போக வதங்கியதும், உப்பு. எலுமிச்சம்பழச் சாறு, வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி, தீயை குறைத்து மூடி போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறுங்கள். பீஸ் புலாவ் தயார்.
தேவையான பொருட்கள் :- பாசுமதி அரிசி - 2 கப். பெரிய வெங்காயம் -3,தக்காளி -5, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் -2. தேங்காய்ப்பால் அரை கப் (அல்லது) ஆவின் பால் - அரை கப், உப்பு தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி. தாளிக்க: எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், நெய் -ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை லவங்கம், ஏலக்காய் - தலா 1.செய்முறை : அரிசியைக் கழுவி. இரண்டரை கப் தண்ணீரில்ஊறவையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து. தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாயை சேருங்கள். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுது, புதினா, மல்லித்தழை, தக்காளி. மிளகாய்தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, தேங்காய்ப்பால், உப்பு, ஊறவைத்த அரிசி (தண்ணீருடன்) ஆகிய எல்லாவற்றையும் கலந்து, மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும், 'ஸிம்'மில் வைத்து. ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.
தேவையான பொருட்கள் :- பாசுமதி அரசி 2 கப், முந்திரி - 10. பச்சை மிளகாய் -2, உப்பு - தேவையான அளவு. தாளிக்க : சீரகம் ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, நெய் - 4 டேபிள்ஸ்பூன்செய்முறை : பாசுமதி அரிசியை ஊற வைத்து உப்பு சேர்த்து, உதிராக வடித்து ஆறவிடுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். அடிகனமான வாணலியில் நெய்யைக் காயவைத்து, சீரகம், பட்டை தாளித்து முந்திரி, பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறுங்கள். முந்திரி சற்று நிறம் மாறியதும், வடித்த சாதம், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். விரைவாக செய்யக் கூடிய, வயிற்றுக்கு இதமான புலவு இது.
தேவையான பொருட்கள் :- பாசுமதி 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3 ,புளித்த தயிர் - கால் கப், தேங்காய்ப்பால் - அரை கப், பட்டாணி (விருப்பப்பட்டால்) - கால் கப், உப்பு தேவையான அளவு. அரைக்க: பச்சை மிளகாய் & தனியா - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு-6-8 பல், கசகசா ஒரு டீஸ்பூன், முந்திரி - 6, பட்டை-1.லவங்கம்- 1. எலக்காய் -1. புதினா ஒரு கட்டு, மல்லித்தழை அரை கட்டு, தாளிக்க: பிரிஞ்சி இலை - 2 நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை : அரிசியைக் கழுவி, தேங்காய்ப்பால். இரண்டரை கப்தண்ணீர் சேர்த்து ஊறவையுங்கள். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.குக்கரில் நெய். எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், அரைத்த விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு தக்காளி, உப்பு சேர்த்து நன்கு கிளறி தேங்காய்ப்பால், தண்ணீருடன் அரிசியைச் சேருங்கள். குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 3 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
தேவையான பொருட்கள் - பாசுமதி அரிசி 2 கப், தனியா - அரை கப், தயிர் அரை கப், உப்பு -தேவையான அளவு,பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 4, நெய் -2 டேபிள்ஸ்பூன், எண்ணெய்- ஒரு டேபிள்ஸ்பூன், அரைக்க: புதினா - அரை கட்டு, மல்லித்தழை - அரை கட்டு, பச்சை மிளகாய் 6 ,இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 5 பல், பட்டை ஒரு துண்டு. லவங்கம் - 2 ஏலக்காய் 2. செய்முறை : தனியாவை 4 கப் தண்ணீரில் வேகவையுங்கள். தனியா வெந்து, தண்ணீர் 3 கப் அளவுக்கு வந்ததும், தண்ணீரை வடித்துத் தனியே வையுங்கள். பாசுமதி அரிசியைக் கழுவி ஊற வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைஒன்றாகஅரைத்தெடுங்கள். குக்கரில் நெய். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம் சேருங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி தயிர் தனியா வேக வைத்த தண்ணீர், உப்பு சேர்த்து ஐந்து திமிடம் கொதித்ததும் அரிசி சேர்த்து நன்கு கிளறி. மூடி போட்டு ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.
தேவையான பொருட்கள் :- பாசுமதி அரிசி - 2 கப். பட்டன் காளான்- 12, பெரிய வெங்காயம் - 2, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுதூள் கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு. தாளிக்க 2: பட்டை லவங்கம், ஏலக்காய் தலா 2, எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை : காளானை இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.பாசுமதி அரிசியைக் கழுவி, 3 கப் தண்ணீரில் ஊறவையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து. பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயத்தைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள், மிளகுதூள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.பிறகு, காளானையும் சேர்த்து வதக்கி தயிரை அதோடு சேருங்கள். அத்துடன் கரம்மசாலா தூளைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதித்த பிறகு, ஊறவைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, நன்கு கிளறி மூடிவைத்து, ஒரு விசில் வந்தபிறகு, தீயைக் குறைத்து. ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள். விருந்துகளுக்கு ஏற்ற புலவு இது.
தேவையான பொருட்கள் - கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், 1 வெங்காயம், பொடியாக வெட்டியது. இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சமிளகாய் பொடியாக வெட்டியது, குடைமிளகாய் நைஸாக வெட்டியது. சேர்த்து வதக்கி விடவும், பின் நைஸாக அவித்த முட்டை கோஸ் அரை சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கி விடவும், நன்றாக சுருண்டு வந்தவுடன் இறக்கி வைக்கவும்.செய்முறை - மாவு அரை கப், கேப்பை அல்லது மைதா மாவு கால் கப்பு சோத்து நன்றாக கலந்து விடவும், இத்துடன் மாவைக் குழைத்து நடுவில் 2 முட்டை உடைத்து போட்டு முட்டையை நன்றாகக் கலந்து விட்டு, பின் 1 கப் பால் விட்டு நன்றாக கலந்து விட்டு மிக்ஸியில் போட்டு நன்றாக நைஸாக அடித்து எடுத்து ஆறிய கோஸ் கலவையை சேர்க்கவும் மல்லி இலை கொஞ்சம், சீரகம் அரை டீஸ்பூன் விட்டு நன்றாகக் கலந்து விடவும். பின் டவாவில் எண்ணெய் தடவி ஆம்லெட்டுகலாக ஊற்றி, பிரட்டி போட்டு வேக வைத்துப் பரிமாறவும். முட்டைகோஸ் ஆம்லெட் சுவையானதும், சத்தானதும் ஆன முட்டைகோஸ் ஆம்லெட் ரெடி தக்காளி சாஸ், அல்லது சில்லி சாஸ் சைட்டிஷ், சுவையாக இருக்கும்.